மைல்சாமியைக் கும்பிட்ட பின்,அருகில் இருந்த மண்டபத்தில்
அமர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தோம்.
கொரிப்பதற்குப் பாட்டி தயார் செய்து கொண்டு வந்திருந்த சேவு வேறு.
சிறிது நேரம் போனதும் ,பாட்டி புறப்படலாம் என்று சொன்னதும் எல்லோரும் புறப்பட்டோம்.
கொஞ்சம் தூரம் நடந்ததும்,வரும்போதே எங்களைக் கவர்ந்த
ஒரு மாந்தோப்பு வந்தது.
பாட்டியிடம் உள்ளே சென்று பார்க்கலாமா எனக் கேட்டோம்.
பாட்டியும் நம்ம பெரியசாமி தோப்புதான் ,வாங்க போகலாம் என்று சொல்ல,அனைவரும் தோப்புக்குள் நுழைந்தோம்.
அங்கு ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த தோப்புக்காரர்”வாங்க பெரியம்மா, நல்லாருக் கீங்களா”என்று கேட்டு விட்டு,எங்களைப் பார்த்து ”பேரப்பிள்ளைகளா?’ எனக் கேட்டார்.
பாட்டியும்”ஆமாம்;லீவுக்கு வந்திருக்காங்க.பொழுது போகலைன்னாங்க.அதான்,கொ.பட்டி போயிட்டு வரோம்.தோப்பைச் சுத்திப் பார்க்கணும்னாங்க;அதான்” என்றார்.
பாக்கட்டும் என்று அவர் சொல்லி விட்டு ஒரு வேலையாளிடம் ”பழனி!அஞ்சாறு அணிக்கீறிப் பழமாப் பறிச்சுப் பிள்ளைகளுக்குக் கொடு” என்றார்
நாங்கள் தோப்பைச் சுற்றிவந்தோம்.அருகில் தொங்கிய சில மாம்பழங்களைத் திருட்டுத் தனமாகப் பறித்து இட்லி இருந்த பாத்திரத்தில் போட்டுக் கொண்டோம்.
ஒரு சுற்று சுற்றி வந்த பின் அவரைக் கேட்டேன்”இது என்ன மாம்பழம்?ருமானியா?” என்று
அவர் சொன்னார்”இல்லை தம்பி.இது பாலாமணி” .
எங்களுக்குச் சிரிப்பு வந்தது.ஏனெனில் என் அக்காவின் வகுப்பாசிரியை பெயர் அதுதான்!
(பின்னாளில் அவரை மாம்பழம் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்!)
பாட்டி அவரிடம் இங்கேயே உக்காந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறோம் என்று சொல்லி விட்டு அவரையும் சாப்பிடக் கூப்பிட்டார்.
அவர் மறுக்கவே நாங்கள்,புளி,தயிர் சாதங்களைச் சாப்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.
சாப்பிட்ட பின் நடப்பது சிரமமாக இருந்தது.
அந்தப்பக்கமாக வந்த ஒரு மாட்டு வண்டியில் ஏறிப் போகலாம் என்று நாங்கள் சொல்ல பாட்டியும் வண்டிக்காரனிடம் பேசினார்.
இதுதான் நாங்கள் ஏறிப்போன மாட்டுவண்டி
நாங்கள் வண்டியில் ஏறி சௌக்கியமாக ஊர் வந்து சேர்ந்தோம்!
டிஸ்கி:இந்தப் பயணம் பற்றிய மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் உண்மைகள் கீழே!
சில
நாட்களாகவே மனத்தில் ஒரு எண்ணம்;ஆசை.
பல
பிரபல பதிவர்கள் பயணக்கட்டுரை எழுதுவதைப் பார்த்து எழுந்த ஆசை.
ஆசை
இருக்குத் தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்று ஒரு பழமொழி
சொல்வார்கள்.
அவர்களெல்லாம்
பயணம் போகிறார்கள்,கையில் கேமிராவை வைத்துக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள்;பதிவு
போடுகிறார்கள்.
