Wednesday, May 1, 2013

’தல’யுடனான என் அனுபவங்கள்



இன்று ’தல’ பிறந்தநாள்.

’தல’ என்றால் யார் என்று அனைவருக்கும் தெரியும்.

தமிழ்த் திரையின் ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித்!

இந்த வாரக் குமுதம் ’தல’ சிறப்பிதழாக வெளி வந்திருக்கிறது.

திரையுலகைச் சேர்ந்த சிலர் அஜித் பற்றிய தங்கள் கருத்தைப் பகிர்ந்துள்ளனர்.

அதிலிருந்து சில துளிகள் இங்கே!............

“தல இருக்கற இடம்னா அது கலகலதான்”...வெங்கட் பிரபு

“மரியாதை தெரிஞ்சவர்.வீட்டுக்குப் போனோம்னா வாசலுக்கு வந்து வரவேற்பார்.அவர் கையாலேயே தண்ணீரா இருந்தாலும் காப்பியா இருந்தாலும் கொண்டு வந்து கொடுப்பார். அப்பா(சிவாஜி) தவறினசேதி தெரிஞ்சதும் குலுமணாலியில் இருந்து சாட்டர்டு ஃபிளைட்டுல அஜித்தும் ஷாலினியும் வந்துட்டாங்க.தனி விமானம் மூலம் வந்து சேர்ந்த அவர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் எப்படி நன்றிசொல்றது?”...இளைய திலகம்

”பெண்களை மிகவும் உயர்வாக மதிப்பவர்.அஜித் சிறந்த மனிதர்.அஜித்தைப் பற்றிச் சரியாச் சொல்லணும்னா ஷாலினி ரொம்பக் குடுத்து வச்சவங்க”.......நயன்தாரா

”என்னால் என் ஆயுள் உள்ளவரை மறக்க முடியாதவர் அஜித்”.....எஸ்.ஜே.சூர்யா

”நம்பிக்கை,விடாமுயற்சி,பயமின்மைஇவை மூன்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு அரைச்சா கிடைக்கும்மொத்த உருவம்தான் தல அஜித்குமார். அநியாயத்துக்கு  நேர்மையான வேற்றுக்கிரக ஆள்”.....விவேக்

“முதுகின் பின்னே இவர் பேசார்
விமர்சன அம்பு இவர் வீசார்
நிறைகுடம் இவரது பேரோ-அட
நிஜத்திலும் இவர் ஹீரோ.”.............கவிஞர் இளையகம்பன்

”அஜித் என்றால் மனிதம் எனச் சொல்வேன்”........தங்கர் பச்சன்

இவற்றுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லையே என்கிறீர்களா?

இதோ......

ப்ரொஃபைல் படத்தில் பார்க்கிறீர்களே ,என் ’தல’யே ஒரு சைஸ்தான்!

ஆனால் சிறு வயதில் ’தல’முடி அதிகம் இருக்கும்.அடர்த்தியான முடி.

மாதம் ஒரு ஒறை வெட்டியாக வேண்டும்!அம்மா சொல்வாங்க”காடு மாதிரி வளந்துடுச்சு!”


அப்போதெல்லாம் இடது புறம் வகிடு எடுத்துத் ’தல’ சீவி வந்தேன்.

பெரியவனானதும், காற்றில் ’தல’ கலைந்து போய் மீண்டும் மீண்டும் வாரச் சிரமமாக இருந்ததால் குட்டையாக வெட்டி அப்படியே தூக்கி வார ஆரம்பித்தேன் ’தல’ முடியை.

என் ’தல’யில் சிலகாலம் அதிகப் பொடுகுத் தொந்தரவும் இருந்தது.

’தல’வலியும் அடிக்கடி வந்து தொந்தரவு தரும்.

மருந்து சாப்பிட்டதில்; சரியாகி விட்டது!

இவையே ’தல’யுடனான என் அனுபவங்கள்!!

7 comments:

  1. தலைப்பை ‘தல’ புராணம் என தந்திருக்கலாம்! எல்லாம் சொன்னீர்கள். இப்போது தலையில் முடி இருக்கிறதா என சொல்லவில்லையே!

    ReplyDelete
  2. ஹா... ஹா... நல்ல தல அனுபவம்...

    தல - வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தல பற்றிய தகவல்களும் உங்கள் தலை பற்றிய தகவல்களும் சிறப்பு! என தலையும் சிறுவயதில் அடர்த்தியாக முடி இருந்து இப்போது கொட்டிவிட்டது ஒரு ஒற்றுமை! நன்றி!

    ReplyDelete
  4. 'தல'யை நல்லா மிக்ஸ் செய்து உள்ளீர்

    ReplyDelete
  5. எப்புடீங்க.... இப்புடீ...
    புல்லரிக்குது போங்க.
    “தல“க்கு மேலே ஒன்னும் இல்லாதவங்க
    இப்படித்தான் யோசிப்பார்களோ...

    இரசித்தேன் குட்டன் ஐயா.

    ReplyDelete
  6. தல.... நீங்க எங்கேயோ போயிட்டீங்க! :)

    ReplyDelete