தமிழ் மணம் வாராந்திர,மூன்று மாத ரேங்க்
எப்படித் தீர்மானிக்கப்படுகிறது?
”ஒவ்வொரு பதிவும் பெறும்
பார்வைகளை (ஹிட்ஸ்) முதன்மையாகக்
கொண்டு வெளியிடப் படுகிறது. மறுமொழிகள், வாசகர்
பரிந்துரை வாக்குகள் போன்றவையும்
ஒரு காரணியாக இருக்கும்”-இது தமிழ்மணம் சொல்வது.
எனவே இதை அடிப்படையாகக்
கொண்டு எப்படி முதல் சில ரேங்கில் வருவது
எனப் பார்க்கலாம்!
1)எண்ணிக்கை:-இது
மிக முக்கியம்!தினம் ஒரு பதிவாவது கட்டாயம் எழுத வேண்டும். ஒன்றுக்குக்கு மேல்
எழுத முடிந்தால் இன்னும் சிறப்பு.பதிவு பெரிதாக இருக்க வேண்டிய அவசியம்
இல்லை.சிறிய பதிவாயினும் கணக்கில் ஒன்றாகி விடுகிறது அல்லவா?வாரம் ஒன்று, மாதம் மூன்று என்றெல்லாம் எழுதுபவர்கள் ரேங்கை மறந்து விடுங்கள்.நான்
ஆத்ம திருப்திக்காகத்தான் எழுதுகிறேன்,வேறெதைப் பற்றியும் கவலை இல்லை எனச்
சொல்லும் இலட்சியவாதிகள்,உடனே இந்தப் பதிவைப் படிப்பதை நிறுத்தி விட்டு வேறு
இலட்சிய பூர்வமான செயல்களைத் தொடங்கப் போகலாம்!
வாராந்திர ரேங்கில் 20க்குள் வர
வேண்டும் என்றால் ,கட்டாயம் தினம் ஒரு பதிவோ அதற்கு மேலுமோ எழுதி விடுங்கள்!
தினமும் எழுத நேரம் இல்லையா?நேரம் கிடைக்கும்
போதெல்லாம் பதிவுகள் எழுதிச் சேமித்து வையுங்கள்.ஒவ்வொன்றாக வெளியிடலாம்!
2)உள்ளடக்கம்:-எதுவும் எழுதலாம்!வானமே எல்லை.கதை,கவிதை(!).நகைச்சுவைத் துணுக்கு, அரசியல்,சினிமா
செய்திகள் என்று! எனக்குக் கவிதை எழுதத் தெரியாதே என்று சொல்லாதீர்கள். தெரிந்தா
நான் எழுதுகிறேன்?!வாக்கியத்தை மடக்கிப் போட்டால் கவிதைதான்!ஆகா,ஓகோதான்!
ஆன்மீகம் அறிவியல் என்றெல்லாம் ஆரம்பித்தீர்கள்
என்றால் ரேங்கை மறந்து விடலாம். (அதற்கும்
வழி இருக்கிறது;பின்னால் சொல்கிறேன்!).யோசித்து
எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லையே எனக் காரணம் சொல்லாதீர்கள்!உங்களை யாரையா
யோசிக்கச் சொன்னது?பத்திரிகையைப் புரட்டினால் செய்திகள் ஆயிரம்.இன்றைய சூடான
நிகழ்வு என்ன என்று பாருங்கள்.நடிகை அஞ்சலி,பவர் ஸ்டார்,ஐபிஎல் என்று எத்தனையோ!அரசியலும்
சினிமாவும் என்றும் உங்களுக்குக் கை கொடுக்கும்.
செய்திகளை வெளியிடும்போது அப்படியே பத்திரிகையிலிருந்துcp
செய்யாதீர்கள்.உங்கள் பாணியில் கொஞ்சம் மசாலா தூவி எழுதுங்கள்.
ஆயிரம் ஹிட்டுக்குக் குறையாது!
3)தலைப்பு:- இது மிக மிக முக்கியம்.சுண்டி
இழுக்கும்படி இருக்க வேண்டும் தலைப்பு.ஆனால் சொல்லப்பட்ட செய்திக்குத் தொடர்புடையதாக
இருத்தல் அவசியம் .சம்பந்தமேயில்லாத தலைப்பு எரிச்சலைத்தான் வரவழைக்கும்.
