”என்னங்க!நேத்து சாயந்திரம் உங்களை
மாலில் ஒரு பெண்ணோடு பார்த்ததாக சுமதி சொன்னாள்”
கல்யாணி ஆரம்பித்தாள்.
”ஆமாம் .என் ஆபீஸில் பணி புரிபவள்.அவளுக்கு
ஏதோ வாங்க வேண்டும் என்றாள்.நானும் சென்றேன்”கணவன் குமார்
”அவள் ரொம்ப அழகோ?”
“உம்,இருப்பா”
”ரொம்ப நெருக்கமோ”
இப்படித்தான் ஆரம்பித்தது.
லேட்டாக வந்தால்,ஏதாவது யோசித்துக் கொண்டிருந்தால்
என்று எல்லாவற்றுக்கும் அவளை இணைத்தே கேள்விகள்.
காரணம் அவளுக்குள் ஒரு பாதுகாப்பற்ற
தன்மை.
தன்னை நிராதரவாக விட்டு விடுவாரோ என்ற
பயம்.
அவன் சொல்லியே விட்டான்”இதோ பார்,எனக்கு
அவளைப் பிடிச்சிருக்கு;அவளுக்கும் என்னைப் பிடிச்சிருக்கு.என் மேல் மரியாதை
இருக்கு.அவளோட பழகறதால நான் உன்னைக் கவனிக்க வில்லையா?கொடுமைப் படுத்தறேனா?அதெல்லாமில்லையே.எப்போது
போல் உன்னிடமும் பிரியமாகத்தானே இருக்கிறேன்.”
ஆனால் அவள் சமாதானம் ஆகவில்லை.
பயம் அதிகமானது.
விளைவு?
கல்யாணி தற்கொலை செய்து கொண்டு
விட்டாள்!
ஆனால் தற்கொலைக்காக யாரையும் காரணம்
காட்டவில்லை;கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்ல.
போலீஸும் தன் விசாரணையை துவக்கியது—தற்கொலைக்கான
காரணம் கண்டறிய.
கல்யாணியின் தோழியான ,அருகில் வசிக்கும் ஒருத்தியிடம் விசாரிக்கும்போது அவள்
மூலம் தெரிய வந்தது குமாருக்கும் இன்னொரு பெண்ணுக்கும்
உள்ள தொடர்பு.
கணவன் வேறு பெண்ணுடன் கொண்ட தகாத உறவின் கொடுமையே அவளைத்
தற்கொலைக் குத் தூண்டியது என வழக்குப்
பதிவு செய்யப்பட்டது.
விசாரணை நீதி மன்றம் பத்தாண்டுச்
சிறைதண்டனை வழங்க.உயர்நீதி மன்றமும் அதை உறுதி செய்தது.
மேல் முறையீட்டில் உச்சநீதி மன்றம்
தண்டனையை ரத்து செய்தது.
இது கதையல்ல நிஜம்.
பெயர்கள்,சம்பவங்கள்
சித்திரிக்கப்பட்டவை.
உச்ச நீதி மன்றம் தீர்ப்பில்
சொன்னதாவது......
”இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 306 இன்
படி தண்டிப்பதற்கு இறந்தவர் கொடுமைப்
படுத்தப்பட்டு அதன் காரணமாக தற்கொலை செய்திருப்பது சந்தேகத்துக்கின்றி
நிரூபிக் கப்பட வேண்டும்.
இந்த வழக்கில்,பிரிவு 498 ஏ யின் கீழ் வருவதற்கான
ஆதாரங்கள் இல்லை.இந்த உறவு மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டும் தன்மையதாய் இல்லை.குற்றம்
சாட்டப் பட்டவர்,எந்த நேரத்திலும் மனைவியைத்
தற்கொலைக்குத் தூண்டும் விதமாகக் கொடுமையாக நடக்கவில்லை. பிற பெண்ணுடன் தொடர்பு என்பது மனைவியைக் கொடுமைப்படுத்துவது ஆகாது
சம்பந்தப்பட்ட பிரிவுகள் சொல்வதென்ன?
306.
Abetment of suicide.-- If any person commits suicide, whoever abets the
commission of such suicide, shall be punished with imprisonment of either
description for a term which may extend to ten years, and shall also be liable
to fine.
498A.
Husband or relative of husband of a woman subjecting her to cruelty.-- Whoever,
being the husband or the relative of the husband of a woman, subjects such
woman to cruelty shall be punished with imprisonment for a term which may
extend to three years and shall also be liable
ஆம் சட்டம் ஒரு இருட்டறை!
