”அழகாய் இருந்தாள்;அருகில் சென்றேன்
யார் எனக்கேட்டேன்;வஞ்சி என்றாள்
பழகினோம் நெருங்கி ;காலம் நகர்ந்தது
விட்டு விலகினேன் .மறந்து சென்றேன்
தவறென்ன என்மேல்?சொன்னதைச் செய்தேன்!
வஞ்சி என்றாள் அவள்;வஞ்சித்தேன் நான்! ” (குட்டன்)
இதோ இது பிறக்கக் காரணமான யாப்பருங்கலக்காரிகைப் பாடல்--
“வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் நானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியர் கோ!”
தலைவி தோழியிடம் சொல்கிறாள்”தோழிப்பெண்ணே!அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று தன் ஊரைச் சொன் னான்.
நானும் அவன் வஞ்சிக்க மாட்டேன் எனச் சொல்கிறான்
என்றெண்ணிச் சம்மதித்தேன்.
அந்த வஞ்சி நாட்டுத் தலைவன்,வஞ்சியேன்,வஞ்சியேன்
என்று சொல்லியும் என்னை வஞ்சித்து விட்டான்.(போனவன்
இன்னும் திரும்பி வரவில்லை!”)
இப்பாடலில் அவன் வஞ்சியேன் எனச் சொன்னான்;ஆனால் வஞ்சித்தான் !
என் பாடலில் அவளே வஞ்சி என்று சொல்லி விட்டாள்! எனவே வஞ்சித்தேன்!
தமிழ் வாழ்க!

நல்லாத்தான் யோசிக்கறீங்க! :)))))
ReplyDeleteஅறியாத அருமையான பாடல்
ReplyDeleteபகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
tha.ma 3
ReplyDeleteநல்லதொரு பாடல் + சிந்தனை...
ReplyDeleteநன்றி...
tm5
தமிழ் சொற்கள் விளையாடும் இதுபோன்ற பாடல்களை மேலும் பதிவிட வேண்டுகிறேன். அருமையான பதிவு. வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறப்பு..கவர்ந்தது..
ReplyDeleteநல்லதொரு பகிர்வு.
ReplyDeleteவஞ்சியை வைத்தே வார்த்தை விளையாட்டு !
ReplyDeleteநல்ல தமிழ் விளையாட்டு.
ReplyDeleteரசிக்க முடிந்தது. இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.