அருவருக்கத்தக்க ஏதாவது ஒன்றைப் பார்த்தால்,என்ன
நடக்கும்?
நாம் சொல்வோம்—குமட்டுகிறது(உமட்டுகிறது,ஒமட்டுகிறது
இப்படியும்)
அந்தக் குமட்டலுக்குக் காரணம் அந்தப் பொருள்,அந்தச்
செயல்,அந்த இடம் இருக்கும் நிலை.
அதன் அசிங்கம்
ஒரு முறை எங்கள் அலுவலக ஊழியர் ஒருவர் சொன்னார்”கழிப்பறை
நாறுகிறது. குமட்டு கிறது”என்று.
நேற்று ஐ பி எல் சூதாட்ட வழக்கில்
தீர்ப்புச் சொன்ன உச்ச நீதி மன்ற நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள்”திரு.சீனிவாசன்
கிரிக்கெட் வாரியத் தலைவராக நீடிக்கும் வரை அவரது மருமகன் மெய்யப்பன் மீதான சூதாட்டம்
மற்றும்போட்டி நிர்ணயம் ஆகிய குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை நியாயமாக வெளிப்படையாக
இருக்காது என்பது நன்கு தெரிந்திருக்கும் நிலையில் அவர் பதவியில் நீடிப்பது ’குமட்டுகிறது(nauseating)’”
அவர்
இரு நாட்களில் பதவி விலக வில்லையெனில் நீதிமன்றம் இது சம்பந்தமான உத்தரவைப் பிறப்பிக்க
நேரிடும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
என்ன அழகான சொற் பயன்பாடு!இதை விடச் சிறப்பாக
இடித்துரைக்க முடியுமா?
வாழ்க்கையில் இந்தக் குமட்டல் வேறு காரணங்களினாலும் வருவதுண்டு.
குறிப்பாகக் கருவுற்றிருக்கும் பெண்களுக்குக்
காலை நோய் என்று சொல்லப்படும் இந்தக் குமட்டல் வருவதுண்டு.
சாப்பிட்டதெல்லாம் வாந்தி எடுத்து
விடுவார்கள்.
அது அவர்களுக்கு ஒரு இன்பமான அவஸ்தை.
உறவினர்களுக்கோ மகிழ்ச்சிதரும் ஒரு
செய்தி!
அந்தக்குமட்டல் மற்றவர்
ரசிக்கும்,மகிழும் குமட்டல்.
ஆனால் முதலில் சொன்ன குமட்டல் அருவருப்பால்
விளைந்த குமட்டல்.
குமட்டலை ஏற்படுத்தியது எதுவோ அது சரி
செய்யப்பட்டால்தான் குமட்டல் நிற்கும்.
ஒரே சொல்லில் ,சொல்ல வேண்டிய அனைத்தையும்
சொல்லி விட்டார்கள் நீதிபதிகள்!
அருமையாக சொன்னார்கள்! இன்னும் குமட்டல் நீங்க வில்லை என்பதுதான் வருத்தமான ஒன்று!
ReplyDelete”இந்த நொடி வரை”!
Deleteநன்றி சுரேஷ்
சிமென்ட் மூடை சீக்கிரம் சரிஞ்சிடும் !
ReplyDeleteத ம +1
நிக்குதே!
Deleteநன்றி ஜோக்காளி
ந்ன்றாகச் சொன்னீர்கள் குட்டன்!
ReplyDeleteநன்றி பால கணேஷ் அண்ணா!:)
Delete//குமட்டலை ஏற்படுத்தியது எதுவோ அது சரி செய்யப்பட்டால்தான் குமட்டல் நிற்கும்.//
ReplyDelete‘முதலில் சொன்ன’ என்ற சொற்களை முன்னால் போட்டிருக்கலாம்.
முந்தின வரியில் சொன்னதைத் தொடர்ந்ததால் மீண்டும் சொல்லவில்லை!
Deleteநன்றி ஐயா
எது எதுவோ அது அதுவே மருந்து...!?!@
ReplyDeleteகுறள் பற்றி எழுதி வருவதால் பேசுவதும் குறளாகி விட்டதோ!
Deleteநன்றி தனபாலன் சார்!
இது கூட உறைக்குமா எனத் தெரியவில்லை
ReplyDeleteமுட்டிக் கொண்டுதான் வருகிறது
குமட்டலை விளக்கிச் சொன்ன்விதம் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
”இதெல்லாம் சாதாரணமப்பா!”
Deleteநன்றி ரமணி ஐயா
tha.ma 4
ReplyDeleteசிறப்பாகச் சொல்லி விட்டார் நீதிபதி...
ReplyDeleteஆனாலும் உறைக்குமா....
ஊஹூம்!
Deleteநன்றி வெங்கட்
Sarithaan..
ReplyDeleteநன்றி சீனி சார்
Deleteகழிவறைக் குமட்டலை விட அசிங்கமானது இந்தக் குமட்டல்...
ReplyDeleteஅதே!
Deleteநன்றி ஸ் பை
குமட்டல் ஒவ்வொரு விதம் தீர்வுதான்???
ReplyDelete