காதலில் விழுவதென்பது,அண்ணாசாலை
எல்.ஐ.சி.கட்டிடத்திருந்து குதிப்பதைப் போன்றது!
மூளை சொல்கிறது,இது ஆபத்தானது என்று.
இதயம் சொல்கிறது,உன்னால் பறக்க முடியும்
என்று!
...........................................
காதல் என்பது எல்லோரும் பேசும்
மொழி;ஆனால் அதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
.....................................................................
தயக்கத்தில் தொடங்கி,வருத்தத்தில்
முடிந்தாலும் இடைப்பட்ட காலம் எவ்வளவு இனிமை யானது?!
.......................................
காதல் ஒரு வலி என்று சொல்வர் பலர்
ஆனால் தனிமை ஒரு வலி
புறக்கணிப்பு ஒரு வலி
இழப்பு ஒரு வலி
ஆனால் இவ்வலிகளுக்கெல்லாம் மருந்து
காதலன்றோ?!
.........................................................
வயது என்பது காதலிலிருந்து
காப்பதில்லை;ஆனால் காதல் என்பது சிறிதாவது வயதாவ திலிருந்து காக்கத்தான் செய்கிறது!
.............................................................
காதல் என்பது எப்போதும் சிறிது
பைத்தியக்காரத்தனம் கலந்தே இருக்கிறது.ஆனால் அந்தப் பைத்தியக்காரத்தனத்திலும் ஒரு
தெளிவு கலந்திருக்கிறது !
.....................................................
கண்களால் காண முடியாத எதையோ இதயம் கண்டு விடுகிறது; உண்மைக் காதல் பிறக்கிறது!
.......................................................
ஆழ்ந்து காதலிக்கப்படுவது, சக்தியைக் கொடுக்கிறது;ஆழ்ந்து காதலிப்பது,துணிச்சலைக் கொடுக்கிறது.
........................................................
ஆதலினால் காதல் செய்வீர் ஜகத்தீரே!
காதல் நல்லதுதான்! சரியான வயதும், சரியான நபரை தேர்ந்தெடுக்கும் பக்குவமும் இருந்தால்!!
ReplyDeleteசரியாச் சொன்னீங்க அக்கா!
Deleteவயது என்பது காதலிலிருந்து காப்பதில்லை;ஆனால் காதல் என்பது சிறிதாவது வயதாவ திலிருந்து காக்கத்தான் செய்கிறது!//
ReplyDeleteகரெக்டா சொன்னீங்க :)
நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பாதே என்பார்கள் ...ஆனால் நான் காதல் விஷயத்தில் குட்டனை நம்புகிறேன் !
ReplyDeleteநம்பினார் கெடுவதில்லை
Deleteநன்றி ஜோக்காளி
அருமை!
ReplyDeleteநன்றி பாலா
Deleteகாதல் மொழிகள் இனித்தது! சிறப்பான தொகுப்பு! நன்றி!
ReplyDelete// இவ்வலிகளுக்கெல்லாம் மருந்து காதலன்றோ?!//
ReplyDeleteஆனால் தெய்வப்புலவர் 1102 ஆவது குறளில்
‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.’
என சொல்கிறாரே!
காதல் இருந்தால்தானே அது சாத்தியம்!
Deleteநன்றி
adadaa....
ReplyDelete:))
Deleteநன்றி
காதல் என்பது எல்லோரும் பேசும் மொழி;ஆனால் அதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
ReplyDelete........................................................
.காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது
உங்களால் முடியாததா?
Deleteநன்றி
உங்களுக்குள் காதல் வந்து விட்டதோ ?
ReplyDeleteஉங்கள் கேள்விக்குப் பதில் அடுத்த பதிவு!
Deleteநன்றி சசிகலா
வயதின் ஏற்றத்திற்கேற்ப காதலும் ஏற்றம் பெறும்!
ReplyDeleteஅய்யா சொன்னாச் சரிதான்!
Deleteநன்றி