Showing posts with label சட்டம். Show all posts
Showing posts with label சட்டம். Show all posts

Wednesday, September 11, 2013

தகாத உறவும் தற்கொலையும்!



”என்னங்க!நேத்து சாயந்திரம் உங்களை மாலில் ஒரு பெண்ணோடு பார்த்ததாக சுமதி சொன்னாள்”   கல்யாணி ஆரம்பித்தாள்.

”ஆமாம் .என் ஆபீஸில் பணி புரிபவள்.அவளுக்கு ஏதோ வாங்க வேண்டும் என்றாள்.நானும் சென்றேன்”கணவன் குமார்

”அவள் ரொம்ப அழகோ?”

“உம்,இருப்பா”

”ரொம்ப நெருக்கமோ”

இப்படித்தான் ஆரம்பித்தது.

லேட்டாக வந்தால்,ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால் என்று எல்லாவற்றுக்கும் அவளை இணைத்தே கேள்விகள்.

காரணம் அவளுக்குள் ஒரு பாதுகாப்பற்ற தன்மை.

தன்னை நிராதரவாக விட்டு விடுவாரோ என்ற பயம்.

அவன் சொல்லியே விட்டான்”இதோ பார்,எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு;அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு.என் மேல் மரியாதை இருக்கு.அவளோட பழகறதால நான் உன்னைக் கவனிக்க வில்லையா?கொடுமைப் படுத்தறேனா?அதெல்லாமில்லையே.எப்போது போல் உன்னிடமும் பிரியமாகத்தானே இருக்கிறேன்.”

ஆனால் அவள் சமாதானம் ஆகவில்லை.

பயம் அதிகமானது.

விளைவு?

கல்யாணி தற்கொலை செய்து கொண்டு விட்டாள்!

ஆனால் தற்கொலைக்காக யாரையும் காரணம் காட்டவில்லை;கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்ல.

போலீஸும் தன் விசாரணையை துவக்கியது—தற்கொலைக்கான காரணம் கண்டறிய.
கல்யாணியின் தோழியான ,அருகில்  வசிக்கும் ஒருத்தியிடம் விசாரிக்கும்போது அவள் மூலம் தெரிய வந்தது குமாருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் உள்ள தொடர்பு.

கணவன்  வேறு பெண்ணுடன் கொண்ட தகாத உறவின் கொடுமையே அவளைத் தற்கொலைக் குத்  தூண்டியது என வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணை நீதி மன்றம் பத்தாண்டுச் சிறைதண்டனை வழங்க.உயர்நீதி மன்றமும் அதை உறுதி செய்தது.

மேல் முறையீட்டில் உச்சநீதி மன்றம் தண்டனையை ரத்து செய்தது.

இது கதையல்ல நிஜம்.

பெயர்கள்,சம்பவங்கள் சித்திரிக்கப்பட்டவை.

உச்ச நீதி மன்றம் தீர்ப்பில் சொன்னதாவது......

”இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 இன் படி தண்டிப்பதற்கு  இறந்தவர் கொடுமைப் படுத்தப்பட்டு அதன் காரணமாக தற்கொலை செய்திருப்பது சந்தேகத்துக்கின்றி நிரூபிக் கப்பட வேண்டும்.

இந்த வழக்கில்,பிரிவு 498 ஏ யின் கீழ் வருவதற்கான ஆதாரங்கள் இல்லை.இந்த உறவு மனைவியைத்  தற்கொலைக்குத் தூண்டும் தன்மையதாய் இல்லை.குற்றம் சாட்டப் பட்டவர்,எந்த நேரத்திலும் மனைவியைத்  தற்கொலைக்குத் தூண்டும் விதமாகக் கொடுமையாக நடக்கவில்லை. பிற பெண்ணுடன் தொடர்பு என்பது  மனைவியைக் கொடுமைப்படுத்துவது ஆகாது

சம்பந்தப்பட்ட பிரிவுகள் சொல்வதென்ன?

306. Abetment of suicide.-- If any person commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.

498A. Husband or relative of husband of a woman subjecting her to cruelty.-- Whoever, being the husband or the relative of the husband of a woman, subjects such woman to cruelty shall be punished with imprisonment for a term which may extend to three years and shall also be liable

ஆம் சட்டம் ஒரு இருட்டறை!

வக்கீல்களின் வாதம் அதில் ஒரு விளக்கு!

நீதி என்பதே இலக்கு.

சட்டம் என்பது அந்த இலக்கை அடைய உதவும் சாதனமும் வழியுமாகும்.

