வாலிபால்
மைதானம்.
விளையாட்டில்
இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து விட்டு கைத்துண்டால் வியர்வையைத் துடைத்தபடி வரும்
ரமேஷின் பார்வையில் மைதானத்தின் ஒரு இருண்ட மூலையில் அமர்ந் திருக்கும் உருவம் தெரிகிறது.
அருகில்
செல்கிறான்.
“யாரப்பா நீ?இங்க இருட்டில உக்காந்து என்ன பண்ணிட் டிருக்கே?”
ரமேஷின் கேள்வி.
அந்த
உருவம் ,ஒரு ஆண்தான்.கையில் ஒரு சீசாவில் ஏதோ மது வகை.
“ஏண்டா
இங்க உக்காந்து தண்ணியா அடிச்சிட்டிருக்கே? எந்திரிடா?”
"நீ
யாருtடா என்ன விரட்ட?” அவன் கேட்க,ரமேஷ்
அவன் காலரைப் பிடுத்துக் கொத்தாகத் தூக்கி ஒரு அறை விடுகிறான்.
”என்னையா
கேக்குறே நாயே?போலீஸ்காரண்டா”
“அய்யா
என்னை மன்னிச்சிடுங்க.தெரியாமப் பேசிட்டேன்.”
“எங்க
திருடிட்டு வந்து இங்க உக்காந்திருக்கே?”
“அய்யா
இப்ப எங்கயும் திருடலீங்க;”
“அப்போ
நீ திருடன்தான்! நட ஸ்டேசனுக்கு”
”அய்யா
இப்ப ஒண்ணும் செய்யலீங்க.அப்பப்ப ஏதாவது செய்வேன்”
“என்ன
செய்வே?ரோட்டில போற பொம்பளைங்க கிட்ட நகை திருடுவயா?”
“அய்யா
சார்! உங்களுக்குத்தெரியுமா?திருடிட்டு விக்கறதுதான் சார் பேஜாரு!”
”
இதோ பார்.இந்தப் பகுதில இருக்கற அடகுக்கடைக் காரனை யெல்லாம் எனக்குத் தெரியும்.நீ
திருடிட்டு எங்கிட்டக் கொண்டு வா.நல்ல விலைக்கு நான் வித்துத் தரேன்.ரெண்டு பேரும்
பிரிச்சுக்கலாம்.உனக்கும் பிரச்சினை இல்லாமப் பார்த்துக்கறேன்.’
இப்படித்தான்
தொடங்கியது அந்த வியாபார ஒப்பந்தம்.
சில
காலம் நன்றாகவே நடந்தது.
மூன்று
மாதங்களுக்கு முன் அவன்.முருகப்பன்,ஒரு திருட்டில் கைது செய்யப்பட்டான்.
ஜாமீனில்
வெளி வந்து வழிப்பறியை மீண்டும் ஆரம்பித்தான்.
இரண்டு
மூன்று காவல் நிலையங்களில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள்
சொன்ன ஆளின் உருவ வர்ணனை யைக் கேட்ட காவல் அதிகாரிகளுக்கு இது முருகப்பன் வேலையே
என்று தோன்றியது.
அவன்
தன் நாயகியின் வீட்டில் இருக்கும்போது கைது செய்யப்பட்டான்
விசாரணயில்
அவன் தனக்கு ரமேஷுக்கும் உள்ள தொடர்பு பற்றிச் சொல்ல,காவலர் ரமேஷும் கைது
செய்யப்பட்டார்.
என்னத்தைச்
சொல்ல போங்க!
ஓஹோ... அப்படி ஒரு தொடர்பு..!
ReplyDeletetm2
என்னத்தைச் சொல்ல.... :(
ReplyDelete