முனிவர் சொன்னார்”மன்னா!சந்தேகம் வேண்டாம்.நான்தான்.இங்கிருந்து
சென்றதும்,பல ஓலைச்சுவடிகளில் தேடி,மன்மதனைக் குறித்து யாகம் செய்தால் மன்மத லேகியம்
பெறலாம் என அறிந்தேன்.முறைப்படி யாகத்தைத் தொடங்கினேன்.கிட்டத்தட்ட ஓராண்டுக்காலம்
கடும் யாகம்;நேற்றுத்தான் மன்மதன் என் முன்
தோன்றி மன்மத லேகியம் அளித்தான்.நீங்கள் சாப்பிட்டு ஏதாவது விபரீதமான விளைவுகள் ஏற்பட்டு
விட்டால்?எனவே பரிட்சை செய்வதற்காக நானே சிறிதளவு உட்கொண்டேன்;இளமைத்தோற்றம் அடைந்தேன்,இதோ
லேகியம் மன்னா!”
மன்னனுக்குக் கோபம் வந்தது;”நமக்கென்று
பெறப்பட்ட லேகியத்தை முனிவர் நமக்கு முன் சாப்பிட்டுப் பயன் பெறுவதா?”அவர் சொன்ன காரணம்
அவனுக்குத் திருப்தியளிக்கவில்லை. எப்படியோ லேகியம் கைக்கு வந்து விட்டது.இனி நம்மை
யார் என்ன செய்ய முடியும்?முட்டாள் முனிவன்! ஒப்பந்தமாவது மண்ணாவது.இதைச் சாப்பிட்டு
இளமையடைவோம்;பின் காவலர்களை அழைத்து இந்த முனிவனைப் பாதாளச் சிறையில் அடைத்து விடலாம்!
”சாப்பிடுங்கள் மன்னா!” முனிவர் சொல்லி
விட்டு அவனையே பார்த்தவாறு இருந்தார்,
மன்னன் ஒரு உருண்டை லேகியத்தைக் கையில்
எடுத்தான்.
வாயில் போட்டு மென்று விழுங்கினான்.
லேகியம் தொண்டைக்குள்
இறங்கியது.
………………………………..
…………………………………..
……………………………………..
மன்னன் அமர்ந்திருந்த
இடத்தில் ஒரு சிறு குழந்தை கையைக் காலை உதைத்த படி அழுதவாறு படுத்திருந்தது!
ஏன் இப்படி நடந்தது?
விடைக்காகக் காத்திருங்கள்
விடைக்காக மட்டுமல்ல!
வேறு விதமான கதை முடிவுக்காகவும்!:):):):)
ஹா... ஹா... முனிவர் அளவுக்குக் கூடுதலான லேகியத்தைக் கொடுத்து மன்னனை வைத்து பரீட்சை பண்ணிட்டாரா... சீக்கிரமா அடுத்த பகுதியைப் போட்றுப்பா.
ReplyDeleteபோட்டு விடுகிறேன்!
Deleteநன்றி கணேஷ்.
அடடே! கதையில் நல்ல ட்விஸ்ட்! சூப்பர்! விடைக்கு காத்திருக்கிறேன்!
ReplyDeleteகாத்திருங்கள்
Deleteநன்றி
லேகியம் வேலை செய்ததா...?
ReplyDeletetm4
செய்து விட்டதே
Deleteநன்றி
என்னா பாஸூ......
ReplyDeleteகடைசியில ரொம்பத்தான் வெயிட் பண்ண வைக்கிறீங்க....
ம்ம்ம்ம் காத்திருக்கிறோம்
என்ன செய்ய/நேரம் கிடைப்பதில்லை நண்பரே
Deleteநன்றி
இதுக்கு அடுத்த முறை வேற வறனுமா..
ReplyDeleteரைட்டு...
வாங்கய்யா!நீங்கல்லாம் வந்தாத்தான் எனக்கு மகிழ்ச்சி!
Deleteநன்றி
ம்ம்ம்.. இன்னும் ஒரு பதிவு காத்திருக்கணுமா....
ReplyDeleteமன்னிக்கவௌம்!வேறு வழியில்லை.
Deleteநன்றி
"நான் சிறிதளவு சாப்பிட்டேன்” என்று முனிவர் சொன்னதை முட்டாள் மன்னன் பொருட்படுத்தாமல் அதிகம் சாப்பிட்டுவிட்டான். அதன் விளைவாகக் குழந்தையானான்.
ReplyDeleteசரியா குட்டன்?
நீங்க சொன்னா சரிதான்
Deleteநன்றி
டப்பாவை காலி செய்துவிட்டதால் மருந்து நிறைய வேலை செய்து விட்டதோ ??
ReplyDeleteஇருக்குமோ!
Deleteநன்றி
குட்டன் எப்பிடி இருக்கீங்க.சுகம்தானே.இப்பத்தான் ரெண்டு பகுதியும் வாசிச்சேன்...சரி இன்னும் இருக்கா ?
ReplyDeleteநலமே சகோ!இன்னும் கொஞ்சம் பாக்கி,
Deleteநன்றி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
ReplyDeleteஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்