Showing posts with label பெண். Show all posts
Showing posts with label பெண். Show all posts

Thursday, March 27, 2014

வயசுக்கு வந்த பெண்!



இன்று காலை தங்கமணியின் சூடான செய்தி—”என்னங்க! 4-பி ராதா மக கலா பெரியவ ளாயிட்டா!”

எவ்வளவு முக்கியமான செய்தி பாருங்கள்.

சீனிவாசன் பதவி விலகினால் என்ன,விலகாவிட்டால் என்ன;

அரசியலில் ஊழல்கள் நடந்தால் என்ன நடக்காவிட்டால் என்ன;

தங்கமணிகளுக்கு இது முக்கியச் செய்திதான்!

ஆனால் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.

ஆம்!ஒரு குழந்தை பதினோரு வயதில் பெரிய மனுசி ஆகி விட்டாள்.

புதிய பொறுப்புகள் ,புதிய கவலைகள் அவளுக்கும் அவள் பெற்றோருக்கும் வந்து சேர்ந்து விட்டன.

இனி திரும்பி வருமா அந்தகள்ளமில்லாக் குழந்தைப் பருவம்?

இப்பொதெல்லாம் பழைய காலத்தை விடப் பெண்கள் விரைவிலேயே பூப்பெய்தி விடுகிறார்களே,ஏன்?

மாறி வரும் வாழ்க்கைச் சூழல்கள்,நாகரிகம்,உணவுப் பழக்கங்கள்,பல காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம்,இவையெல்லாமே சில காரணங்கள்.

திருமணம் 18 வயதில்தான் எனச் சட்டம் சொல்கிறது.

ஏனெனில் அது வரை மனம் முதிர்ச்சியடைவதில்லை.

ஆனால் வயது ,பருவம் முதிர்ச்சியடைந்து விட்டதே!

பள்ளிப் பருவத்திலேயே காதல் தொடங்கி விடுகிறதே!

பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டல்லவா இருக்க வேண்டிய இருக்கிறது!

ஆக தற்காலத்தில் பெற்றோர்களின்பொறுப்பு,கவலை எல்லாம் அதிகமாகி விட்டது .

பொறுப்பு அதிகமாகி விட்டது என்பதைக் குறிக்கவே இதைச் சொல்கிறேன்.திருமண வயதைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் எனத் தவறாக எண்ண வேண்டாம்!

முன்பெல்லாம் இந்த நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன்--முறைமாமன் ஓலைத்தட்டி பின்னி அதன் மறைவில் பெண் அமர்வதையும் நீராட்டு என்பது பெரும் விசேசமாகக் கொண்டாடப் படுவதையும். இப்போதெல்லாம் கிராமங்களில் கூட இதெல்லாம் நடக்கிறாதோ என்னவோ தெரியாது.

சில பெண்கள் பூப்பெய்தாமலே இருந்து விடுகிறார்கள்.

அவ்வாறு பூப்பெய்தாமலே இருந்து விடும் பெண்களை ‘இருசி’ என்று சொல்வார்கள்

அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய   தனது தென்னங்கீற்று என்ற நாவலை திரு கோவி மணிசேகரன் இயக்கினார்.படம் தமிழில் தோல்வி அடைந்தது

சரி, பெண் வயசுக்கு வருவதைப் பெரிதாகச் சொல்லும் நாம் ஆண் வயதுக்கு வருவதைக் கண்டு கொள்வதில்லையே ஏன்?

ஒரு சிறுவன் வயசுக்கு வருவது அவன் பெற்றோருக்கு என்ன அவனுக்கே தெரியாது என நினைக்கிறேன்!

.

Saturday, September 28, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-6

                
                         தேய்ந்து வளர்ந்து மீண்டும் தேய்ந்து...................நிலாவின் நிலை!
                                                          களங்கங்களுடன் !

