Tuesday, November 27, 2012

உறை அணிவது மிக அவசியமானது,பாதுகாப்பானது!i



உறை மிக அவசியமானது.

ஆணுக்கும் சரி,பெண்ணுக்கும் சரி.

உறை அணிவது பாதுகாப்பானது.

பிரச்சினைகளைத் தவிர்க்க வல்லது.

ஆண்கள்  ஷூ அணியும்போது அவசியம் காலுறை அணிகின்றனர்.

ஆனால் ஷூ அணியும்போது மட்டுமல்லாமல்,வேறு நேரங்களிலும் அது அவசியமாகிறது .

குளிர் பிரதேசங்களில் வசிக்கும்போது காலுறை மிக அவசியம்.

குளிர் அலை அடிக்கும் நேரங்களில் அது அணியாமல் வெளியில் செல்வது சரியல்ல.

அது மட்டுமல்ல.

பலருக்குக் குதிகாலில் வெடிப்புகள் வரும்-பித்தவெடிப்பு என்று சொல்வார்கள்.
அப்படிப்பட்டவர்கள் காலுறை அணிவது  மிக அவசியம்.

செருப்பு அணியும்போது கூடக் காலுறை அணிய வேண்டும்.இதற்கெனவே கட்டை விரலுக்குத் தனியாக இடம் ஒதுக்கப்பட்ட காலுறைகள்  இருக்கின்றன.

பெண்கள் இத்தகைய காலுறைகளையே அணிகிறார்கள்.

அது தவிர கையுறை.இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கையுறை அணிகி றார்கள்.

வட மாநிலங்களில் குளிர்காலங்களில் கையுறை அணியாமல் வண்டி ஓட்ட முடியாது.

தோல் கையுறையோ,கம்பளிக் கையுறையோ அணியலாம்.

சென்னையில் கூடப் பல பெண்கள் முழங்கை வரை மூடிய கையுறை அணிந்து வண்டி ஓட்டுவதைப் பார்க்கிறோம்.

அநேகமாக அது வெள்ளை நிறமாக இருக்கும்.

வெயிலில் செல்வதால் கைகள் கருப்பாகி விடாமல் இருக்க அணிகிறார்கள் எஎ எண்ணுகிறேன்.

குளிரில் ஒரு குரங்குக் குல்லா அணிகிறார்கள்.

அது கூட ஒரு தலையுறைதான்;குளிரிலிருந்து பாதுகாக்கிறது.

அதுதவிர,வீட்டில் தலையணை,சோஃபா இவை அழுக்காகாமல் இருக்க அவற்றுக்கும் உறை அணிவித்துப் பாதுகாக்கிறோம்.

உறை பாதுகாக்கிறது .

மிக அவசியமானது.

வேறு ஏதாவது உறை உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்!

10 comments:

  1. எனக்குத் தெரிந்த உறைகள், கடித உறை, வாள் வைக்கும் உறை போன்றவைகள் தான். வேறு ஏதேனும் உண்டோ?

    ReplyDelete
  2. உங்க உரை!? ரொம்பவே சிறப்பானது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வேற என்ன உறை.. வேற என்ன உறை..

    யோசிக்கிறேன்..ஹாஹாஹா..

    ReplyDelete
  4. எங்கிருந்தாலும் எப்படியிருந்தாலும் சுய பாதுகாப்பு அவசியம் தானே பாஸ்......

    ReplyDelete
  5. இப்பதான் உங்க பதிவை படிச்சோன இவ்வளவு உறை இருகானு ஞாபகத்துக்கு வருது..வேற என்ன உறை ?..நமக்கு தெரியாது பாஸ்..நீங்களே நேரமிருந்தா சொல்லுங்க..கலக்குறீங்க..

    ReplyDelete
  6. 'உறை' 'உரை'க்க வைத்துவிட்டது

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  7. டாஸ்மாக் கடைகளில் உறை அப்படின்னு இருக்காமே!!

    ReplyDelete
  8. ஹா...ஹா... யோசிக்க வைக்கும் குறும்பு...tm8

    ReplyDelete
  9. உறையைப் பற்றி உரைத்த விதம் அருமை குட்டன் ஐயா.

    நல்லாத்தான் யோசிக்கிறீங்க... ம்ம்ம்...

    ReplyDelete
  10. உறை......உறைக்க....உரைத்த உங்கள் உரையாடல் அருமை !

    ReplyDelete