மன்னன் நெடுந்தோள் கேசரி வர்மன் காத்திருந்தான்.
முனிவரின் வருகைக்காக;
அவர் கொண்டு வரப்போகும் பொருளுக்காக!
முனிவரும் அவனும் சந்தித்துப் பேசி இப்போது
ஓராண்டு ஓடி விட்டது.
குறுந்தோளனாகி விட்டவன் மீண்டும்,இளமையடைந்து,நெடுந்தோளனாகி வாழ்க்கையை அனுபவிக்க ஆசைப்பட்டான்.
முனிவர் தன்னால் அவனுக்கு உதவ முடியும்
என்று சொன்னார்.
அவன் அதற்குப் பரிசாகப் பாதி ராஜ்ஜியம்
தருவதாக வாக்களித்தான்.
வெறும் வாக்கல்ல,அதை எழுதி அரச முத்திரையிட்டு முனிவர்க்கு அளித்தான்.
முனிவர் அதற்கான தவத்தை
மேற்கொள்ளச் சென்று விட்டார்.
ஓராண்டுக்காலம் ஆகி விட்டது.
அந்தப்புரப் பெண்களைப்பார்த்துப் பெருமூச்சு
மட்டுமே விட முடிகிறது இப்போதெல்லாம்.
அதிலும்,அந்தப் புதிய அழகி!அவளுடன் கூட வேண்டும்.அதற்காக முனிவர் வெற்றியுடன் விரைவில்திரும்ப
வேண்டும்.இதே சிந்தனை அவனுக்கு.
காவலாளி வந்து சொன்னான்”மன்னா!ஒரு முனிவர் உங்களைக்காண வந்திருக்கிறார்”
மன்னன் மகிழ்ச்சியின் உச்சியில்;
“வரச்சொல்,வரச்சொல்” கத்தினான்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தான்.
சிறிது நேரத்தில் உள்ளே வந்தவரைப் பார்த்து
ஏமாற்றமடைந்தான்.
வந்தவர் ஒரு முனிவர்தான்;ஆனால் அந்த
முனிவரல்ல
அவர் வயதானவர்.
இவர் இளைஞர்.
அழகிய முகமும்,பரந்த மார்பும் பொலிவும்
கொண்ட இளைஞர்.
மன்னன் கேட்டான்” வாருங்கள் முனிவரே!புதியவராகத்
தெரிகிறீர்.என்ன விஷயமாக எனைப் பார்க்க வந்தீர்கள்”
அவர் பெரிதாக நகைத்தார்.
”என்ன மன்னா என்னைத்தெரியவில்லையா?”
மன்னன் உற்று நோக்கினான்.பார்த்த முகமாகத்
தோன்றியது.
“யாரிவர்”யோசித்தான்.
ஒரு பொறி தட்டியது .
அவரா?.வியந்தான்.
”சர்கு முனிவரே!தாங்களா?”குரல் வித்தியாசமாக
வெளி வந்தது-அளவற்ற வியப்பின் காரணமாக..
அவர் அமர்ந்தார்.
பேச ஆரம்பித்தார்!
(காத்திருங்கள்--மன்னனுடன் சேர்ந்து நீங்களும்!)
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
ReplyDeletehttp://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
ரைட்டு... மன்னனை இளமையாக்குவதற்கு முன் தானே இளமையாகித் திரும்பி விட்டாரா முனிவர்? அடுத்து என்னவோ? காத்திருந்து பாக்கறேன்...
ReplyDeleteஎன்ன ஆகுமோ எனக்கே தெரியவில்லை!
Deleteநன்றி பால கணேஷ்
தொடர்கிறேன் ...
ReplyDeleteஎன்ன ரகசியத்தை கதையில் ஒழித்து வைத்திருக்கிறீர்கள் என்பதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!
ReplyDeleteஎன்ன நடக்குமோ ;பார்க்கலாம்
Deleteநன்றி வே.சு.
நல்லதொரு கற்பனை! தொடருங்கள் காத்திருக்கிறேன்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteஅடுத்தது வரட்டும் விரைவில்!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteதொடர்கிறேன்...
ReplyDeletetm9
முனிவர்அந்த பொருளை அரசனுக்கு கொடுப்பதற்கு பதில் அவரே சாப்பிட்டுவிட்டார் போல...
ReplyDeleteஇருக்குமோ?
Deleteநன்றி கஸாலி
ம்ம்ம்.. அடுத்து என்ன? காத்திருக்கிறோம்...
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteநாய் கிழடு தட்டிப் போய் பல்லு விழுந்த பின்னும் எழும்புத் துண்டு கிடைச்சா விடாதாம் கடிக்க முடியாட்டாலும் நக்கிகிட்டே இருக்குமாம்.
ReplyDeleteமிருகத்துக்காவது சீசன் உண்டு.மனிதனுக்கு எல்லா நாளுமே சீசன்தான்!
Deleteநன்றி ஜெயதேவ்!
காத்திருக்கிறோம்.
ReplyDeleteநன்றி சசிகலா
Deleteஹ ஹ மன்னர் ஏமாறாம இருந்த சரி.. அடுத்த பகுதி வரட்டும் :)
ReplyDeleteஅகலின் வருகையால்,பதிவு பிரகாசமாகிவிட்டது!
Deleteநன்றி அகல்.
இணைத்து விட்டேன்.
ReplyDeleteநன்றி
நன்றி வழக்கறிஞரே!
ReplyDeleteசுவாரஷ்யமா இருக்குது தொடருங்கள்
ReplyDeleteஅடுத்து மொக்கையாத்தான் முடிக்கனும்
அப்படியே ஆகட்டும்!
Deleteநன்றி
காத்திருக்கிறேன்.
ReplyDeleteமனமத லேகியம் தருவீர்கள் என்று காத்திருக்கிறேன்.
ஏமாற்ற மாட்டீர்களே?
கேளுங்கள் கொடுக்கப்படும்!
Deleteநன்றி