Friday, May 17, 2013

பெர்னாட்ஷா சொன்னது பாதி சரி!






டைடானிக் பற்றி அனைவருக்கும் தெரியும்.

கோலாகலமாக(பெப்சிகலமாக!-மின்னல் கணேஷ்) பயணம் தொடங்கிய அந்த மிதக்கும் நகரம்,பனிப்பாறையில் மோதிக் கடலில் மூழ்கியது .

பனிப்பாறைகளின் பிரச்சினையே இதுதான்.

வெளியில் தெரிவது அதன் உச்சிமுனை மட்டுமே.

மறைந்திருப்பது எவ்வளவு பெரிதோ தெரியாது.

இதுவே ஓர் ஆங்கில மொழிமரபு பிறக்கக் காரணமாக இருந்தது.

ஒரு சிறிய சம்பவத்தைப் பார்க்கும்போது அதன் மறைவில் இன்னும் என்ன இருக்குமோ என்பதைக் குறிப்பிட”tip of the iceberg”- என்று சொல்வது வழக்கம்.

அது போல் ஒரு பனிப்பாறையின் உச்சிமுனை நேற்று வெளி வந்திருக்கிறது.

ஐ.பி.எல் லில் கிரிக்கெட் சூதாட்டத்துக்காக மூன்று ஆட்டக்காரர்கள் கைது செய்யப்பட் டிருக்கிறார்கள்.

ஆட்டங்களைப் பார்த்து ரசித்து மகிழ்ந்து வந்த கோடிக்கணக்கான ரசிகர்களின் முகத்தில் கரி பூசப்பட்டிருக்கிறது.

பெர்னார்ட்ஷா சொன்னார்”பதினோரு முட்டாள்கள் ஆடுகிறார்கள்;பதினோராயிரம் முட்டாள்கள் பார்க்கிறார்கள்” என்று.

அவர் சொன்னதில் பாதி சரி-----பின்பாதி.

ஆனால் பதினோராயிரம் அல்ல,கோடிக்கணக்கில் பார்வையாளர்கள் முட்டாள்களாக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஆனால் முதல் பாதி சரியல்ல---ஆடுபவர்கள் முட்டாள்களல்ல.

 விளையாடுவதற்காக,லட்சம்,கோடிக்கணக்கில்  பணம் பெற்றுக் கொண்டு அது போதாமல், சூதாட்டத்துக்குத் துணை போய் பார்ப்பவர்களை முட்டாள்கள் ஆக்கியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் ஹாக்கியில் கொடிகட்டிப் பறந்த நாம் இன்று கேவலமான நிலையில் உள்ளோம்.

ஒரு ஹாக்கி ஆட்டக்காரனாக எனக்கு மிக வருத்தம்.

ஹாக்கிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல்—வேறு எந்த விளையாட்டுக்குமே கொடுக்கப் படாமல்-நாள்கணக்கில் நேர விரயமாக்கும் கிரிக்கெட்டைத் தலையில் தூக்கி வைத்து ஆடும் நமக்கு இனியாகிலும் புத்தி வருமா?

3 comments:

  1. கிரிக்கெட் விளையாடுபவர்கள் யார் என்று பாருங்கள்?

    ReplyDelete
  2. உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

    ReplyDelete
  3. அட போங்க பாஸ்! இதை விட பெரிய சூதாட்ட கேஸ் எல்லாம் பாத்து நாங்க திருந்தலை! ஒவ்வொரு இந்தியனும் தேச பற்றை வெளி படுத்துரதே கிரிக்கெட் மேட்ச் பாக்கும் போதுதான்! அதுவும் வேணாம்னு சொல்றீங்களா?

    இந்தியாவுல பணம் புழங்குற எல்லா துறையிலும் ஊழல் இருக்கு. புலம்புறது தவிர என்னத்த செய்ய?

    அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் குறை சொல்லுவதை விட்டு, தனி மனித விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்பதே என் கருத்து. மிக்க நன்றி.

    ReplyDelete