அன்பே!
நான் அறிகிறேன்
உன் சிரிப்பின் பின் உள்ள சோகத்தை!
நான் உணர்கிறேன்
உன் கோபத்தின் பின் உள்ள அன்பை!
நான் மதிக்கிறேன்
உன் மௌனத்தின் பின் உள்ள காரணத்தை!
சொர்க்கம் என்பது மிகச் சிறியதோ?
அதை நான் உன் கண்களில் பார்க்கிறேனே!
உன் இன் மொழியில் கேட்கிறேனே!
உன் கூந்தல் நறுமணத்தில் முகர்கிறேனே!
உன் இதழ் அமுதில் சுவைக்கிறேனே!
உன் காந்தள் விரல் தொடுகையில்
உணர்கிறேனே!
எங்கு பறந்தாலும் இம்மனப் பறவை
உன்னிடமே வந்து தங்குகிறதே!
நீயே அதன் சரணாலயம்!
நீ என் அருகில் இல்லாத
ஒவ்வொரு நொடியும்
எனக்கு நரகமே!
என்னை விட்டு என்றும் பிரியாதிரு என்
சகி!
என்றும் இதுபோல் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteமனசு உருகுதுங்க...
ReplyDeleteகாதல் உங்களுக்குப் புரிகிறது!
Deleteநன்றி ஸ்கூல் பையன்
அட...! கவிதை...! அருமை!
ReplyDeleteகவித்யையும் எழுதுவோமில்ல!
Deleteநன்றி தலைவரே
இளைஞர்களுக்காக ஒரு இளைஞர் நடத்தும் வலைப்பூ அல்லவா? கவிதையில் காதல் ரசம் சொட்டுகிறது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாதலிக்காதவர் யார்?
Deleteநன்றி ஐயா
அட என்ன ஆச்சி.............. இருந்தும் .......... கவிதை அழகு
ReplyDeleteதங்கமணி ஊரில் இல்லை!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பூவிழி
எந்த குட்டன் சேச்சி ஆரானோ :-)
ReplyDeleteசீனுச் சேட்டன்!சேச்சி எண்ட பார்யா தன்னே!இப்ப நாட்டுக்குப் போயி!அது கொண்டு தன்னே......
Deleteநன்னி!
சீனுச் சேட்டன்!சேச்சி எண்ட பார்யா தன்னே!இப்ப நாட்டுக்குப் போயி!அது கொண்டு தன்னே......
Deleteநன்னி!
''..எங்கு பறந்தாலும் இம்மனப் பறவை
ReplyDeleteஉன்னிடமே வந்து தங்குகிறதே!
நீயே அதன் சரணாலயம்!..''
நல்ல வரிகள்
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தங்கமணிக்கு நான் மெயில் போட்டிருக்கிறேன்.
ReplyDeleteஅடுத்த ரெயிலில் வந்து விடுவார்....
எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்கள் குட்டன் ஐயா.
வாழ்க தங்கள் காதல்!
ReplyDelete