Thursday, April 25, 2013

யார் அறையப்பா இது?!



யார் அறை இது?

இத்தனை அலங்கோலமாய்!

ஒட்டடைகள் அங்கும் இங்கும்

மேசை மீது வட்டமாய்க் காபிக்கறைகள்

கட்டில் மீது காலுறை

நாற்றம் சகிக்கவில்லை.

கதவில் மாட்டிய கலர் போன ஜீன்ஸ்

நாற்காலி மீது அழுக்கு பனியனும் ஜட்டியும்!

சரியாய் மடிக்காத செய்தித்தாள்

நான்கைந்து இறைந்து கிடக்கிறது.

கட்டில் அடியில் அது என்ன!

ஓ!பீர் பாட்டில் இரண்டு!

எவன் அறைடா இது?

சீனு,சுரேஷ் ,செந்தில்?

என்ன சிரிக்கிறீர்கள்?

சரியாய்க் கேட்கவில்லை சொல்லுங்கள்!

என் அறையா!

அப்படியா? அதானே!

பார்த்தது போல் இருக்கிறதே என யோசித்தேன்!



19 comments:

  1. போதை நன்றாகத் தெளிந்து விட்டால்
    இப்படித்தான் தெரியுமாம்....
    கேள்விப் பட்டிருக்கிறேன் குட்டன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா!!
      வருகைக்கு நன்றி

      Delete
  2. தன்னிலை விளக்கமா! தெளிவான படப்பிடிப்பு!

    ReplyDelete
    Replies
    1. நான் என்றால் நானா?
      வருகைக்கு நன்றி

      Delete
  3. சரியாய் சொன்னார் திரு திண்டுக்கல் தனபாலன்!

    ReplyDelete
  4. ஒரு கால் கட்டு போட்டா சரியாயிடும் எல்லாம்...

    ReplyDelete
    Replies
    1. நான் ரெடி!
      தங்கமணி ஒத்துக்கணுமே! ஹி..ஹி..
      வருகைக்கு நன்றி

      Delete
  5. Replies
    1. உடைந்து விடுமே போட்டால்!
      வருகைக்கு நன்றி

      Delete
  6. //சீனு,சுரேஷ் ,செந்தில்// யோவ் குட்டன் என்னைய எதுவும் கோர்த்து விடலையே

    ReplyDelete
    Replies
    1. சேச்சே!நீங்க தம்பக்கங்கி---வாய் குழறுகிறது....தங்கக் கம்பியாச்சே!

      Delete
  7. //ஓ!பீர் பாட்டில் இரண்டு!//

    ரெண்டு பீருக்கே இந்த அலப்பறையா

    ReplyDelete
    Replies
    1. அனுபவம் இல்லாட்டி இப்படித்தான்!
      வருகைக்கு நன்றி

      Delete
  8. எல்லாம் இரண்டு இரண்டா தெரியலையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பேண்டில் கூட ரெண்டுகாலு!
      வருகைக்கு நன்றி

      Delete
  9. அட சீக்கிரம் போங்க கண்ணு பட்டுவிடபோகுது வாசலில் உங்க படத்தை மாட்டுங்க

    ReplyDelete