Thursday, November 22, 2012

நெக்ரோஃபிலியா தெரியுமா?



நெக்ரோஃபிலியா என்றால் என்ன?

பிணத்துடன் உடலுறவு கொள்வதே நெக்ரோஃபிலியா.

இது தனாடொஃபிலியா என்றும் அழைக்கப்படுகிறது.

1989 இல் ராஸ்மன்,ராஸ்னிக்    இதுபோன்ற  34 ஆட்களைத் தேர்ந்தெ டுத்து,ஒரு ஆய்வு நடத்தினர்.முடிவாக அவர்கள் சொன்னது  அதில் 68 விழுக்காடு பேர் எதிர்ப்புத் தெரிவிக்காத,உதறித்தள்ளாத துணை என்றே அதை நாடியிருக்கிறார்கள்.

இ.பி.கோ. 297 இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இன்றைய செய்தியின்படி ஸ்வீடனில் ஒரு பெண் ஒரு படி மேலே போய், எலும்புக்கூட்டுடன் உடலுறவு கொண்டதற்காக  தண்டிக்கப்பட இருக்கிறாள்.

அவள் வீட்டில் எலும்புக்கூடு,மனித எலும்புகள் இருந்தனவாம்.

அது தவிர’என் நெக்ரோஃபிலியா’,’என் முதல் அனுபவம்’, எனத் தலைப் பிடப்பட்ட குறுந் தகடுகளும், அவள் எலும்புக்கூட்டுடன் கூடும் படங்களும் இருந்தனவாம்!

என்ன கண்ணறாவியோ ஒன்றும் புரியவில்லை!

இவ்வாறு பிணத்துடன் உறவு கொள்வதை அய்யன் வள்ளுவர் எதோடு ஒப்பிடுகிறார் தெரியுமா?

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று-  913

எனவே அதையும் நெக்ரோஃபிலியா என்றே அழைக்கலாமா?!  :)))



4 comments:

  1. வித்தியாசமான தகவல்! நன்றி!

    ReplyDelete
  2. In connection with this there is a similar joke,
    ஓஷோ ஜோக்...

    சேல்ஸ் மேன் ஒருவன் ஒரு சிறிய நகரம் ஒன்றில் ஹோட்டல் ஒன்றுக்கு வந்து தனக்கு ஒரு ரூம் வேண்டும் என்றான்.

    Rest in the blog:

    http://samudrasukhi.blogspot.in/2012/11/77_22.html

    ReplyDelete
  3. புதிய தகவல்..

    ReplyDelete