Tuesday, September 10, 2013

மாமியாருடன் ஓடிப்போன மருமகன்!



என்ன முருகேசா!எத்தன நாளு இப்படிக் கல்யாணம் கட்டாம இருக்கப் போறே?வயசு 25 ஆயிடுச்சில்ல.சீக்கிரம் முடிச்சிடுமுத்துசாமி சொன்னார்.

நானும் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்;சரியா அமையலையேஎன்றான் முருகேசன்.

நம்ம குறுக்கு வீதி கணேசனுக்கு  ஒரு பொண்ணு இருக்குது.18 வயசு ஆகுது. கணேசனும் அவன் பொண்சாதியும் கட்டட வேலை பாக்காங்க.பொண்ணும் ஏதோ கடையில வேலை பாக்குது.நான் சொல்றேன்.பொண்ணைப் பாரு.பிடிச்சிருந்தா முடிச்சுடலாம்

சரி,சித்தப்பா

முருகேசன் பெண்ணைப் பார்க்கபோனான்.

பிடித்திருந்தது;

ஆனால் பெண்ணின் அம்மாவை அதை விடப் பிடித்திருந்தது!

அவன் ஒப்புதலுக்குப் பின் தட்டு மாற்றிக் கொண்டார்கள்,

மூன்று மாதத்துக்குப் பின் திருமணத் தேதி குறித்தார்கள்.

முருகேசன் அடிக்கடி அவர்கள் வீட்டுக்குப் போக ஆரம்பித்தான்,பெண்ணைப் பார்க்கும் சாக்கில்.

ஆனால் அவன் போனது வருங்கால மாமியாருக்காக!

ஒவ்வொரு முறையும் இனிப்பு,பலகாரம், மாமியாருக்கு ரிப்பன் இப்படி ஏதாவது வாங்கிப் போனான்.

அவளுக்கும் அவனைப் பிடிக்க ஆரம்பித்தது.

நெருக்கம் அதிகமானது.

ஒரு நாள் சீக்கிரமே வீடு திரும்பிய மகள்,தாயையும்,வரப்போகும்  கணவனை யும்  எசகு பிசகான நிலையில் பார்த்து விட்டாள்

தன் தந்தையிடமும் சொல்லி விட்டாள்.

அதன் பின் என்ன நடந்ததோ தெரியவில்லை.

காலையில் கண்விழித்துப் பார்த்தாள் மகள்.தாய் வீட்டில் எங்கும் இல்லை.
அவள் துணி மணிகளையும் காணோம்.

தெரிந்த இடங்களில் தேடினார்கள்.

அவ்வாறு தேடும்போது ஒரு திடுக்கிட வைக்கும் செய்தி கிடைத்தது.

முருகேசனையும் காலை முதல் காணவில்லை!

ஆம்!அவர்கள் ஓடிப்போய் விட்டார்கள்!

மருமகப்பிள்ளை வர இருந்த மாமியாருடன் ஓடிப்போய் விட்டான்!

என்னய்யா கதை விடுகிறீர் என்கிறீர்களா?

இது கதையல்ல;நிஜம்!

கீழே காணும் செய்தியிலிருந்து சித்திரிக்கப் பட்டது!

செய்தி கீழே...........

//பள்ளிக்கரணைக் காவல்நிலைய அதிகாரிகள், இன்னும் சில நாட்களில் தான் மணம் செய்து கொள்ள இருக்கும் பெண்னின் தாயுடன் ஓடிப்போன 25 வயது வாலிபரைத் தேடி வருகிறார்கள் கட்டிடத் தொழிலாளியான அந்த இளைஞன், திருமணம் நிச்சயமான பின்,அடிக்கடி பெண்ணின் வீட்டுக்குப்போய் வரும் போது பெண்ணின் அம்மாவுடன் ஏற்பட்ட நெருக்கம் ஓடலில் முடிந்தது!//
(டைம்ஸ் ஆஃப் இந்தியா;சென்னைப் பதிப்பு-08/09/2013)

என்ன கொடுமை இது சரவணா?!


17 comments:

  1. கலிகாலம் என்பது உண்மை தான் போலிருக்கிறது!

    ReplyDelete
  2. கலி முத்திடுச்சுன்னு சும்மாவா சொல்றாங்க. த்த்த்த்த்தூ

    ReplyDelete
    Replies
    1. சந்தேகமின்றிக் கலி முத்திடுச்சு!
      நன்றி

      Delete
  3. Replies
    1. இப்படியும் நடக்குதே!
      நன்றி

      Delete
  4. கிலி ஏற்படுத்தும் கதை
    கலிகாலம் என்பதுவும் சரிதான்

    ReplyDelete
    Replies
    1. கலி என்னவும் செய்யும்!
      நன்றி ரமணி ஐயா

      Delete
  5. இதெல்லாம் அடிமட்டத்துல ரொம்பவே சகஜம்ங்க. ப்ரூஃப் வேணும்னா டெய்லி ஜீதமிழ்ல ராத்திரி 8.30 மணிக்கி போடற 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சிய பாருங்க..

    என்னுடைய சொந்த செலவில் சூன்யம் பதிவில் முன்கதை லிங்கை சரிசெய்துள்ளேன். பார்த்துவிட்டு சொல்லுங்களேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கிறேன் ஐயா!
      (இரண்டையும்!)
      நன்றி

      Delete
  6. பாலசந்தர் படத்துல பார்த்தா ஒத்துக்கறாங்க. நிஜத்துல ஏத்துக்க மாட்டீங்கறாங்க. அப்படீன்னு ஓடிப்போனவர் சொன்னதா தகவல். ஹிஹிஹி

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கை சினிமாவாகிறதா?சினிமா வாழ்க்கையாகிறதா?-பட்டிமன்றத் தலைப்பு!(அடுத்த பதிவர் மாநாட்டில்!)
      நன்றி ஆவி

      Delete
  7. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/09/blog-post_39.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  8. பார்த்தேன்;மகிழ்ந்தேன்;உங்களுக்கு நன்றி சொல்கிறேன்!

    ReplyDelete
  9. என்ன கொடுமை இது சரவணா?!

    ReplyDelete