Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Wednesday, September 17, 2014

நின்னைச் சரணடைந்தேன்



என் நாளை பொலியச் செய்ய
       
     ஒரு அழகிய புன்னகை போதும்

என் வலிகளை மறக்கச் செய்ய
       
     ஒரு மென்மையான தொடுகை போதும்

என் பயங்களை ஓடச் செய்ய
      
     ஒரு உடல் சேரும் அணைப்பு போதும்
     (வளியிடை போகப்படாஅ முயக்கு)

என் கவலைகள் தீர்வதற்கு
      
     ஒரு ஆறுதல் வார்த்தை போதும்

எவர் தருவார் இவையெல்லாம்
        
     என் அன்பே உன்னை அன்றி!

டிஸ்கி:என்னடா ரொம்பநாளாக்காணாமப் போனவன் திரும்பி வந்திருக்கானே என திகைக்கிறீர்களா?

மதுரையில பதிவர் சந்திப்பு வருதாமில்ல!நாமளும் ஒரு பதிவர்தான்னு நெனவு படுத்தத்தேன்! 

தொடர்ந்து கொஞ்ச நாளைக்கு எழுதிக் ’கொண்டே ’போடலாம்னு இருக்கேன்!
    
       


Friday, May 17, 2013

தவறாமல் வருவேன் தாயே!

இக்கிை(!) அன்னையர் ினத்ன்று வ ஏற்றப் பட்ி ுக்கேண்டும்.எப்பியி விட்டு.லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வு!
.....................................................................



நான் எண்ணியிருந்தேன்
அன்னையின் தேவை
அவ்வளவு இல்லை
வயதான பின்னர் என!
தவறு என் எண்ணம் என
தெளிவு கொண்டேன் நான்!
வாழ்க்கையின் நாற்சந்திகளில்
முடிவுகள் எடுக்கும் நேரம்
அறிவுரை கேட்பதற்கு
அன்னை உடனில்லையே 
என நான் உணர்கிறேன்
உனக்குப் பிடித்த உணவு
நீ ரசிக்கும் இசை
இவையெல்லாம்
உன்  இராமையை
உரக்கச் சொல்லும்!
வயது ஏற ஏற
உணர்கிறேன் இவ்
உறவின் அருமை!
அம்மா!இனிமேல் நான்
மாதம் ஒரு முறையாவது
ஊருக்கு வருவேன்
உன்னைப் பார்ப்பதற்கு மட்டுமே!





Friday, December 21, 2012

மகனே,மகனே!ஒருதந்தையின் வருத்தம்!

உன் மூன்று வயதில் ஒரு நாள் நாம்

பூங்காவில் அமர்ந்திருந்த நேரம்

பறந்து வந்தமர்ந்ததொரு குருவி அங்கே!

இருபத்தொரு முறை கேட்டாய் மகனே நீ

அப்பா அது என்ன என்று!

இருபத்தொரு முறை சொன்னேன் நான்

குருவி குருவி அதுவென்று அன்புடன்

கோபம் வரவில்லை எனக்கு

அலுத்துக் கொள்ளவில்லை நான்

அன்பு மட்டுமே மிகுதியாகி

அணைத்தேன் உன்னை ஒவ்வொரு முறையும்

இந்த எழுபது வயதுக் கிழவனுக்கு

பார்வைக் குறைபாடு,காதும் கொஞ்சம் மந்தம்

இன்று நான்  கேட்கும் கேள்விக்கு

மூன்றாவது முறை பதில் சொல்ல

மூக்கின் மேல் வருகிறது கோபம் உனக்கு

மகன் தந்தைக்காற்றும் உதவி இதுவோ!

மகனே,மகனே!