இன்று இந்தியா-பாகிஸ்தான்
ஒரு நாள் மட்டையடிப் போட்டியில் பாகிஸ்தான் வென்றது.
இந்திய அணி மிக மோசமான
நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தபோது,சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த மூன்று
வீரர்கள் ஓரளவுக்கு மரியாதைக்குரிய மொத்த ஓட்டத்தை அடைவதற்கு உதவினார்கள்.
மழை வந்திருந்தால்
தோற்றிருக்க வேண்டாம்!
இந்தியா பாகிஸ்தான்
பற்றிய ஒரு ஜோக்!........
சவுதி அரேபியாவில்
மது அருந்துவது குற்றம்.
ஒரு ஜெர்மானியர் ,ஒரு
பாகிஸ்தானியர்,ஒரு இந்தியர் மூவர் குடித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு முப்பது
கசையடி அளிக்க உத்தரவிடப் பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் வேண்டு வது ஒன்று செய்யப்படும்
எனச் சொல்லப்பட்டது.
ஜெர்மானியன் தன் முதுகில்
ஒரு தலையணை கட்டச் சொல்லிக் கேட்டான்.பத்து அடியில் தலையணை கிழிந்து அவன் பலமான காயத்துக்கு
ஆளானான்.
பாகிஸ்தானி தன் முதுகில் இரு தலையணை கட்டச் சொன்னான்;
பதினைந்து அடியில்
தலையணை பிய்ந்து அவன் முதுகு பிளந்தது.
மூன்றாவது இந்தியன்.,
ஷேக் சொன்னார்”எனக்கு
இந்தியர்களைப் பிடிக்கும். எனவே நீ இரண்டு வேண்டியவை கேட்கலாம்’
இந்தியன் கேட்டான்”எனக்கு
30க்குப் பதில் 50 கசையடி வேண்டும்”
ஷேக் அவன் தைரியத்தை
எண்ணி வியந்தார்..”அடுத்தது”…
”இந்தப் பாகிஸ்தான்காரரை
என் முதுகில் கட்டுங்கள்!”
இது எப்புடி இருக்கு?!
அருமை அருமை!
ReplyDeletesuper joke!
ReplyDeleteநன்றி அருணா செல்வம்
Deletehaaa haaaa...
ReplyDelete:))
Deleteநன்றி சீனி
எப்பொழுது நமது விளயாட்டு வீரர்கள் தங்களது தன்முனைப்பை (Ego) விட்டு நாட்டிற்காக விளயாடுகிறோர்களோ அன்று பெரும் வெற்றிதான் உண்மையான வெற்றியாக இருக்கும். இப்போதெல்லாம் எப்போது ‘தோனி’யை வெளியேற்றலாம் என்ற நினைப்பிலே சிலர் விளையாடுவதால் வெற்றி என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கும்.இல்லாவிடில் வருணபகவான் தான் நமது மானத்தைக் காப்பாற்ற வரவேண்டும்.
ReplyDeleteநீங்கள் தந்துள்ள ஜோக் நன்றாக இருந்தாலும், நாம் இவ்வாறு ஜோக்கைப் படித்துத்தான் மகிழ்ச்சி அடையவேண்டுமோ என்ற ஏக்கமும் வருகிறது.
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா
Deleteநன்றி
சூப்பர்.இந்தியனோட மூளையே தனி!
ReplyDelete:))
Deleteநன்றி முரளிதரன்
தோனியை தவிர மற்றவர்கள் யாரும் நன்றாகவே விளையாடவில்லை என்ன செய்வது நண்பரே!
ReplyDeleteஅவரவர்கள் நாடு வெற்றிபெறவேண்டும் என்றே நினைக்கிறோம். நேற்று பாகிஸ்தானியர்கள் மிகவும் சந்தோஷமாக கொண்டாடினார்கள்.
உண்மை ஆகாஷ்
Deleteநன்றி
என் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள் நண்பரே!
ReplyDeleteஉங்களுக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
Delete