நானோ
பயணம் ஏதும் போவதில்லை;போனாலும் ஒரு அரைநாள்,ஒரு நாள் பயணம்தான்.
அதிலும்
படம் எடுக்க என்னிடம் கேமிரா கிடையாது.
என்
கைபேசியிலும் கேமிரா,நீலப்பல்,பச்சைப்பல் இந்த மாதிரி விசேடங்கள் எதுவும் கிடையாது.
சாதாரண
அடிப்படைக் கை பேசி!
என்ன
செய்வது?
யோசித்தேன்.
சிறு
வயதில் கிராமத்தில் பாட்டியுடன் சென்ற ஒரு பயணம் நினைவுக்கு வந்தது.
எங்கோ
ஒரு பட்டிக்குப் போனோம்,வழியில் ஒரு மாந்தோப்பில் நுழைந்தோம் என்பதைத் தவிர
வேறெதுவும் நினைவில்லை.
எனவே
அந்தக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு,கற்பனைச் சரக்கைச் சேர்த்தேன்.
கட்டுரை
பிறந்தது.
ஆனால்
படங்கள் இன்றி பதிவு சுவாரஸ்யமாக இருக்காதே?!
பதிவில்
படம் சேர்க்க வேண்டிய இடங்களை முதலில் தீர்மானித்தேன்.—கிராமத்துச் சாலை, இட்லி
,ஆறு,மாந்தோப்பு,மாம்பழம்,கட்டைவண்டி ஆகியவை சேர்க்கலாம் என முடிவு செய்தேன்.
இணையத்தில்
படங்களைத் தேடிப் பிடித்தேன்.
பதிவு
தயார்!
இதுதான்
பதிவு பிறந்த கதை!
இப்படிக்
கற்பனையான ஒரு பயணத்தைப் பற்றி எழுதி ஏமாற்றியதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்!
நீங்கள்
தரும் தண்டனையை ஏற்கத் தயாராக உள்ளேன்!
மைல்சாமியே
போற்றி!
(மீள் பதிவு முடிந்தது)
மீள் பதிவு முடிந்ததா...? மறுபடியும் வராமல் இருந்தால் சரி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமறுபடியும் வேறு ஏதாவது வரலாம்!
Deleteநன்றி
கற்பனை பயணம் என்று சொல்லியிருக்கிறீர்கள். நீங்கள் சிறு வயதில் போன பயணம் பற்றி எழுதும்போது அது எப்படி கற்பனை ஆகும்?
ReplyDeleteபழைய கள்ளை புதிய மொந்தையில் தந்திருக்கிறீர்கள்!.இருப்பினும் சுவை குன்றவில்லை.
பாத்தீங்களா நெனச்ச மாதிரியே ஏமாத்திப்புட்டிங்க . சரி விடுங்க .. சூப்பரா ஒரு பயணம் போயிடலாம் .
ReplyDeleteபோயிடுவோம்!
Deleteநன்றி
உங்க நம்பர் குடுங்க... அடுத்து நான் டிரிப்போகு ம்போது உங்களையும் கூட்டிட்டுப் போறேன்..
ReplyDeleteஇப்படி யார் சொல்லப்போறாங்க?!
Deleteநன்றி
பயணம் சூப்பர் தான் மீள்பதிவு என்றாலும்!
ReplyDeleteநன்றி தனிமரம்
Deleteஇந்த அனுபவம் எல்லோருக்குமே பிடிக்கும் .கிராமத்து பயணம் எப்போதும் மகிழ்ச்சியான சொந்தங்களோடு இருக்கும்
ReplyDeleteநன்றி கவிஞர் அவர்களே
Deleteம்ம்ம்... நல்லாத் தான் இருக்கு நீங்க போன பயணம்....
ReplyDeleteவிரைவில் ஒரு பயணம் சென்றிட வாழ்த்துகள்....
நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteரசனையான பயணம்தான்.
ReplyDeleteவயிறு நிறைய மாங்காய் சாப்பிட்டோம்.:))) மாந்தோப்பை பார்த்ததே வெயிலுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது.