தெருவெங்கும் வேட்டுச் சத்தம்;மத்தாப்பு
வெளிச்சம்
நெருங்கி விட்ட தீபாவளிக்குக் கடைசி நேர
வாங்குதல்கள்
சிறுவர்களின் ஆரவாரம்;பெரியவர்கள் பேச்சுக்குரல்
பக்கத்து வீடுகளில் பலகார நெய் மணங்கள்
ஏக்கத்தோடு பார்த்திருக்கும் என் பையன்
சின்னராசு
அக்காவாய் அவனை அணைத்திருக்கும்
அன்னக்கொடி
உடுப்பதற்குத் துணியில்லை,வெடிப்பதற்கு
வெடியில்லை
அடுத்தவேளை சோறில்லை,அடுப்படியில் பூனை!
பலகாரமெல்லாம் மணத்தை முகர்ந்து மகிழ மட்டும்!
ஆனை வெடி பூனை வெடி அனைத்திலும் அவர்
உழைப்பு
ஆனா பெரிய வெடியா ஃபேக்டரியிலே வெடிக்க
வெடிகளைச் செய்தவர் வெடியிலே போய்ட்டாரே!
விடிஞ்சாத் தீபாவளி .எங்களுக்கு விடிவு
எப்போ?
என்னைக்கு நாஞ்ச் சிரிக்க- எங்களுக்கு
என்னைக்குத் தீபாவளி?
----ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டிக்கான கவிதை
சிறப்பா இருக்கு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சுரேஷ்
Deleteசிந்திக்க வைக்கும் சிறப்பான படைப்பு.
ReplyDeleteபாராட்டுக்கள்.
வெற்றிகிட்ட வாழ்த்துகள்.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா
Deleteஏக்கத்தோடு என்றிருக்க வேண்டுமோ ? ...பாருங்க.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நெடில் குறிலாகி விட்டது!சரி செய்து விட்டேன்.
Deleteநன்றி தாய்க்குலமே!
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி புலவர் ஐயா அவர்களே
Deleteவணக்கம்
ReplyDeleteதீபாவளிச் சிறப்புக் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாய்ப்புக் கொடுத்தமைக்கு நன்றி
Deleteஅருமையான கவிதை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி அய்யா!
Deleteவணக்கம்
ReplyDeleteதீபாவளிச் சிறப்புக் கவிதை வந்து கிடைத்து விட்டது மிக மகிழ்ச்சியாக உள்ளது உங்களின் கவிதை நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அவர்களின் நிலையை எடுத்துச் சொல்லும் கவிதை சோகத்துடன் சிந்திக்க வைக்கிறது.
ReplyDeleteவெற்றிக்கு வாழ்த்துகள்.
வாழ்த்துக்கு நன்றி சகோ!
Deleteபோட்டிக் கவிதை.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சௌந்தர் சார்
Deleteசிறப்பு...
ReplyDeleteபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கு நன்றி தனபாலன்
Deleteகவிதை கலக்கல் ...
ReplyDeleteநன்றி அரசன்
Deleteதீபாவளி துவங்கி விட்டதோ ?
ReplyDeleteஅருமை. வாழ்த்துக்கள் !
நன்றி ஸ்ரவணி அவர்களே
Deleteஅடே குட்டனுக்கு தீபாவளியும் தீபாவளிப் பரிசும் ரெடி ஆயிருச்சுப் போலையே
ReplyDeleteபரிசுக்கெல்லாம் ஆசை இல்லை சீனு!நீங்கள் சொன்னதே பரிசுதான்
Deleteநன்றி
வருஷா வருஷம் இதே கொடுமைதான் நடக்கிறது. மற்றவர்கள் மகிழ தங்களுடைய வாழ்வையே பலியாக்கும் இத்தகையோர்களை மனதில்கொண்டாவது வெடிகளை வெடித்து மகிழ்வதை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். கவிதை நறுக்குன்னு இருக்கு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமாம் சார்,இதற்குத் தீர்வே கிடையாதா?
Deleteநன்றி
மனதைத் தொட்ட கவிதை........
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
நன்றி வெங்கட் நாகராஜ்
Deleteவாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ரூபக் ராம்
Deleteநம் மனம் மகிழ தங்கள் வாழ்வை இழக்கும் மனிதர்களின் அவல நிலையை உங்கள் கவிதை மூலம் காட்டியிருக்கிறீர்கள். குட்டன். பாராட்டுக்கள்!
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அம்மா
Deleteகவிதை நன்று வாழ்த்துக்கள்
ReplyDelete