Thursday, April 11, 2013

என்ன ஆணவம்?!




தன்னம்பிக்கைக்கும்,தன்முனைப்புக்கும்(ஆணவம்)  இடையே ஒரு மயிரிழையே இடைவெளி இருக்கிறது.

சில நேரங்களில் நம் குழப்பத்தில் நாம் சரியான பாதையில் செல்கிறோமா அல்லது ஆணவத்தைத்தன்னம்பிக்கைஎனஎண்ணிச்செயல்படுகிறோமாஎனத்தெரிவதில்லை. தன்னம்பிக்கை,தன்முனைப்பாக மாறி விட்டால் ,வெற்றியும் தோல்வியாகி விடும் .இதில் மிகக்கவனமாக இருக்க வேண்டும்.

தன்னைம்பிக்கையையும் தன்முனைப்பையும் வேறுபடுத்திப் பார்ப்பதெப்படி?

தன்னம்பிக்கையுள்ள மனிதன் ஒரு செயலைத் தன்னால் செய்யமுடியும் என்று சொல்லும் அதே நேரத்தில் மற்றவர்களாலும் அதைச் செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொள்வான்.
ஆனால் தன்முனைப்புள்ளவனோ அச்செயலைத் தன்னால் மட்டுமே செய்ய முடியும் மற்றவர்களால் இயலாது என்பான்

தன்னம்பிகையுள்ளவர்கள்,மற்றவர்களின் நம்பிக்கையை வளரச் செய்து அவர்கள் வாழ்வில் முன்னேற உதவுவார்கள்;
ஆனால் தன்முனைப்புள்ளவர்களோ அவர்களின் அவநம்பிக்கையை வளர்த்து அவர்கள் முன்னேற்றத்தைத் தடுப்பர்.

தன்னம்பிக்கை மனிதன் மற்றவர்களை கவர்கிறான்.அவனுடன் இருக்கும்போது மற்றவர்கள் உற்சாகமாகவும் ,நம்பிக்கையுடனும் இருக்கிறார்கள்.தன்முனைப்புள்ளவனை விட்டு மற்றவர்கள் விலகி இருக்க எண்ணுகிறார்கள்,அவன் தற்பெருமை காரணமாக.

தன்னம்பிக்கையுள்ளவன் மற்றவர்களின் வெற்றியைப் பாராட்டி அவர்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்கிறான்;தன்முனைப்புள்ளவன்,அவர்களைகண்டு பொறாமைப்படுகிறான்; இழிவாகப் பேசுகிறான்;

தன்னம்பிக்கையுள்ளவனைஎல்லோரும்விரும்புகிறார்கள்,மதிக்கிறார்கள்.தன்முனைப் புள்ளவனோ அத்தகைய அன்பையும் மரியாதையையும் கேட்டும் பெற முடிவதில்லை.

தன்னம்பிக்கையுள்ளவர்கள் எல்லாத்துறையிலும் வெற்றி பெறுகிறார்கள்;ஏனெனில் அவர்கள் நண்பர்களை, சக ஊழியர்களை நம்புகிறார்கள்,ஊக்குவிக்கிறார்கள்;அதனால் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுகிறார்கள்;தன்முனைப்புள்ளவர்கள் தங்கள் திமிரினால் மற்றவர்களின் நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் பெற முடிவதில்லை.விளைவு எதிர்பார்த்த வெற்றி கிட்டுவதில்லை.

தன்னம்பிக்கையை வளர்ப்போம்;தன்முனைப்பை அகற்றுவோம்!



17 comments:

  1. என்னால் முடியும் - தன்னம்பிக்கை...
    என்னால் மட்டுமே முடியும் - ஆணவம்...

    ஏதோ ஒரு படத்தில் வந்தது ஞாபகம் வந்தது... கஜினி...?

    இரண்டையும் நன்றாகவே வேறுபடுத்திச் சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தன்னம்பிக்கையை வளர்ப்போம்;தன்முனைப்பை அகற்றுவோம்!

    நல்ல விளக்கம் பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  3. மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள், நல்ல பதிவு.

    ReplyDelete
  4. ஆணவத்தைத்தன்னம்பிக்கைஎனஎண்ணிச்செயல்படுகிறோமா//ஆம் இப்படித்தான் பலபேர் தன்னம்பிக்கை என்ற வேஷத்தில் வாழ்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்

    ReplyDelete
  5. தன்னம்பிக்கை உள்ளவன் ஜெயிப்பான்! தன்னால்தான் முடியும் என்பவன் தோற்பான்! அருமையாக விளக்கம் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. தன்முனைப்பின்றி படிக்க வேண்டிய பதிவு!

    ReplyDelete
  7. மிக நல்ல பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. அதுக்காக இப்டியா கேப்பே விடாம அடிக்கிறது

    ReplyDelete
  9. நல்ல பதிவு. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நம்மிடயே உள்ள பலர் தன்முனைப்புள்ளவர்களாகவே இருக்கிறார்கள்!

    ReplyDelete
  10. 'உன்னால் முடியும் தம்பி, உனக்குள் இருக்கும் உன்னை நம்பி' . அழகாக சொல்லி இருக்கிங்க.

    ReplyDelete