கற்பழிப்பு என்பது என்ன?
இ.பி.கோ.செக்சன் 375
சொல்கிறது—
ஒரு ஆண் ஒரு பெண்ணுடன்
கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் எதிலாவது உடலுறவு கொண்டால் அது வன்புணர்வு.
1)அவளது
விருப்பமில்லாமல்
2) அவள் உடன்படாமல்
3) அவள் விரும்பும் யாருக்கோ
இடர் விளைவிப்பதாகச் சொல்லி உடன் படச் செய்து
4)அவள் அவனைத் தன் கணவன்
என்ற தவறான நம்பிக்கையில்,,அது அவனுக்குத் தெரிந்து,உடன்படும்போது
5)அவளது சம்மதம் அவள் மனநிலை சரியில்லாத
நேரத்திலோ அல்லது அவளுக்கு ஏதாவது போதை மருந்து கொடுத்து அதன் காரணமாகவோ
அவள் நடக்கப்போகும் நிகழ்வின் விளைவுகளை புரிந்து கொள்ளாத நிலையில் பெறப்பட்டால்
6)சம்மதத்துடனோ
சம்மதமில்லாமலோ-அவள் பதினாறு வயதுக்கு உட்பட்ட வளாக இருந்தால்.
இ.பி.கோ
செக்சன் 376 இன் கீழ் முதலில்,குறைந்த பட்ச நண்டனை என்ன என்பது சொல்லப் படவில்லை.1983
இல் தான் குறைந்த பட்சத் தண்டனை ஏழு ஆண்டுகளாகத் திருத்தம் செய்யப் பட்டது.அதிகப்பட்சம்
ஆயுள் தண்டனை.பொதுவாகவே ஆயுள் தண்டனை என்பது முழு ஆயுட்காலமாக இல்லாமல் 14
ஆண்டுகளாகவே இருக்கிறது.
பல
நேரங்களில்,சாட்சியம்,சான்று,தடையவியல் ஆய்வு ஆகியவற்றின் குறைபாடு காரணமாக குற்றவாளி
தப்பவும் நேர்கிறது
கேள்வி
இந்தத் தண்டனை போதுமா என்பதே.
நான்கு
விதமான தண்டனைகள் முன் நிற்கின்றன
1)மரண
தண்டனை
2)ஆயுள்
தண்டனை
3)ரசாயனக்
காயடித்தல்
4)உறுப்பு
நீக்குதல்.
எதில்
எது சரியாக இருக்கும்.?
ஒரு
படத்தில் மைனர் குஞ்சு என்பவர் கற்பழித்த குற்றத்துக்காகப் பஞ்சாயத்தில் நிற்பார்.
அப்போது
விவேக் அவரை மரத்துக்குப் பின் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு விட்டுச்
சொல்வார்
“மைனர்
குஞ்சைச் சுட்டுட்டேன்!”
காமெடிக்குச்
சொன்னாலும் அதுவே சரியாய்த் தெரிகிறது.
மரணதண்டனை.....
ReplyDeleteஅதை விடக் கொடியது இருக்கிறதா?
Deleteநன்றி ஆத்மா
ஆத்மாவின் குரலை ஆமோதிக்கிறேன்!
ReplyDeleteநன்றி புலவர் ஐயா
Deleteஎன்ன கொடுமை சரவணா! இதைவிட நடு ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ள உத்தரவிடவேண்டும்.
ReplyDeleteஅதுதான் சரி
Deleteநன்றி ஆகாஷ்
தண்டனையை வயதுக்குத் தகுந்த மாதிரி தரலாம். இளைஞனாயிருந்தால் எண் மூன்றில் உள்ளதையும், மற்றவர்களுக்கு எண் ஒன்றில் உள்ளதையும் தரலாம்.
ReplyDeleteஇதுவும் சரிதான்
Deleteநன்றி ஐயா
மரணதண்டனை சரிப்பட்டு வராது. தூக்கிலிட்டு கொல்வதை விட இந்த படுபாவிகள் உயிருள்ள வரை தாம் செய்த குற்றத்தை நினைந்து நினைந்து வருந்திச் சாகவைக்க காயடித்தலே சிறந்த தண்டனை.
ReplyDeleteஏற்றுக் கொள்ள வேண்டிய கருத்து
Deleteநன்றி சத்தியா