Saturday, April 20, 2013

வரவேண்டுமோடி!



பெண்ணே!
நள்ளிரவில் பயமின்றி
நகை பல உடலில் பூட்டி
நங்கை ஒருத்தி சென்றால்
நன்னாளாம் சுதந்திரம் அன்றே
என்றுரைத்தார் அண்ணல் காந்தி!

அந்நாள்
என்றுதான் வரு மோடி?!

கண்ணா!
பூவலகில்
நன்மை குறைந்து
தீமை ஓங்கினால்
நல்லவரைக் காத்து
தீயவரை அழித்து
அறத்தை நிலை நாட்ட
அவசியம் வருவேனென்றாய்!

இன்று நீ கண்டிப்பாய்
வர வேண்டு மோடி!  (வேண்டும்+ஓடி)


அம்மா பராசக்தி!
அன்புடன் அருள் புரிவாய்
சூலத்தைக் கையிலேந்தி
சூழ்ந்து வரும் இருள் நீக்கி
ஒளி வெள்ளம் உலகில் பாய

வந்திட வேண்டு மோடி!

17 comments:

  1. இது ஏதோ நரேந்திர மோடியை பிரதமராக்கும் முயற்சி போலிருக்கிறதே...

    ReplyDelete
  2. நல்ல பொருள் பொதிந்த கவிதை. ஒவ்வொரு பத்தி முடிவிலும் மோடி என்று வருவதை, குழப்பத்தை தவிர்க்க கூட்டுச்சொற்களை பிரித்துக் கொடுத்ததின் மூலம் நீங்கள் சொல்வது ‘அந்த’ மோடி அல்ல என்று புரிய வைத்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பேரைக்கேட்டாலே சும்மா அதிருதில்ல!
      வருகைக்கு நன்றி

      Delete
  3. நல்ல கவிதை.

    ஓடி - மோடி ரசித்தேன்!

    ReplyDelete
  4. மோடி எனும் வார்த்தை அழுத்திச்சொல்வது போல இருக்கு. மற்றபடி சிறப்பு.

    ReplyDelete
  5. வந்தால் சரி! வந்ததாக வரலாறு இல்லையே!

    ReplyDelete
  6. நல்ல கவிதை.
    அனைத்துத் தெய்வங்களும் வந்தாலும் ஒளி வெள்ளம் வருமா தெரியவில்லை.

    ReplyDelete
  7. வரட்டும்... வரட்டும்... ஓடி!

    ReplyDelete
    Replies
    1. நன்று!
      வருகைக்கு நன்றி

      Delete
  8. வரவேண்டும் உங்களுக்கு அருள் தரவேண்டும்

    ReplyDelete