குட்டனும் அவர் நண்பர் சுட்டனும்
சந்திக்கிறார்கள்.
சுட்டன்:என்ன குட்டன்!பதிவர் திருவிழா
பதிவர் திருவிழான்னு பெனாத்திக்கிட்டே
இருந்தீங்களே? போனீங்களா?
குட்டன்:பின்ன!போகாமல் இருப்பேனா?
சுட்டன்:அப்ப உங்க முகத்தைக்
காட்டிட்டீங்க?!
குட்டன்:அதான் இல்ல.நான் அங்க பதிவு
பண்ணவே இல்ல!
சுட்டன்:லேட்டாப் போனீங்களா?
குட்டன்:இல்லை ;9 மணிக்கு முன்னாலயே
போயிட்டேன்.நான் போன போது தலைவர் புலவர் ஐயா,முன்னிலை சென்னைபித்தன்,அமைப்புக்குழு
உறுப்பினர்கள் எல்லாம் வந்துட்டாங்க.ஆனா நிகழ்ச்சி 9 மணிக்கு ஆரம்பமாகல !
சுட்டன்:ஏன்?
குட்டன்:பெரும்பான்மைப் பதிவர்கள்
லேட்டாத்தான் வந்தாங்க!ஆனாப் பாரு சுட்டன் ,சில பதிவர்கள் இரவு தூங்கம அரங்க அமைப்புகளில்
இருந்திருக்காங்க.என் காதில் மதுமதி,ரூபக் ராம்,இன்னும் ஓரிரு பெயர்கள் விழுந்தன.பாவம்
மிகவும் களைத்துக் காணப்பட்டாங்க.நான் பதிவு பண்ணாமக் காத்திருந்து ஒரு ஓரமா உள்ள
போய் உட்காந்துக்கிட்டேன்!
சுட்டன்:என்னென்ன நிகழ்ச்சிகள்?
குட்டன்:நிகழ்ச்சி நிரலில் கண்ட படிதான்;சுரேகா
தொகுத்து வழங்கினார். புலவர், சென்னைபித்தன் பேச்சுக்குப் பின் பதிவர்களின் சுய
அறிமுகம்.117 பதிவர்கள் அறிமுகம் செஞ்சுக்கிட்டாங்க. ஓரிருவர் தவிர மற்றவர்கள்
சுருக்கமா முடிச்சுக்கிட்டாங்க.12.15க்குப் பாமரன் அவர்கள் பேச ஆரம்பித்தார்.தன்
வெகு சுவாரஸ்யமான உரையை சரியா ஒரு மணிக்கு முடிச்சுக்கிட்டார். அதுக்கப்புறம் மிக
முக்கியமான நிகழ்ச்சி!சாப்பாடு!
பத்து மணி வாக்கில குளுகுளு ஜூஸ் ஒண்னு
குடுத்தாங்க!11 மணிக்கு மேல சூப்பர் டீ!சில பதிவர்கள் ரெண்டு டீ குடிச்சாங்கன்னா
பாத்துக்கயேன்!
சுட்டன்:சாப்பாடு எப்படி?
குட்டன் :அசைவம் நல்லா இருந்திருக்குமோ
என்னவோ?.நான் தயி சாதம் மட்டுமே சாப்பிட்டேன்!
சுட்டன்:மதியம் நிகழ்ச்சிகள்?
குட்டன்:ஹி,ஹி.மாலை ஒரு திருமண
வரவேற்புக்குத் தங்கமணியைக் கூட்டிட்டுப் போக வேண்டியிருந்தது அதனால மதியம் வீட்டுக்குப்
போயிட்டேன்!நேரலை பார்க்கலாம்னா அது அவ்வளவு சரியா வல்ல!
இவ்வளவு சிறப்பா எந்தவிதமான பிரச்சினையும் இன்றி விழாவை நடத்தி முடித்த ,புலவர் தலைமையில் இயங்கிய இளைஞர் படைக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
அடுத்த ஆண்டு மதுரையா,ஈரோடா,கோவையான்னு
தெரியலை,ஒலிம்பிக் போட்டிக்கு நாடுகள் போட்டி போடற மாதிரி இதுக்கும் போட்டியா
இருக்காம்!
எந்த ஊரா இருந்தாலும் போயிற
வேண்டியதுதான்!
