Thursday, May 23, 2013

கண்ணாடியில் தெரிவதெல்லாம் நானா?!



ஒரு கண்ணாடியில் என் பிம்பம் கண்டேன்

இத்தனை நாளாய் பார்த்துப் பழகிய உருவம்!

இதோ இன்னொரு கண்ணாடி

என்ன இது ,யார் இது

 உடல் பருத்து,தலை சிறுத்து...

மற்றோர் கண்ணாடி

ஓ!நெட்டையாய்,குச்சி போல்!

கண்ணாடிகள் என் உருவத்தை
உன்மையாய் மாற்றுமா!

ஒரு கண்ணாடியில் அழகாய்த்  தோன்ற
அதற்கெனப் பெருமிதம் கொள்வதா?

மற்றொன்று என்னை அழகின்றிக்காட்ட
அதற்காக அழுது புலம்புவதா?

வழமையாய்ப் பார்க்கும் ஆடியிலும்
கீறல் விழுந்தால் பிம்பம் சிதையுமே!

பிம்பங்கள் நானல்ல!

சிலர் புகழ்வதால்,பெருமைப்படவா

சிலர் இகழ்வதால் குன்றிப் போகவா!

இவை எதுவுமே நானில்லை!

என்னை நான் அறிய

என்னை நான் பார்க்க

மனமென்னும் கண்ணாடி

அழுக்கற்று,பழுதற்று இருக்க வேண்டும்!

அழுக்காறு, அவா, வெகுளி,இன்னாச் சொல்

இவையின்றி நிர்மலமாய் இருத்தல் வேண்டும்

அனைத்து உயிர்களிடத்தும்

அன்பு வேண்டும்,நிறைந்த அறம் வேண்டும்

என் உருவம் நான் நானாகத் தெரியும்!

28 comments:

  1. வலி அதிகமோ? நம் பிம்பம் மட்டுமல்ல அடுத்தவர் பிம்பமும் அப்படிதான் தெரியும்.- திரு

    ReplyDelete
    Replies
    1. நல்லது சொல்ல வலி வர வேண்டுமா என்ன?
      நன்றி திரு

      Delete
  2. வாழ்க்கைப் பாடம் உரைக்கும் அருமையான படைப்பு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சுரேஷ்

      Delete
  3. //சிலர் புகழ்வதால்,பெருமைப்படவா
    சிலர் இகழ்வதால் குன்றிப் போகவா!//


    நிச்சயம் இல்லை. சரியாய் சொன்னீர்கள்.

    ReplyDelete
  4. Replies
    1. நல்லது சொல்ல ஏதாவது ஆகணுமா என்ன?!
      நன்றி முரளி சார்

      Delete
  5. இயற்பியலில் படித்திருக்கிறேன்..கண்ணாடியில் தெரிவதெல்லாம் மாயபிம்பமே..கண்ணால் காண்பதும் பொய்யே, கண்ணாடியில் காண்பதும் பொய்யே..அருமையான விளக்கம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலியபெருமாள் அவர்களே

      Delete
  6. நாம் நாமாக இருந்துவிட்டால் எல்லா இடங்களிலும் நாம் நாமாகவே தெரிவோம்....

    ReplyDelete
  7. நல்லவர்களாகவும் இருப்போம்!
    நன்றி

    ReplyDelete
  8. (அறிந்தேன்) அதனால் - புரிகிறது...

    ReplyDelete
    Replies
    1. சம்பந்தம் இல்லை!
      நன்றி தனபாலன்

      Delete
  9. மனதில் அழுக்கு இருக்கும் வரை எல்லாம் அப்படித்தான்....

    கண்ணாடியில் தன் நிஜ உருவத்தைக் காண்பவர் சிலரே....

    நன்றி..

    ReplyDelete
  10. ''..என்னை நான் பார்க்க
    மனமென்னும் கண்ணாடி
    அழுக்கற்று,பழுதற்று இருக்க வேண்டும்!
    அழுக்காறு, அவா, வெகுளி,இன்னாச் சொல்
    இவையின்றி நிர்மலமாய் இருத்தல் வேண்டும்...''' unmai...
    nalla karuththu...
    Eniya vaalththu.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவைக்கவி அவர்களே

      Delete
  11. ஆஹா , நாதஸ்வரம் சீரியல் கடந்தவார எபிசோடுகள் அப்படியே கவிதை வடிவுல செதுக்கிடீங்க தலைவா...எல்லாத்துக்கும் பெரிய மனசு வேணும் , வாழ்துக்கள் உயர்வான எண்ணம் உங்கள் முதிர்ச்சியை காட்டுகிறது ...ஆனால் வயதாகியும் சிலர் போடும் ஆட்டம் , அவர்களுக்கு நரைதிருப்பது முடி மட்டுமே

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!நான் தொடர்கள் பார்ப்பதில்லை!
      தங்கள் வாழ்த்துக்கு நன்றி இளையதாசன்

      Delete
  12. என்னை நான் அறிய

    என்னை நான் பார்க்க

    மனமென்னும் கண்ணாடி

    அழுக்கற்று,பழுதற்று இருக்க வேண்டும்!

    பிடித்த வரிகள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

      Delete
  13. அருமையான சிந்தனை.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  14. அருமையான பகிர்வு.
    இரசித்துப் படித்தேன் குட்டன் ஐயா.

    ReplyDelete
  15. குட்டன் கவிதை அருமை. "மனமென்னும் கண்ணாடி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற பொருள் அருமை".

    ReplyDelete
  16. நன்றி கும்மாச்சி

    ReplyDelete