இன்று காலை தங்கமணியின் சூடான செய்தி—”என்னங்க!
4-பி ராதா மக கலா பெரியவ ளாயிட்டா!”
எவ்வளவு முக்கியமான செய்தி பாருங்கள்.
சீனிவாசன் பதவி விலகினால் என்ன,விலகாவிட்டால்
என்ன;
அரசியலில் ஊழல்கள் நடந்தால் என்ன நடக்காவிட்டால்
என்ன;
தங்கமணிகளுக்கு இது முக்கியச் செய்திதான்!
ஆனால் எனக்குக் கொஞ்சம் வருத்தம்தான்.
ஆம்!ஒரு குழந்தை பதினோரு வயதில் பெரிய மனுசி
ஆகி விட்டாள்.
புதிய பொறுப்புகள் ,புதிய கவலைகள் அவளுக்கும்
அவள் பெற்றோருக்கும் வந்து சேர்ந்து விட்டன.
இனி திரும்பி வருமா அந்தகள்ளமில்லாக் குழந்தைப்
பருவம்?
இப்பொதெல்லாம் பழைய காலத்தை விடப் பெண்கள்
விரைவிலேயே பூப்பெய்தி விடுகிறார்களே,ஏன்?
மாறி வரும் வாழ்க்கைச் சூழல்கள்,நாகரிகம்,உணவுப்
பழக்கங்கள்,பல காரணங்களால் ஏற்படும் மன அழுத்தம்,இவையெல்லாமே சில காரணங்கள்.
திருமணம் 18 வயதில்தான் எனச் சட்டம் சொல்கிறது.
ஏனெனில் அது வரை மனம் முதிர்ச்சியடைவதில்லை.
ஆனால் வயது ,பருவம் முதிர்ச்சியடைந்து விட்டதே!
பள்ளிப் பருவத்திலேயே காதல் தொடங்கி விடுகிறதே!
பெற்றோர் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டல்லவா
இருக்க வேண்டிய இருக்கிறது!
ஆக தற்காலத்தில் பெற்றோர்களின்பொறுப்பு,கவலை
எல்லாம் அதிகமாகி விட்டது .
பொறுப்பு அதிகமாகி விட்டது என்பதைக் குறிக்கவே இதைச் சொல்கிறேன்.திருமண வயதைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன் எனத் தவறாக எண்ண வேண்டாம்!
முன்பெல்லாம் இந்த நிகழ்வைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள்
திரைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன்--முறைமாமன் ஓலைத்தட்டி பின்னி அதன் மறைவில் பெண் அமர்வதையும் நீராட்டு
என்பது பெரும் விசேசமாகக் கொண்டாடப் படுவதையும். இப்போதெல்லாம் கிராமங்களில் கூட இதெல்லாம்
நடக்கிறாதோ என்னவோ தெரியாது.
சில பெண்கள் பூப்பெய்தாமலே இருந்து விடுகிறார்கள்.
அவ்வாறு பூப்பெய்தாமலே இருந்து விடும்
பெண்களை ‘இருசி’ என்று சொல்வார்கள்
அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப் பற்றிய தனது தென்னங்கீற்று
என்ற நாவலை திரு கோவி மணிசேகரன் இயக்கினார்.படம் தமிழில் தோல்வி அடைந்தது
சரி, பெண் வயசுக்கு
வருவதைப் பெரிதாகச் சொல்லும் நாம் ஆண் வயதுக்கு வருவதைக் கண்டு கொள்வதில்லையே ஏன்?
ஒரு சிறுவன் வயசுக்கு வருவது அவன் பெற்றோருக்கு
என்ன அவனுக்கே தெரியாது என நினைக்கிறேன்!
.
வெட்டுக் குத்து உட்பட சில கிராமங்களில் இன்னும் உண்டு...!
ReplyDeleteஇன்றைக்கு எல்லாமே அவசரம் தான்..!
உண்மைதான் தனபாலன்
Deleteநன்றி
இருசின்னா என்னான்னு நீங்களே சொல்லிட்டீங்க ,முதல் வரியில் 4பி ராதா மகள் கலான்னு சொல்லி இருக்கீங்களே ,இரு சி தெரியும் ,அதென்னா 4பி ?
ReplyDeleteத ம 2
ஃப்ளாட் நம்பர்!
Deleteநன்றி
///சரி, பெண் வயசுக்கு வருவதைப் பெரிதாகச் சொல்லும் நாம் ஆண் வயதுக்கு வருவதைக் கண்டு கொள்வதில்லையே ஏன்?//
ReplyDeleteஇதே கேள்வியைத்தான் என் “ஆப்பிள் கன்னங்களும் .... அபூர்வ எண்ணங்களும்” என்ற கதையில் சீமாச்சூ என்பவன் [கதாபாத்திரம்] கேட்கிறான்.
இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html
படித்தேன் ஐயா!நன்றி
Delete
ReplyDeleteஒரு சிறுவன் வயசுக்கு வருவது அவன் பெற்றோருக்கு
என்ன அவனுக்கே தெரியாது என நினைக்கிறேன்!
மிகச் சரி
நன்றி ரமணி சார்
Deleteஇந்த நாள்ல பத்தாம் கிளாஸ் படிக்கற பெண்களே காலேசு பொண்ணுக மாதிரி இருக்குதுங்க. என்னத்தச் சொல்ல... ஆண் வயதுக்கு வருவது... சைட் அடிக்க ஆரம்பிக்கும் தினம் முதல் என்று தோன்றுகிறது. எனில் அதை எப்படிக் கண்டறிவது என்றால்... ஞ்ஞேஞே தான். நினைவு தெரிஞ்ச நாள் முதலான்னு சொல்ற மாதிரிதான். எப்ப நினைவு தெரிஞ்சுச்சுன்னு யாராலயாவது தேதி குறிப்பிட்டுச் சொல்ல முடியுமோ?
ReplyDeleteமுடியுமா?!
Deleteநன்றி பால கணேஷ்
//இப்போதெல்லாம் கிராமங்களில் கூட இதெல்லாம் நடக்கிறாதோ என்னவோ தெரியாது.//
ReplyDeleteநடக்கிறது. ஆனால் நெருங்கிய சொந்தங்களைக் கூப்பிட்டு விசேஷத்தை நடத்திவிடுகிறார்கள்.
அதுதான் நல்லது!
Deleteநன்றி
இன்னும் சிலர் ஃப்ளெக்ஸ் பேனர் எல்லாம் வைத்து கொண்டாடுகிறார்களே.....
ReplyDeleteதற்போதைய தமிழகப் பயணத்தில் கூட திருச்சியில் இப்படி ஒரு பேனர் பார்த்தேன். :(
பழமையில் ஊறியவர்கள்!
ReplyDeleteநன்றி
இயற்கை நிகழ்வினை பெரிது படுத்தி கொண்டாடுகிறார்கள் இன்றும் என்பது வேதனையான விஷயம்!
ReplyDeleteமிகவும் சிறப்பான பகிர்வு .ஒவ்வொரு பெண்ணைப் பெற்ற தாய்மாருக்கும்
ReplyDeleteஉள்ள கவலையை அவர்கள் உணரவேண்டிய பொறுப்பை உணரவைக்கும்
அளவிற்கு நாசூக்காய் இப் பகிர்வினை எடுத்துரைத்த விதம் மிகவும் பிடித்துள்ளது .
மிக்க நன்றி பகிர்வுக்கு .மென்மேலும் தங்கள் ஆக்கங்கள் தொடர என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் .