Friday, December 21, 2012

மகனே,மகனே!ஒருதந்தையின் வருத்தம்!

உன் மூன்று வயதில் ஒரு நாள் நாம்

பூங்காவில் அமர்ந்திருந்த நேரம்

பறந்து வந்தமர்ந்ததொரு குருவி அங்கே!

இருபத்தொரு முறை கேட்டாய் மகனே நீ

அப்பா அது என்ன என்று!

இருபத்தொரு முறை சொன்னேன் நான்

குருவி குருவி அதுவென்று அன்புடன்

கோபம் வரவில்லை எனக்கு

அலுத்துக் கொள்ளவில்லை நான்

அன்பு மட்டுமே மிகுதியாகி

அணைத்தேன் உன்னை ஒவ்வொரு முறையும்

இந்த எழுபது வயதுக் கிழவனுக்கு

பார்வைக் குறைபாடு,காதும் கொஞ்சம் மந்தம்

இன்று நான்  கேட்கும் கேள்விக்கு

மூன்றாவது முறை பதில் சொல்ல

மூக்கின் மேல் வருகிறது கோபம் உனக்கு

மகன் தந்தைக்காற்றும் உதவி இதுவோ!

மகனே,மகனே!



20 comments:

  1. எவ்வளவு எளிமையா ஒரு கருத்தை சொல்லிட்டிங்க, அருமை வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. அருமையான கவிதை
    சொல்லிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. நல்ல கருத்து! எங்கேயோ கேட்ட ஞாபகம்! அருமை!

    ReplyDelete
    Replies
    1. காணொளி கவிதையாகிவிட்டது!
      நன்றி சுரேஷ்

      Delete
  4. இன்றைய உலகம் இப்படித்தான் ஓடிக்கொண்டிருக்கிறது நண்பரே...


    அர்த்தமுள்ள கவிதை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர் அவர்களே

      Delete
  5. இது ஒரு காணொளியாக வந்திருந்தது....

    சிறப்பான பகிர்வு குட்டன்.

    ReplyDelete
    Replies
    1. சுரேஷுக்கு என் பதிலைப் பாருங்கள்!
      நன்றி

      Delete
  6. ஏற்கனவே கேட்டிருந்தாலும்
    உங்கள் பாணியில் கேட்பதும் அருமையாக தான் உள்ளது குட்டன் ஐயா.

    ReplyDelete
  7. விசாரிச்சுப் பாருங்க, இதை எழுதிய தந்தை ஏதாவது முதியோர் இல்லத்தில் தங்கியிருப்பாரு.

    ReplyDelete
    Replies
    1. இன்றைய யதார்த்தம் அதுவே!
      நன்றி தாஸ்

      Delete
  8. கதையை கவிதையாய் மாற்றியிருக்கிறீர்கள். மிக நன்று!

    ReplyDelete
  9. இனிய கிறிஸ்துமஸ் + புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... மீண்டும் 2013 இல் சந்திப்போம்...MERRY CHRISTMAS AND A HAPPY NEW YEAR...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ்+புத்தாண்டு நல்வாழ்த்துகள் ரெவெரி

      Delete
  10. // மூக்கின் மேல் வருகிறது கோபம் உனக்கு

    மகன் தந்தைக்காற்றும் உதவி இதுவோ!

    மகனே,மகனே!//

    நெஞ்சைச் சுட்டதோடு,தொட்டது கவிதை!

    ReplyDelete