யார் அறை இது?
இத்தனை அலங்கோலமாய்!
ஒட்டடைகள் அங்கும் இங்கும்
மேசை மீது வட்டமாய்க் காபிக்கறைகள்
கட்டில் மீது காலுறை
நாற்றம் சகிக்கவில்லை.
கதவில் மாட்டிய கலர் போன ஜீன்ஸ்
நாற்காலி மீது அழுக்கு பனியனும் ஜட்டியும்!
சரியாய் மடிக்காத செய்தித்தாள்
நான்கைந்து இறைந்து கிடக்கிறது.
கட்டில் அடியில் அது என்ன!
ஓ!பீர் பாட்டில் இரண்டு!
எவன் அறைடா இது?
சீனு,சுரேஷ் ,செந்தில்?
என்ன சிரிக்கிறீர்கள்?
சரியாய்க் கேட்கவில்லை சொல்லுங்கள்!
என் அறையா!
அப்படியா? அதானே!
பார்த்தது போல் இருக்கிறதே என யோசித்தேன்!