அவள் உணரவில்லை
அவள் அழகியென்பதை!
அவள் நடக்கும்
விதத்தில் ,அவள் இனிய பேச்சில்,
சிரிக்கையில்
சற்றே தலை சாய்க்கும் பாணியில்
அவள் உணரவில்லை
அவள் அழகியென்பதை!
அவள் அழகு
உடல் சார்ந்தது மட்டுமல்ல
உளம் சார்ந்ததுமாகும்
இதயத்தில்
அன்பும் ,கண்களில் கருணையும்
சொல்லில்
பரிவும் ,செயலில் கனிவும்
அவள் உணரவில்லை
அவள் அழகியென்பதை!
நான் உணர்ந்திருக்கிறேன்;வேறு
சிலரும் கூட
கடந்து
செல்லும் அவளை,வியந்து பார்ப்பவர்
எது நம்மை
ஈர்க்கிறது என்று சொல்லத்தெரியாமல்!
நீ ஒரு
பேரழகி என உரக்கக் கூவ எண்ணுகிறேன்
அப்போதாவது
அவளுக்குப் புரிகிறதா எனப் பார்க்க
அவள் உணரவில்லை
அவள் அழகியென்பதை
அவளுக்குத்
தெரியவில்லை அவளின் தனித்தன்மை!
உடையில்
ஒப்பனையில் அணிகலனில் ஒட்டகமும் அழகுதான்!
அதுவல்ல;உள்ளிருந்து
வருவதே உண்மை அழகு!
அவளுக்கு
அது புரியவில்லை
அவள்
உணரவில்லை அவள் அழகியென்பதை!
உலகையே
அவளுக்காகக் கொடுக்க
எனக்காக
மட்டுமே அவள் புன்னகைக்க
தன்
உள்ளழகை உணர்ந்து அவள் மனம் திறக்க
காத்திருக்கிறேன்
நான்!
ஒப்பனை களைந்து அணிகலன் ஏதுமின்றி
உள்ளத்தழகு முகத்தில் மினுமினுக்க
சுற்றிப்போட்டுக் கொண்ட வளையம் தகர்த்து
வெளியே வருவாயா,உன்னைத் தருவாயா,
என் அன்பைப் பெறுவாயா அழகியே சொல் !
முடிவு வரிகள் வாசிக்க முடியவில்லை... (Font மாறி உள்ளது...) அதனால்...
ReplyDelete/// ஒப்பனை களைந்து அணிகலன் ஏதுமின்றி
உள்ளத்தழகு முகத்தில் மினுமினுக்க
சுற்றிப்போட்டுக் கொண்ட வளையம் தகர்த்து
வெளியே வருவாயா,உன்னைத் தருவாயா,
என் அன்பைப் பெறுவாயா அழகியே சொல் ! ///
அருமையான வரிகள்... வாழ்த்துக்கள்...
எழுத்துரு மாற்றி விட்டேன்!
Deleteநன்றி தனா!
அருமை அருமை நண்பரே வாழ்த்துக்கள் ....:)
ReplyDeletehttp://www.onlytamil.in/
என்ன விஷயம். சமீபகாலமாக பதிவுகள் எல்லாம் காதல் பற்றியதாகவே இருக்கின்றன?
ReplyDeleteகாதல் இன்றி வாழ்க்கை இல்லை
Deleteவருகைக்கு நன்றி
//உடையில் ஒப்பனையில் அணிகலனில் ஒட்டகமும் அழகுதான்!// இதை உணர்த்துவதற்கு தான் உமது முந்தைய பதிவா... உம்மை எண்ணி வியக்கிறேன் தல
ReplyDeleteஎன்ன கூர்ந்த கவனிப்பு!
Deleteமிக்க நன்றி சீனு!
அருமையான வரிகள். குட்டன் காதல் வசமோ?
ReplyDeleteமுன்பு!
Deleteவருகைக்கு நன்றி
லைலா அழகியல்ல என்று அனைவரும் சொல்லும் பொழுது
ReplyDelete“மஞ்சுனு கண்களால் லைலாவைப் பாருங்கள்“ என்று
மஞ்சுனு சொன்னானாம்...
லைலா அவனுக்கு மட்டும் அழகியாகத் தெரிந்தாள்.
உங்கள் கவிதை அந்தப் பாணியில்
அழகாக உள்ளது குட்டன் ஐயா.
அழகாகச் சொன்னீர்கள் அருணா
Deleteவருகைக்கு நன்றி
nallaa irukku ..!
ReplyDeleteஅருமை நண்பரே.... வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி
ReplyDeleteவருகைக்கு நன்றி
ReplyDeleteவாழ்கையில் மாற்றமும் வருவதுண்டோ?
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteஅருமை அருமை
ReplyDelete