ஆன்மீகம் அறிவியல் பற்றி எழுதினாலும் தலைப்பு
கொஞ்சம் கவனமாக வைத்தால் ஹிட்ஸ் நிச்சயம்!
(உ-ம்) சிவபெருமான் பற்றி எழுதுகிறீர்களா?தலைப்பு
“உலகநாயகனின் பெருமை” என்று இருக்கலாம்!
4)பின்னூட்டம்,வாக்கு:-வருகை தருபவர்கள்
அனைவரும் கருத்துச் சொல்வார்கள் என்றோ வாக்களிப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது;அவ்வாறு
நடக்கவும் நடக்காது.ஆனால் அவைகளும் காரணியாக இருப்பதால் அதற்கும் ஏதாவது வழி செய்ய
வேண்டும்,ஒரே வழி தினம் குறைந்தது 50 பதிவுகளுக்காவது சென்று பின்னூட்டம் இடுங்கள்
,ஓட்டுப் போடுங்கள். நீங்கள் ஓட்டுப் போட்டு விட்டீர்கள் என்பதையும் உணர்த்துங்கள்-(த.ம.11)
அவ்வப்போது
உங்கள் புதிய பதிவின் சுட்டியும் கொடுங்கள்.
இதைச் சிறிது சிறிதாக அதிகப்படுத்துங்கள்.உங்களுக்கு
வரும் ஓட்டுக்களும் பின்னூட் டங்களும் அதிகமாகும்.பின் என்ன!-மகுடம்தான்!
வருகை அதிகப்படுத்த இன்னொரு வழி,ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர் களுக்கு (உ-ம்-புலவர் ஐயா,செ.பி. ஐயா,ரமணி ஐயா) ஒத்து வராத வழி,உடன் பணி செய்பவர்களைக் கண்டிப்பாக தினம் 10 தடைவையாவது உங்கள் பதிவுக்கு வந்து போகும்படி கேட்டுக் கொள்ளல்!
வருகை அதிகப்படுத்த இன்னொரு வழி,ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர் களுக்கு (உ-ம்-புலவர் ஐயா,செ.பி. ஐயா,ரமணி ஐயா) ஒத்து வராத வழி,உடன் பணி செய்பவர்களைக் கண்டிப்பாக தினம் 10 தடைவையாவது உங்கள் பதிவுக்கு வந்து போகும்படி கேட்டுக் கொள்ளல்!
இவை சில முக்கியமான வழிகள் .இன்னும் சின்னச்சின்ன
வழிகள் சில இருக்கின்றன.அவை பற்றிப் பின்னர் பார்க்கலாம்.
இப்போது இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து
ரேங்கில் முன்னேறுங்கள்!
இதெல்லாம் செய்தும் பயனில்லையா?
அதற்காக எழுதுவதை விட்டு விடாதீர்கள்!
வேறு பெயரில் புதிய பதிவு ஒன்று தொடங்குங்கள்!!
யோசனை சரிதான்! நமக்கு சரிப்பட்டு வராது!
ஐயா!நீங்கள் எப்போதும் கவிதை முதல்வர்தான்!
Deleteநன்றி ஐயா
Deleteஆஹா...ஆஹா..அருமை! அருமை!! தங்களின் ஆலோசனைப்படியே எனது பின்னூட்டத்தையும் எனது வலைப் பக்கத்தின் URL ஐயும் தங்கள் பக்கத்திற்கு காணிக்கையாக்குகிறேன்! இனி எனது வலைப் பூ பார்க்க மக்கள் முண்டியடித்து வருவார்கள் என எண்ணுகிறேன்.
ReplyDelete(ஆமாங்க..அந்த சவூதி அழகு ராணி எப்பிடி இருக்காக..?)
http://ithayaththinoli.blogspot.co.uk
வருகிறேன் உங்கள் வலைப்பூவுக்கு!
Deleteநன்றி
நல்ல யோசனைகள்... பலருக்கும் உதவும்... விரைவில் முதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனக்கு எதுக்குங்க இந்த ரேங்கெல்லாம்!(நடக்கதௌன்னு தெரியும்!)
Deleteநன்றி தனபாலன்
ஹா ஹா... நல்ல யோசனை...
ReplyDeleteதினமும் ஒரு பதிவு போட்டாலும் குறைந்த பட்சம் ஏழு ஓட்டு கண்டிப்பாக வாங்கியிருந்தால் இருபதுக்கு முன்னேறலாம்.
