Showing posts with label காமம். Show all posts
Showing posts with label காமம். Show all posts

Monday, September 30, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-2 -(7)



                                                                      அனிச்சமும்

                                                          அன்னத்தின் தூவியும்



                                                       மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்

                         அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
                         அடிக்கு நெருஞ்சிப் பழம்--     குறள் 1120   (நலம் புனைந்துரைத்தல்)

அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.

மிக மென்மையான அனிச்ச மலரும் அன்னத்தின் சிறகுமே மாதர் அடிக்கு நெருஞ்சி முள் போல் துன்பம் தருவன என்றால் ,அப்பாதங்களின் மென்மையை என்னென்று சொல்வது?!

   “பஞ்சு கொண்டொற்றினும் பைய,பைய என்று
    அஞ்சிப் பின் வாங்கும் மெல்லடி”--சிலப்பதிகாரம்

(மீள் பதிவு,சில திருத்தங்களுடன்!)


Saturday, September 28, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-6

                
                         தேய்ந்து வளர்ந்து மீண்டும் தேய்ந்து...................நிலாவின் நிலை!
                                                          களங்கங்களுடன் !

                                                              அழகிய பெண்
                                                    மாசு மருவற்ற முகப் பொலிவு!
                                             

         ” அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
            மறுவுண்டோ மாதர் முகத்து”---திருக்குறள்-1117

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம்  உள்ளது போல் இந்த மாதர் முகத்தில்களங்கம் உண்டோ ?இல்லையே!

உண்மைதானே!
"நிலவைப் பிடித்துச் சில கறைகள் துடைத்துக் குறு முறுவல் பதித்த முகம்"(நா.பா-குறிஞ்சி மலர்)

"கூன் பிறை நெற்றியென்றால் குறை முகம் இருண்டு போகும்”(நாமக்கல் கவிஞர்)




Friday, September 27, 2013

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்!

                                                                     கூற்றுவன்


                                             பெண்ணின் அழகிய கண்கள்



                                         பெண்மான்


         ”கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
         நோக்கம்இம்  மூன்றும் உடைத்து” -திருக்குறள் -1085

எமனோ?கண்ணோ?பெண்மானோ?இந்த இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்றன் தன்மையும் உடையதாக இருக்கின்றது.

ஆம்!
        பாயும் மான் போல் பார்வை!
       அப்பார்வையே நம்மைக் கொல்லும்!
       அக்கண்கள் எனும் கடலில் வீழ்ந்த பின் கரை ஏறவா முடியும்?!

       

Saturday, December 15, 2012

தீப்பிடிக்கத் தீப்பிடிக்க முத்தம் கொடுடா!



முத்தம் கொடுத்தால் தீப்பிடிக்குமா?

தீப்பிடிக்க முத்தம் கொடுடா  என்றால்?

காமம் என்பது தீ போன்றது.

ஒரு சின்னப் பொறி இருந்தாலும் காமத்தீ பெரிதாக வளர்ந்து எரிக்கத் தொடங்கி விடும்

முத்தம் என்பது ஒரு தீப்பொறி.

அது காமத்தீயைப் பெரிதாக கொழுந்து விட்டு எரியச் செய்து விடும்.

தீயின் இயல்பே அதுதானே!

பாரதி சொல்வான் -
“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
 அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
 வெந்து தணிந்தது காடு-தழல்
 வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?”

சிறு பொறி காட்டையே அழித்து விடும்

சிறு காமப் பொறி  ஒரு முனிவனின் தவத்தையே கலைத்து விடும்!

தீ என்பது ஐந்து பூதங்களில் ஒன்று. தீயாலும் எரிக்க முடியாத ஒன்று என பகவான் எதைச் சொல்கிறான் தெரியுமா?

“நைனம் தஹதி பாவக:”—இந்த ஆத்மாவை நெருப்பு எரிப்பதில்லை.

நெருப்பு என்று ஒன்று கண்டு பிடிக்கப் படாமல் இருந்திருந்தால் எப்படியிருக்கும்?

ஆணுக்கும் பெண்னுக்கும் காம உணர்வே எற்படாமல் போயிருந்தால் எப்படியிருக்கும்?

உலகம் இல்லை!

இப்போது பல நாடுகளிலும் பரபரப்பாகப் பேசப்படுவது,இம்மாதம் 21 ஆம் தேதி உலகம் அழியுமா என்பதுதான்!

எனக்கு ஒன்று புரியவில்லை.

