”என்னங்க!நேத்து சாயந்திரம் உங்களை
மாலில் ஒரு பெண்ணோடு பார்த்ததாக சுமதி சொன்னாள்”
கல்யாணி ஆரம்பித்தாள்.
”ஆமாம் .என் ஆபீஸில் பணி புரிபவள்.அவளுக்கு
ஏதோ வாங்க வேண்டும் என்றாள்.நானும் சென்றேன்”கணவன் குமார்
”அவள் ரொம்ப அழகோ?”
“உம்,இருப்பா”
”ரொம்ப நெருக்கமோ”
இப்படித்தான் ஆரம்பித்தது.
லேட்டாக வந்தால்,ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால்
என்று எல்லாவற்றுக்கும் அவளை இணைத்தே கேள்விகள்.
காரணம் அவளுக்குள் ஒரு பாதுகாப்பற்ற
தன்மை.
தன்னை நிராதரவாக விட்டு விடுவாரோ என்ற
பயம்.
அவன் சொல்லியே விட்டான்”இதோ பார்,எனக்கு
அவளைப் பிடிச்சிருக்கு;அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு.என் மேல் மரியாதை
இருக்கு.அவளோட பழகறதால நான் உன்னைக் கவனிக்க வில்லையா?கொடுமைப் படுத்தறேனா?அதெல்லாமில்லையே.எப்போது
போல் உன்னிடமும் பிரியமாகத்தானே இருக்கிறேன்.”
ஆனால் அவள் சமாதானம் ஆகவில்லை.
பயம் அதிகமானது.
விளைவு?
கல்யாணி தற்கொலை செய்து கொண்டு
விட்டாள்!
ஆனால் தற்கொலைக்காக யாரையும் காரணம்
காட்டவில்லை;கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்ல.
போலீஸும் தன் விசாரணையை துவக்கியது—தற்கொலைக்கான
காரணம் கண்டறிய.
கல்யாணியின் தோழியான ,அருகில் வசிக்கும் ஒருத்தியிடம் விசாரிக்கும்போது அவள்
மூலம் தெரிய வந்தது குமாருக்கும் இன்னொரு பெண்ணுக்கும்
உள்ள தொடர்பு.
கணவன் வேறு பெண்ணுடன் கொண்ட தகாத உறவின் கொடுமையே அவளைத்
தற்கொலைக் குத் தூண்டியது என வழக்குப்
பதிவு செய்யப்பட்டது.
விசாரணை நீதி மன்றம் பத்தாண்டுச்
சிறைதண்டனை வழங்க.உயர்நீதி மன்றமும் அதை உறுதி செய்தது.
மேல் முறையீட்டில் உச்சநீதி மன்றம்
தண்டனையை ரத்து செய்தது.
இது கதையல்ல நிஜம்.
பெயர்கள்,சம்பவங்கள்
சித்திரிக்கப்பட்டவை.
உச்ச நீதி மன்றம் தீர்ப்பில்
சொன்னதாவது......
”இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 இன்
படி தண்டிப்பதற்கு இறந்தவர் கொடுமைப்
படுத்தப்பட்டு அதன் காரணமாக தற்கொலை செய்திருப்பது சந்தேகத்துக்கின்றி
நிரூபிக் கப்பட வேண்டும்.
இந்த வழக்கில்,பிரிவு 498 ஏ யின் கீழ் வருவதற்கான
ஆதாரங்கள் இல்லை.இந்த உறவு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டும் தன்மையதாய் இல்லை.குற்றம்
சாட்டப் பட்டவர்,எந்த நேரத்திலும் மனைவியைத்
தற்கொலைக்குத் தூண்டும் விதமாகக் கொடுமையாக நடக்கவில்லை. பிற பெண்ணுடன் தொடர்பு என்பது மனைவியைக் கொடுமைப்படுத்துவது ஆகாது
சம்பந்தப்பட்ட பிரிவுகள் சொல்வதென்ன?
306.
Abetment of suicide.-- If any person commits suicide, whoever abets the
commission of such suicide, shall be punished with imprisonment of either
description for a term which may extend to ten years, and shall also be liable
to fine.
498A.
Husband or relative of husband of a woman subjecting her to cruelty.-- Whoever,
being the husband or the relative of the husband of a woman, subjects such
woman to cruelty shall be punished with imprisonment for a term which may
extend to three years and shall also be liable
ஆம் சட்டம் ஒரு இருட்டறை!
வக்கீல்களின் வாதம் அதில் ஒரு விளக்கு!
நீதி என்பதே இலக்கு.
சட்டம் என்பது அந்த இலக்கை அடைய உதவும்
சாதனமும் வழியுமாகும்.