ஓட்டு குறைவு எனில் இருபதுக்கு வருவது சற்று சிரமமே...
அதுக்கும் வழி இருப்பதாக அறிகிறேன் பிரகாஷ்!
Deleteநன்றி
அனுபவமா பாஸ்...
ReplyDeleteமைனஸ் வோட்டு போட்டுட்டு சொல்லிக் காட்டினா ஆப்படிச்சிட மாட்டாங்கள்
மைனஸ் ஓட்டு போட்டது யார் என்று தெரியுமா?!
Deleteநன்றி
கடைசியாய் சொல்லியுள்ளீர்களே அதுதான் சரி எனப்படுகிறது!
ReplyDeleteஎத்தனை பதிவு வைத்துக்கொள்வது!
Deleteநன்றி ஐயா
நம்மை தமிழ் மணம் விளக்கிவிட்டது! இப்போது ஹிட்ஸ் ஆசையும் போய் விட்டது! புதியவர்களுக்கு உதவும் உங்கள் யோசனைகள்! நன்றி!
ReplyDeleteயாருக்காவது பயன்பட்டாச் சரி!
Deleteநன்றி
ReplyDeleteவருகை அதிகப்படுத்த இன்னொரு வழி,ஓய்வு பெற்று வீட்டில் இருப்பவர் களுக்கு (உ-ம்-புலவர் ஐயா,செ.பி. ஐயா,ரமணி ஐயா) ஒத்து வராத வழி,உடன் பணி செய்பவர்களைக் கண்டிப்பாக தினம் 10 தடைவையாவது உங்கள் பதிவுக்கு வந்து போகும்படி கேட்டுக் கொள்ளல்!//கோபப்படபோகிறார்கள் குட்டன்
ஐயா!நான் குறிப்பிட்ட மூவரும் இந்த ஏகலைவனின் துரோணாச்சாரியார்கள்!
Deleteகோபப்பட எதுவுமில்லை என்றே எண்ணுகிறேன்!
நன்றி
த.மா - 9
ReplyDeleteநன்றி கருண் சார்
Deleteமுதல் இடம் பிடிக்க வாழ்த்துக்கள்...
ReplyDelete:-))
Deleteநன்றி கருண்
நம்ம சீக்ரெட் எப்படி வெளியில தெரிஞ்சது....
ReplyDeleteஒரே குட்டையில் ஊறிய மட்டை!
Deleteநன்றி
நல்ல கருத்து. இது நிறைய பேருக்கு உதவும்.
ReplyDeleteநன்றி
Deleteம்ம்ம்ம்...........................................
ReplyDeleteஅய்யோடா என்ன ஒரு அசாத்திய மூளை இந்த மொட்டை மண்டைக்குள்
ReplyDeleteஇப்படியெல்லாம் யோசிச்சுத்தான் முடியெல்லாம் கொட்டிப்போச்சு?!
Deleteநன்றி
ஏன் அப்படி வர வேண்டும் இதனால் எதாவது லாபமா எனக்கு புரியவில்லை
ReplyDeleteசபாஷ்!சரியான கேள்வி.இது பலருக்குப் புரிவதில்லையே அம்மா!
Deleteநன்றி
தமிழ் மணத்தில் முதல் இருபதுக்குள் வர வேண்டும் என்றெல்லாம் நான் பேராசைப் பட மாட்டேன்... முதல் முதல் இடத்திற்கு வந்தால் மட்டும் போதும். தினமும் எல்லாம் பதிவெழுத மாட்டேன்... எனக்குத் தோன்றும் பொழுது தான் எழுதுவேன்....
ReplyDeleteயோசித்து யோசித்துமுடி கொட்டிய மண்டையை வைத்துக் கொண்டு இன்னும் யோசித்துப் பாரும் எதாவது வலி கிடைக்காமலா போய்விடும்.... :-)
//இன்னும் சின்னச்சின்ன வழிகள் சில இருக்கின்றன.//
ReplyDeleteஅதில் ஏதாச்சும் ஒரு வழியைக் காமிச்சா புண்ணியமாப்போகும்,குட்டன்.
இதை விட சுலபமான வழி ஒன்று தோன்றுகிறது.
ReplyDeleteஒவ்வொரு பதிவின் ஆரம்பத்திலும், முடிவிலும் நானே நம்பர் 1 என எழுதி விடலாம்! :)