                                                              அழகிய பெண்
                                                    மாசு மருவற்ற முகப் பொலிவு!
                                             

         ” அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
            மறுவுண்டோ மாதர் முகத்து”---திருக்குறள்-1117

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்  உள்ளது போல் இந்த மாதர் முகத்தில்களங்கம் உண்டோ ?இல்லையே!

உண்மைதானே!
"நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்"(நா.பா-குறிஞ்சி மலர்)

"கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”(நாமக்கல் கவிஞர்)




Thursday, February 7, 2013

ஒரு பெண்ணின்அழகு- கேசாதி பாத வர்ணனை!

சங்க இலக்கியத்தில் ஒரு பெண்ணின் அழகு தலை முதல் கால் வரை அருமையாக வர்ணிக்கப் பட்டிருக்கிறது.

கீழ் வரும் பாடற்பகுதி பொருநராற்றுப்படையின் பகுதியாகும்.



//அறல்போற் கூந்தல் பிறைபோல் திருநுதற்
கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை மழைக்கண்
இலவிதழ் புரையும் இன்மொழித் துவர்வாய்ப்
பலஉறு முத்திற் பழிதீர் வெண்பல்
மயிர்குறை கருவி மாண்கடை யன்ன
பூங்குழை ஊசற் பொறைசால் காதின் 
நாண்அடச் சாய்ந்த நலங்கிள ரெருத்தின்
ஆடமைப் பணைத்தோ ளரிமயிர் முன்கை
நெடுவரை மிசைஇய காந்தள் மெல்விரற்
கிளிவா யொப்பி னொளிவிடு வள்ளுகிர்
அணங்கென உருத்த சுணங்கணி யாகத்  
தீர்க்கிடை போகா ஏரிள வனமுலை
நீர்ப்பெயற் சுழியி னிறைந்த கொப்பூழ்
உண்டென வுணரா உயவும் நடுவின்
வண்டிருப் பன்ன பல்காழ் அல்குல்
இரும்பிடித் தடக்கையிற் செறிந்துதிரள் குறங்கின் 
பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட் கொப்ப
வருந்துநாய் நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக் கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத் தன்ன மறுகுநீர் மொக்குள்  
நன்பக லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி லுருவிற் பெருந்தகு பாடினி  //

இங்கு பாடினியின் அழகு இவ்வாறு வர்ணிக்கப்படுகிறது

பாடினி என்றால் பாடகி ;பாணர் குலப் பெண்,பாடல், கூத்தில் தேர்ந்தவள்

அவள் கூந்தல் அறல் போல் இருக்கிறது.ஆற்றின் நீரோட் டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைக் காண லாம்; அவையே அறல் எனப்படும்;அது போன்ற கூந்தல்

அவளது நெற்றி பிறைநிலா போல் இருக்கிறது.இலக்கியத்தில் எண்ணாட்டிங்கள் என்று சொல்வது  மரபு.

புருவம் வில் போல் வளைந்து இருக்கிறது.

அழகிய இளமையான குளிர்ந்த கண் .

மலரிதழ் போன்ற இனிய சொல் பேசும் சிவந்த வாய்

குற்றமற்ற நல் முத்துக்கள் சேர்ந்தது போன்ற  வெண்மையான பல் 

முடி வெட்டும் கத்திரியின் காது போன்றும், பொலியும் மகர நெடுங்குழை அசைவதுமான காது

நாணமிகுதியால் பிறரை நோக்காது சாய்ந்திருக்கும் கழுத்து

அசைகின்ற மூங்கில் போன்ற பருத்த தோள்

நெருக்கமான மயிருடைய முன்கை

நெடிய மலையின் உச்சி போன்ற,காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள்  

கிளியின் வாய் போன்ற ஒளி வீசும் நகங்கள்.

பிறரை வருத்தும்,பசலை படர்ந்த,ஈர்க்கும் நடுவே செல்ல முடியாத நெருங்கிய, எழுச்சியும் இளமையும் உடைய மார்பகங்கள் 

நீரில் தோன்றும் சுழி போன்ற சிறந்த இலக்கணமமைந்த தொப்புள்.