Saturday, May 25, 2013

சீனிவாசன்,பதவி,சட்டம்!




சீனிவாசனை எண்ணி நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

நாம் அனைவரும் வியந்து போற்றக்குடிய சாதனை அவருடையது.

23-02-1967 இல் சண்டிகர் இந்தியாவில் பிறந்தவர் இவர்.

பிறந்த இடம் சண்டிகர் ஆனாலும் இவர் ஒரு தமிழர்.

இவரது தந்தையின் பூர்விகக் கிராமம்,திருநெல்வேலி அருகில் உள்ள  திரு வேங்கடநாதபுரம் என்பதாகும்.

1960 இலேயே இவரது குடும்பம் அமெரிக்காவின் கன்சாஸில் உள்ள லாரென்ஸ் என்ற இடத்துக்குக் குடியேறி விட்டது.

இவரது தந்தையார் கன்சாஸ் பலகலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகவும்,தாயார் கன்சாஸ் நகரக் கலை நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர்.

இவர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும்,பின் சட்டப்பள்ளியில் சட்டமும், வாணிபப் பள்ளியில்,மேலாண்மைப் பட்டமும் பெற்றர்

இவர் முழுப்பெயர் பத்மநாபன் ஸ்ரீகாந்த் ஸ்ரீனிவாசன் ஆகும்.

இவரை எண்ணி ஏன் பெருமைப்பட வேண்டும்?

அமெரிக்க ஆட்சி மன்றம் இவரை ஏக மனதாக  தலைநகரில் உள்ள மேல் முறையீட்டு நீதி மன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்திருக்கிறது.

”ஸ்ரீநி அமெரிக்காவின் சிறப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஓர் ஒளி விளக்கு”என வெள்ளை மாளிகை அறிக்கையில் ஒபாமா அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்

இது முதல் படிதான்...

எதற்கு?

அவர் அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற  நீதிபதியாக நியமனம் பெறுவதற்கு!

இந்த சீனிவாசனைப் பாராட்டுவோம்!

பல புதிய உயரங்களைத் தொட  வாழ்த்துவோம்!

Monday, May 20, 2013

ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருந்தால் என்ன செய்வார்கள்?!

கொஞ்சம் விவகாரமான கேள்விதான்.

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால்,காமம் மேலிட்டு உடல் உறவில்தான் ஈடுபடு வார்களா?

ஆண்-பெண் உறவு என்பது வெறும் உடல் சார்ந்ததுதானா?

ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி ஒருவர் இக்கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

உயர்நீதி மன்றம் இக் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ளது..

இந்த நேரத்தில் என் வழக்கறிஞர் நண்பர் ஒருவர் ஒரு முறை தெரிவித்த தகவல் நினைவுக்கு வருகிறது.

ஒரு விவாக ரத்து வழக்கில், கணவன் மனைவியின் நடத்தை சரியில்லை என்ற வாதத்தில், கணவன் தன் மனைவி ஒரு சாத்திய அறையிலிருந்து ஒரு ஆடவனுடன் வெளியே வந்ததைப் பார்த்ததாகச் சொல்ல,நீதிபதி கேட்டாராம்”அறைக்குள் அவர்கள் தவறான நடவடிக் கையில்தான் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று எப்படிச் சொல்வீர்கள்” என்று.

ஆம்.

சட்டம் எப்போதும் பெண்களின் பால் சிறிது இரக்கத்துடன்தான் நடந்து கொள்கிறது--அவர்கள் வலுவற்றவர்கள் என்பதால்.

காவல் துறைக்கு வரும் புகார்களைப் பாருங்கள்

கணவனால்,அவன் பெற்றோரால் துன்பப்படும் பெண்களின்  கதைகள்தான் தெரியும்.

மருககளால் கொடுமைப் படுத்தப் படும் மாமியார்,மாமனார்கள் இல்லையா?

மனைவியால் துன்புறும் கணவர்களே இல்லையா?

குடும்பத்தில் வன்முறையென்பது உடல் சார்ந்தது மட்டுமா?

உளம் சார்ந்த வன்முறை கிடையாதா?

மனைவியின் நடத்தையால் ,குத்தலான பேச்சால்,அலட்சியப் போக்கால் ,கவனிப் பின்மையால்  உள்ளத்தளவில் வன்முறைக்காளாகி நொந்து போகும் கணவர்கள் இல்லையா?

இன்றைய செய்தி ஒன்று.

