”இந்தக் கருத்துக் கணிப்பு
மிக நேர்மையாக,சார்புகள் எதுவும் இன்றி நடத்தப்படுகிறது.
எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் சரியான விகிதாசாரத்தில் கணிப்பில் வாக்களிக்கச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
வாக்களிப்பவர்கள் சொல்லும் வார்த்தைக்குக்
கட்டுப்பட்டு நடப்பவர் பலர் இருக்கும் படியான ஒரு அளவு கோலைக் கருத்தில் கொண்டே இக்
கருத்துக் கணிப்பு நடத்தப் படுகிறது.
உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சீட்டு கொடுக்கப்படும்.அதில் இருப்பவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து குறியிட்டுப் பெட்டியில் போடவும்.
வாக்குப்பதிவு முடிந்த்தும்,வாக்குகள் எண்ணப்பட்டு,கருத்துக்கணிப்பின் முடிவுகள்
அறிவிக்கப்படும்.”
“ஏதாவது கேள்விகள் உண்டா?”
ஐமபது மாணவர்கள் கூடியிருந்த அக்கூட்டத்தின்
முன் நின்று அந்த இளைஞன் சொல்லி முடித்தான்.
கூட்டத்திலிருந்து ஒரு மாணவன் கேட்டான்”இதில்
குறிப்பிடப்பட்டிருக்கும் பெயர்கள் பற்றி ஒரு சந்தேகம்”
”என்ன?”
”கல்லூரிப் பேரழகியைத் தேர்ந்தெடுக்கும்
கருத்துக் கணிப்பு இது.இதில் உள்ள பெயர்கள்.. திவ்யா,மும்தாஜ்,எஸ்தர்,அமர்ஜித் கௌர்.ஆனால் பேரழகிகளில் ஒருத்தி எனச் சொல்லப் படக்கூடிய ராதாவின் பெயர் இதில் ஏன் இல்லை?”
முதல் மாணவன் சொன்னான்”நீ சொல்வது உண்மைதான்.ஆனால்
இது மதச் சார்பற்ற கருத்துக்கணிப்பு.எனவே அந்த அடிப்படையிலேயே பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.நம்
மதச் சார்பின்மையை நாம் நிலை நாட்டுவோம்!”
எல்லா மாணவர்களும் பலத்த கரவொலி எழுப்பினர்
“தலைவன் நீதான்”என ஒருமித்துக் குரல் எழுப்பினர்.
வாக்களிப்பு தொடங்கியது!
'சர்'தான்
ReplyDeleteநெத்தியடி!
ReplyDeleteஇது கருத்து கணிப்பு அல்ல ,கருத்து திணிப்பு !
ReplyDeleteத ம 3
செம! :)
ReplyDeleteகருத்துக்கணிப்பு என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது தெரிந்ததுதானே!
ReplyDeleteம்.....
ReplyDelete