பிறர் பார்த்தால் இருக்கிறதே  தெரியாத வருந்தும் இடை

பல வண்டுகள் இருப்பதைப் போன்ற பல மணி கோத்த வடங்களைய உடைய   மேகலை  அணிந்த அல்குல்.


பெரிய பிடி யானையின் பெருமையை யுடைய கைபோல ஒழுக வந்து மெல்லிதாகத் தம்மில் நெருங்கி ஒன்றித் திரண்ட துடை .

கணைக்காலுக்கு இலக்கணமாய்ப் பொருந்தின மயிர் ஒழுங்கு பட்ட ஏனை இலக்கணங்கள் திருந்தின கணைக்காலுக்குப் பொருந்த அமைந்த ஓடியிளைத்த நாயினது நாக்கு போன்ற சிறிய அடி.

அரக்கை உருக்கின தன்மை ஒத்த நிலத்தில் நடக்கையில் கல் எனும் பகை குத்தி உண்டான இருவாட்சி பூத்தது போல் நீர் ததும்பும் கொப்பளம்.

மயில் போன்ற பாடினி!
 
 


Tuesday, November 27, 2012

உறை அணிவது மிக அவசியமானது,பாதுகாப்பானது!i



உறை மிக அவசியமானது.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி.

உறை அணிவது பாதுகாப்பானது.

பிரச்சினைகளைத் தவிர்க்க வல்லது.

ஆண்கள்  ஷூ அணியும்போது அவசியம் காலுறை அணிகின்றனர்.

ஆனால் ஷூ அணியும்போது மட்டுமல்லாமல்,வேறு நேரங்களிலும் அது அவசியமாகிறது .

குளிர் பிரதேசங்களில் வசிக்கும்போது காலுறை மிக அவசியம்.

குளிர் அலை அடிக்கும் நேரங்களில் அது அணியாமல் வெளியில் செல்வது சரியல்ல.

அது மட்டுமல்ல.

பலருக்குக் குதிகாலில் வெடிப்புகள் வரும்-பித்தவெடிப்பு என்று சொல்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள் காலுறை அணிவது  மிக அவசியம்.

செருப்பு அணியும்போது கூடக் காலுறை அணிய வேண்டும்.இதற்கெனவே கட்டை விரலுக்குத் தனியாக இடம் ஒதுக்கப்பட்ட காலுறைகள்  இருக்கின்றன.

பெண்கள் இத்தகைய காலுறைகளையே அணிகிறார்கள்.

அது தவிர கையுறை.இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கையுறை அணிகி றார்கள்.

வட மாநிலங்களில் குளிர்காலங்களில் கையுறை அணியாமல் வண்டி ஓட்ட முடியாது.

தோல் கையுறையோ,கம்பளிக் கையுறையோ அணியலாம்.

சென்னையில் கூடப் பல பெண்கள் முழங்கை வரை மூடிய கையுறை அணிந்து வண்டி ஓட்டுவதைப் பார்க்கிறோம்.

அநேகமாக அது வெள்ளை நிறமாக இருக்கும்.

வெயிலில் செல்வதால் கைகள் கருப்பாகி விடாமல் இருக்க அணிகிறார்கள் எஎ எண்ணுகிறேன்.

குளிரில் ஒரு குரங்குக் குல்லா அணிகிறார்கள்.

அது கூட ஒரு தலையுறைதான்;குளிரிலிருந்து பாதுகாக்கிறது.

அதுதவிர,வீட்டில் தலையணை,சோஃபா இவை அழுக்காகாமல் இருக்க அவற்றுக்கும் உறை அணிவித்துப் பாதுகாக்கிறோம்.

உறை பாதுகாக்கிறது .

மிக அவசியமானது.

வேறு ஏதாவது உறை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!