Saturday, September 28, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-6

                
                         தேய்ந்து வளர்ந்து மீண்டும் தேய்ந்து...................நிலாவின் நிலை!
                                                          களங்கங்களுடன் !

                                                              அழகிய பெண்
                                                    மாசு மருவற்ற முகப் பொலிவு!
                                             

         ” அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
            மறுவுண்டோ மாதர் முகத்து”---திருக்குறள்-1117

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்  உள்ளது போல் இந்த மாதர் முகத்தில்களங்கம் உண்டோ ?இல்லையே!

உண்மைதானே!
"நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்"(நா.பா-குறிஞ்சி மலர்)

"கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”(நாமக்கல் கவிஞர்)




4 comments:

  1. இதுவும் அருமைதான்! மேலும் தொடர வேண்டுகிறேன்!

    ReplyDelete
  2. அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. எங்கேயோ போயிட்டீங்க! பட விளக்கம் அருமை.

    ReplyDelete