வர்ட்டா?
விழா வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி வேல்
Deleteசெய்திகளை முந்தித் தருவதில் நம்பர் 1.....
ReplyDeleteநாளிதழ்களில் ‘தினத்தந்தி’.
பதிவர்களில் குட்டன்!
செய்திகளை முந்தித் தருவதில் நம்பர் 1.....
ReplyDeleteநாளிதழ்களில் தினத்தந்தி.
பதிவர்களில் குட்டன்.
//செய்திகளை முந்தித் தருவதில் நம்பர் 1.....
Deleteநாளிதழ்களில் தினத்தந்தி.
பதிவர்களில் குட்டன்.//
:-))) நன்றி
ஹலோ குட்டன்... பதிவு செய்யுற இடத்தில நான் இருந்தேனே, உங்களைப் பார்க்கவே இல்லையே... கூட்டம் அதிகமா இருக்கும்போது உள்ள நுளைஞ்சிட்டீங்க்களோ...
ReplyDeleteஓரமாப் போயிட்டேன்!
Deleteநன்றி
.இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?
ReplyDeleteவாழ்த்துகள்..!
நன்றி
Deletesuper speed
ReplyDeleteவேற வேல!
Deleteநன்றி
nantri....
ReplyDeleteநன்றி
Deleteஎஸ்கேப் ஆன காரணம் இப்பத்தான் புரியுது
ReplyDeleteஹா ஹா
Deleteநன்றி
பேசாமல் முகமூடியை கழட்டி விடுங்கள். இதனால் யாரும் உங்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.
ReplyDeleteமுகமூடியைக் கழட்டலாமா,முகமூடிக்காரனையே காணாமல் போக்கி விடலாம என யோசித்துக் கொண்டிருக்கிறேன்
Deleteநன்றி இளங்கோ ஐயா.
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது அறிந்து மகிழ்ச்சி. என்னால்தான் கலந்துகொள்ள முடியவில்லை.
ReplyDeleteஉங்களைப் பற்றி பலர் விசாரித்தார்கள்
Deleteநன்றி சார்
மதுரை ல வைக்கன்பா நானும் வரேன்
ReplyDeleteஅவரவர் சௌகர்யம்!
Deleteநன்றி
நிகழ்சிக்கு வந்திருந்தீங்களா?! என்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கலாம்ல்ல?!
ReplyDeleteஅஞ்சா சிங்கம் என்னவோ சொல்றார் பாருங்க!
Deleteநன்ரி
நீங்க வந்திருந்திங்களா நான் பார்க்கவேயில்ல...
ReplyDeleteஅரங்குக்குள் நுழையுமுன்பே உங்களிச் சந்தித்து விட்டேன்!
Deleteநன்றி
நானும் பார்த்த ஞாபகம் இல்லையே:)) உங்களை அறிமுகப்படுத்திக்கொண்டீர்களா?
ReplyDeleteமேடையில் அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை.அஞ்சாசிங்கத்தின் பின்னூட்டம் உங்களுக்கும் பொருந்தும்!
Deleteநன்றி சார்
ராஜி
ReplyDeleteநிகழ்சிக்கு வந்திருந்தீங்களா?! என்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்கலாம்ல்ல?!////
//
எக்கா நீங்க அவருகிட்ட பேசுனீங்க .. அவர்ன்னு தெரியாமல் ..............
அது உங்களுக்கு எப்படித் தெரியும்?!
Deleteநன்றி
ம்க்கும் ஒரு வார்த்தைல அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்திருக்கலாமே!
Deleteவாழ்த்துகள்..
ReplyDeleteஎன்னாது குட்டன் மட்டன் சாப்புடமாட்டாரா ....?
ReplyDeleteயாருக்கும் தெரியாம உளவுத்துறை போல போயிட்டு வந்துட்டீக ...! நீர் ஒரு குசும்புக் குட்டன்யா ...!
அறிமுகம் செய்து கொள்ளும் அளவுக்குப் பெரிய ஆள் இல்லை!
Deleteநன்றி
அட! நீங்களும் வந்திருந்தீங்களா? சந்திக்காம விட்டுட்டேனே!
ReplyDeleteநான் உங்களைப் பார்த்தேனா?!
Deleteநன்றி