திருவள்ளூர் அருகே ஒரு இடம்.

பேத்தி குளிக்கும்போது தண்ணீரை வாரி இறைத்து  ஈரமாக்கியதற்காக  பாட்டி கடிந்து கொள்கிறாள்.

தன் மகளைச் சொன்னது மருமகளுக்குப் பிடிக்கவில்லை

சண்டை பிடிக்கிறாள்.

சண்டையின் முடிவில்  மருமகள் காவல் துறையில் புகார் கொடுக்கிறாள்...  தன் மாமனார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக!

விளைவு....... அந்த வயதான  தம்பதி-மாமனார்&மாமியார்-தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சட்டம்,சமூகம் காட்டும் இரக்கத்தைத் தவறாக்கப் பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள்

எனக்கு ஒரு கதை தெரியும்.

ஒரு அன்பான கணவனின் கதை.

மனைவிக்கு அளித்த சுதந்திரத்தை அவள் தவறாகப் பயன்படுத்த அதனால் வாழ்க்கை சிதைந்து போனவன்.

அவன் நல்லூழ்,தெய்வஅருள் காரணமாக சிக்கல் எதுவுமின்றி மணவிலக்குப் பெற்று,ஒரு சந்நியாசி போல் வாழ்பவன்.

 அதை தொடர் பதிவாகத் தரலாம்;

ஆனால் ஏனோ தயக்கமாக இருக்கிறது.

பார்க்கலாம்!




Monday, December 24, 2012

கற்பழிப்புக்கு என்ன தண்டனை?



கற்பழிப்பு என்பது என்ன?

இ.பி.கோ.செக்சன் 375 சொல்கிறது—

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கீழ்க்கண்ட சூழ்நிலைகளில் எதிலாவது உடலுறவு கொண்டால்  அது வன்புணர்வு.

1)அவளது விருப்பமில்லாமல்

2) அவள் உடன்படாமல்

3) அவள் விரும்பும் யாருக்கோ இடர் விளைவிப்பதாகச் சொல்லி உடன் படச் செய்து

4)அவள் அவனைத் தன் கணவன் என்ற தவறான நம்பிக்கையில்,,அது அவனுக்குத் தெரிந்து,உடன்படும்போது

 5)அவளது சம்மதம் அவள் மனநிலை சரியில்லாத நேரத்திலோ அல்லது அவளுக்கு ஏதாவது போதை மருந்து கொடுத்து அதன் காரணமாகவோ அவள்  நடக்கப்போகும் நிகழ்வின் விளைவுகளை புரிந்து கொள்ளாத நிலையில் பெறப்பட்டால்

6)சம்மதத்துடனோ சம்மதமில்லாமலோ-அவள் பதினாறு வயதுக்கு உட்பட்ட வளாக  இருந்தால்.

இ.பி.கோ செக்சன் 376 இன் கீழ் முதலில்,குறைந்த பட்ச நண்டனை என்ன என்பது சொல்லப் படவில்லை.1983 இல் தான் குறைந்த பட்சத் தண்டனை ஏழு ஆண்டுகளாகத் திருத்தம் செய்யப் பட்டது.அதிகப்பட்சம் ஆயுள் தண்டனை.பொதுவாகவே ஆயுள் தண்டனை என்பது முழு ஆயுட்காலமாக இல்லாமல் 14 ஆண்டுகளாகவே இருக்கிறது.

பல நேரங்களில்,சாட்சியம்,சான்று,தடையவியல் ஆய்வு ஆகியவற்றின் குறைபாடு காரணமாக குற்றவாளி தப்பவும் நேர்கிறது

கேள்வி இந்தத் தண்டனை போதுமா என்பதே.

நான்கு விதமான தண்டனைகள் முன் நிற்கின்றன

1)மரண தண்டனை
2)ஆயுள் தண்டனை
3)ரசாயனக் காயடித்தல்
4)உறுப்பு நீக்குதல்.

எதில் எது சரியாக இருக்கும்.?

ஒரு படத்தில் மைனர் குஞ்சு என்பவர் கற்பழித்த குற்றத்துக்காகப் பஞ்சாயத்தில் நிற்பார்.

அப்போது விவேக் அவரை மரத்துக்குப் பின் அழைத்துச் சென்று துப்பாக்கியால் சுட்டு விட்டுச் சொல்வார்

“மைனர் குஞ்சைச் சுட்டுட்டேன்!”

காமெடிக்குச் சொன்னாலும் அதுவே சரியாய்த் தெரிகிறது.