வக்கீல்களின் வாதம் அதில் ஒரு விளக்கு!
நீதி என்பதே இலக்கு.
சட்டம் என்பது அந்த இலக்கை அடைய உதவும்
சாதனமும் வழியுமாகும்.
//ஆம் சட்டம் ஒரு இருட்டறை!
ReplyDeleteவக்கீல்களின் வாதம் அதில் ஒரு விளக்கு!//
ஆனால் அந்த விளக்கில் எண்ணை இல்லாவிட்டால்?
இருட்டை நீக்க முடியாது
Deleteஎன்னமோ சொல்றாங்க
ReplyDeleteகேட்டுக்க வேண்டியதுதான்
சட்டம் எனபது இருபுறமும் கூரான கத்தி
என அண்ணா சொன்னது கூட சரியாகத்தான்படுது
வெட்டனும்னு நினைச்சா எந்தப்பக்கமும்
சட்டுனு வெட்டலாம் இல்லையா ?
சட்டம் விளக்கப்படுவதைப் பொறுத்தது!
Deleteநன்றி
இதனால என்னதான் சொல்ல வற்றீங்க. அடுத்த பெண்களுடன் பழகலாம். ஆனா, பொண்டாட்டியை கொடுமைப்படுத்தாத வரை அது தப்பில்லேன்னா?!
ReplyDeleteநீதிபதிகளின் கூற்றுப்படி,அதன்காரணமாக தற்கொலை க்குத் தூண்டப்படவில்லை;எனவே தற்கொலைக்குத் தூண்டிய குற்றம் நிரூபிக்கப் படவில்லை;ஆனாலந்த உறவு ஒழுக்கமற்றதுதான்.
Deleteஆனால் சட்டம் கூட ஒரு ஆண் திருமணமான பெண்னுடன் உறவு கொள்வது தவறு(பிரிவு 497)என்று சொல்கிறதே தவிர,திருமணமான ஆண் மணமாகாத ஒரு பெண்ணுடன் உறவு கொள்வதைப் பற்றிப் பேசவில்லை
நன்றி ராஜிக்கா!
ஆடவனை நம்பி தன் வாழ்க்கையை அர்ப்பணித்த பெண் ஒருவருக்கு தன் வாழ்க்கையை சீருடன் நடத்தி செல்ல தக்க பாதுகாப்பு. அளிக்க தவறிய கணவன் தண்டனைக்கு உறியவரே என படுகிறது. மேலும் இடையில் வந்த கள்ளக் காதலிக்கும் இந்த அவலத்தில் பங்கு உண்டு என சொல்லலாம்.
ReplyDeleteஇந்த ஆடவனை நம்பி ஊர் உலகம் அறிய மணந்த மனைவி ஒருவர் இருக்க இவ்வாண் மீது ஆசைப்பட்டு அவரை அபகரித்ததும் ஒரு குற்றமாகும். தகாத உறவுகளினால் உண்டாகும் இது போன்ற நடவடிக்கைகளால் ஏற்படும் பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் தான்தோன்றித்தனமாக கணவன் மனைவி வாழ்வில் குறுக்கிட்டு அபார மரணத்திற்கு வித்திட்ட கள்ளக் காதலிக்கும் பங்குண்டு.
உண்மைதான்.ஆனால் தீர்ப்பு அப்படி இல்லையே?
ReplyDeleteநன்றி மாசிலா
வழக்கறிஞரின் வாதம் இன்று விளக்காக இல்லை என்பதே உண்மை!
ReplyDeleteசரிதான் ஐயா
Deleteஇதனால் குற்றம் பெருகவே செய்யும். நீதிமன்றம் தவறு செய்து விட்டது...
ReplyDeleteநாம் அதைச் சொல்லமுடியாது,it is their interpretation of law taking into consideration the circumstances. என்ன செய்ய!
Deleteநன்றி சரவணன்
அந்தக் கணவன் செய்தது நியாயமில்லை. இது மாதிரி அந்த மனைவி செய்திருந்தால் இவன் பொறுத்திருப்பானா? சட்டம் அவனை சும்மா விட்டிருக்கலாம். ஆனால் அவன் மனச்சாட்சி அவனை அணுவணுவாகக் கொல்லும்.
ReplyDeleteஅதைத்தான் பாரதி சொன்னான் ஐயா”கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அது பொதுவில் வைப்போம்” என்று!
Deleteநன்றி