Tuesday, May 28, 2013

சுவரிலிருந்து ஒரு காபி!



வெனிஸ் அருகில் ஓரிடம்.

அங்கு ஓர் உணவு விடுதி.

இரு நண்பர்கள்,ஊருக்குப் புதியவர்கள் அங்கு உணவருந்த வருகிறார்கள்.

அவர்கள் அருந்திக்கொண்டிருக்கும்போதே ஒரு தனி நபர் வருகிறார்.

பணியாளிடம் சொல்கிறார்இரண்டு காபி;ஒன்று சுவரில்

என்னவென்று புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

பணியாள் அந்த நபருக்கு ஒரு காபி கொண்டு வந்து வைக்கிறார்.

அந்த நபர் காபியைக் குடித்து விட்டு இரண்டு காபிக்குப் பணம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

அவர் சென்றவுடன் பணியாள் சுவரில் ஒரு சீட்டு ஒட்டுகிறார் அதில்ஒரு காபிஎன்று எழுதியிருக்கிறது

அதைத் தொடர்ந்து இருவர் வருகின்றனர்;மூன்று காபிக்குச் சொல்கின்றனர்.முன்போலவே இரண்டு காபியைக் குடித்து விட்டு மூன்றுக்கு பணம் கொடுத்துச் செல்கின்றனர்.மீண்டும் பணியாள் சுவரில்ஒரு காபிஎன்ற சீட்டு ஒட்டுகிறார்.

சிறிது நேரத்துக்குப் பின் ஒருவர் உள்ளே நுழைகிறார்.அவரது தோற்றம் அந்த உணவு விடுதிக்குப் பொருத்தமாஇல்லை.வறுமை நிலையில் உள்ளர் எனப் பார்த்தாலே தெரிகிறது.

அவர் சுவரைப் பார்க்கிறார் .

ஒரு இருக்கையில் அமர்ந்து ”சுவரிலிருந்து ஒரு காபி”என்று சொல்கிறார்.

பணியாள் சுவரிலிருந்து ஒரு காபி என்றை சீட்டை நீக்குகிறார்


பின் எல்லோருக்கும் கொடுக்கும் அதே பணிவுடன்,ஒரு கப் காபி கொண்டு வந்து கொடுக்கிறார்.

அந்த மனிதர் குடித்து விட்டு, பணம் ஏதும் கொடுக்காமல் ,வெளியேறுகிறார்.

 பார்த்துக் கொண்டிருந்த அவர்களுக்குப் புரிகிறது

அந்த ஊரில் வசதி குறைந்தவர்களுக்காக் மற்றவர் காட்டும் பரிவின் வெளிப்பாடு அந்தக் காபி

காபி குடித்துச் சென்ற அந்த மனிதர் போல் அநேகர் தாழ்ந்து ,குன்றி கேட்கத் தேவையின்றி,  உரிமையோடு அருந்திச் செல்ல வழி செய்யும் அந்தச் சுவர்!

அந்த ஊர் மக்களின் பண்புக்குச் சான்றாக நிற்கிறது அந்தச் சுவர்!

(இது இணையத்தில் வெகுவாகப் பகிரப்பட்ட ஒரு கதை/நிகழ்வு.இதன் மூலம் தெரியாது...நதி மூலம்,ரிஷி மூலம் போலத்தான்.எதுவாக இருந்தால் என்ன?சொல்லப்பட்ட செய்தி போற்றுதற்குரியது அல்லவா?)

26 comments:

  1. அருமையான யோசனை! நம்ம ஊரிலும் இது போல செய்தால் ஏழைகள் பயன் பெறுவர்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்.
      நன்றி சுரேஷ்

      Delete
  2. பரிவுடன் கூடிய காஃபி அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகல்நகர்க்காரரே!

      Delete
  3. கேட்பதற்க்கு உண்மையில் ஆச்சரியமாகவும் விநோதமாகவும் இருக்கிறது...

    இங்கு உணவங்களில் ஒன்றும் இல்லாத ஆள் வந்தால் விரட்டிஅடித்துதான் பார்த்திருக்கிறோம்....


    இது நல்ல வழிமுறையாகத்தான் இருக்கிறது. பணம் கெர்டுப்பதற்கு பதிலாக ஒரு உணவுப்பொருளாக கொடுப்பதால் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் திருப்தி....


    இந்த செய்தியின் மூலம் தெரியவில்லையென்றாலும் பராட்டப்படவேண்டிய ஒன்று

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞர்/ஆசிரியரே!

      Delete
  4. இப்படி உண்மையாக இருந்தால் நடந்தால்
    எவ்வளவு நன்றாக இருக்கும்
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வித்தியாசமான சிந்தனை..எந்த விளம்பரமும் இல்லாத இந்த சிறு உதவியே உண்மையான உதவி.

    ReplyDelete
    Replies
    1. ஆம்!
      நன்றி கலியபெருமாள்

      Delete
  6. இது உண்மையானால்!!!!!!!!? உலக்ம் வாழும்

    ReplyDelete
    Replies
    1. உண்மையாய் இருக்கட்டும்!
      நன்றி புலவர் ஐயா

      Delete
  7. நல்லதொரு பகிர்வு ...!

    நம்மூர்ல யும் இது மாதிரி இருந்தா சோம்பேறிங்க அதிகமாயிடமாட்டாங்களா ..?

    ReplyDelete
  8. நிச்சயம் நல்ல விஷயம் தான்..... உண்மையாக இருந்தால் நல்லது!

    இந்தியாவில் இது நடக்குமா என்பது சந்தேகம் தான்!

    ReplyDelete
  9. ஆச்சரியமான செய்தி, இவ்வாறு உண்மையானவர்கள் உலகில் உள்ளனரோ?
    நம்ம ஆளுங்க அந்த சுவரில் ஓட்டும் காப்பியிலும் ஊழல் கொண்டு வந்துடுவாங்க.

    ReplyDelete
    Replies
    1. செய்தாலும் செய்வார்கள்
      நன்றி ரூபக்ராம்

      Delete
  10. நல்ல விசயத்தைப் பகிர்ந்தீர்கள்.
    நன்றி குட்டன் ஐயா.

    ReplyDelete
  11. உண்மையோ பொய்யோ மனம் கவர்ந்த பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி டினேஷ் சுந்தர்

      Delete
  12. நல்ல பதிவு. நாம் ஊரில் இது போல இல்லை யென்றாலும் சில நிறுவனங்கள் நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தங்களுடைய பங்காக ஒரு குறிப்பிட்ட தொகையை வசதியற்றோருக்கென்று ஒதுக்கி, அதை உதவுகிறார்கள்.

    ReplyDelete
  13. அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  14. சொல்லப்பட்ட செய்தி போற்றுதற்குரியது பாராட்டுக்கள்...

    ReplyDelete