இதில் கவலைப்படுவதற்கோ அச்சப்படுவதற்கோ என்ன இருக்கிறது?

அழியப்போவது உலகம் என்றால் ,எதுவுமே பிழைக்காது என்ற நிலையில் நம்மைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் தனி மனிதன்?

இன்று தேதி 15.

இன்னும் ஆறுநாள்தான்!

அனுபவிக்க வேண்டியது ஏதாவது இருந்தால் அனுபவித்து விடுங்கள்—தீப்பிடிக்க!


Wednesday, November 28, 2012

வஞ்சிக்கப்பட்ட வஞ்சி!!



”அழகாய் இருந்தாள்;அருகில் சென்றேன்
     
         யார் எனக்கேட்டேன்;வஞ்சி என்றாள்

பழகினோம்  நெருங்கி ;காலம் நகர்ந்தது
       
       விட்டு விலகினேன் .மறந்து சென்றேன்

தவறென்ன என்மேல்?சொன்னதைச் செய்தேன்!
    
        வஞ்சி என்றாள் அவள்;வஞ்சித்தேன் நான்! ”   (குட்டன்)


இதோ இது பிறக்கக் காரணமான யாப்பருங்கலக்காரிகைப் பாடல்--

“வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் நானுமவன்
 வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
 வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
 வஞ்சியாய் வஞ்சியர் கோ!”

தலைவி தோழியிடம் சொல்கிறாள்”தோழிப்பெண்ணே!அவன் வஞ்சி நாட்டைச் சேர்ந்தவன் என்று  தன் ஊரைச் சொன் னான்.

நானும் அவன் வஞ்சிக்க மாட்டேன் எனச் சொல்கிறான் 

என்றெண்ணிச் ம்மித்ேன்.

 அ
ந்த வஞ்சி நாட்டுத் தலைவன்,வஞ்சியேன்,வஞ்சியேன் 

என்று சொல்லியும் என்னை வஞ்சித்து விட்டான்.(போனவன் 

இன்னும் திரும்பி வில்லை!”)




இப்பாடலில் அவன் வஞ்சியேன் எனச் சொன்னான்;ஆனால் வஞ்சித்தான் !

என் பாடலில் அவளே வஞ்சி என்று சொல்லி விட்டாள்! எனவே வஞ்சித்தேன்!

தமிழ் வாழ்க!

Saturday, September 22, 2012

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-4

                                                    பாலொடு தேன் கலந்தற்றே

                                               பணிமொழி வாலெயிறு ஊறிய நீர்

                                       பாலொடு தேன் கலந்தற்றே பணிமொழி
                                       வாலெயிறு ஊறிய நீர்--1121 (காதற்சிறப்புரைத்தல்)

மென்மையான மொழிகளைப் பேசும் இவளுடைய  தூய பற்களில் ஊறிய நீர்,பாலுடன்    தேனைக் கலந்தாற் போன்றதாகும்.

ஞாயிற்றுக் கிழமையை மகிழ்ச்சியாகக் கழியுங்கள்! நன்றாகச் சாப்பிடுங்கள்! ஓய்வெடுங்கள்! மனைவி குழந்தைகளை மாலை எங்காவது அழைத்துச் செல்லுங்கள்!...........
have a nice holiday!

Sunday, September 16, 2012

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்-3











                      வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
                      போழப்  படாஅ முயக்கு.-1108(புணர்ச்சி மகிழ்தல்)

                              காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல்,ஒருவரை                                  ஒருவர் விரும்பிய காதலர் இருவர்க்கும் இனிமை உடையதாகும்

Friday, September 14, 2012

காமத்துப்பால்-குறள் விளக்கப்படம்-2



                                                                      அனிச்சமும்

                                                          அன்னத்தின் தூவியும்



                                                       மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்

                         அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
                         அடிக்கு நெருஞ்சிப் பழம்--     குறள் 1120   (நலம் புனைந்துரைத்தல்)

அனிச்ச மலரும்,அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சி முள் போன்றவை.







  


Thursday, September 13, 2012

காமத்துப்பால்-குறள் விளக்கப் படம்



                                                 கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்




                                                    மாதர் படா அ முலைமேல் துகில்     

   கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
   படாஅ முலைமேல் துகில்-----1087(தகையணங்குறுத்தல்)

 மாதர்களின் சாயத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை,மதம் பிடித்த ஆண்யானையின் மேல் இட்ட முகபடாம் போன்றது.

டிஸ்கி:இன்னும் பல விளக்கப்படங்கள் வரும்;காத்திருங்கள்!