இக்கவிதை(!) அன்னையர் தினத்தன்று வலை ஏற்றப் பட்டி ருக்க வேண்டும்.எப்படியோ தவறி விட்டது.லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருது!
.....................................................................
.....................................................................
நான்
எண்ணியிருந்தேன்
அன்னையின்
தேவை
அவ்வளவு
இல்லை
வயதான
பின்னர் என!
தவறு
என் எண்ணம் என
தெளிவு
கொண்டேன் நான்!
வாழ்க்கையின்
நாற்சந்திகளில்
முடிவுகள்
எடுக்கும் நேரம்
அறிவுரை
கேட்பதற்கு
அன்னை உடனில்லையே
என நான் உணர்கிறேன்
உனக்குப்
பிடித்த உணவு
நீ
ரசிக்கும் இசை
இவையெல்லாம்
உன்
இராமையை
உரக்கச்
சொல்லும்!
வயது
ஏற ஏற
உணர்கிறேன் இவ்
உறவின்
அருமை!
அம்மா!இனிமேல்
நான்
மாதம்
ஒரு முறையாவது
ஊருக்கு
வருவேன்
உன்னைப்
பார்ப்பதற்கு மட்டுமே!
அனுபவம் பேசும் அழகிய கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமை... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅம்மாவைப் பார்க்க வருகிறேன் என சொல்ல அன்னையர் தினம் தேவையில்லை.எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். எனவே அதற்காக வருத்தப்படவேண்டாம்.
ReplyDelete