பயமாகத்தான்
இருக்கிறது.
நாட்டு
நடப்பைப் பார்க்கையில் பயம் வராமல் இருக்க முடியுமா?
வலைப்பூ
என்று ஒன்று தொடங்கி எதையெல்லாமோ எழுதிக்
கொண்டிருக்கிறேன்.
எனக்குத்
தெரிந்து நான் சர்ச்சைக்குரிய செய்தி எதையும் எழுதியதில்லை.
ஆனாலும்
பயமாகத்தான் இருக்கிறது!
நமக்கே
தெரியாமல் எப்போதாவது ஏதாவது தவறாக எழுதியிருப்போமோ என்று.
இப்போது
ட்விட்டரில் தொடக்கம்.முதலில் சின்மயி அவர்கள் புகாரின் பேரில் இருவர் கைது.
இப்போது
கார்த்தி சிதம்பரம் அவர்கள் புகாரின் பேரில் ஒரு புதுச்சேரித் தொழிலபர் கைது.
இரண்டுக்கும்
காரணம் ட்வீட்டுகள்
நாளையே
இந்தச் சிக்கல் வலைப்பூவிலும் வரலாம்.
இப்போதே
தங்கமணி கேட்க ஆரம்பித்து விட்டாள்”சும்மா வியாபாரத்தைக் கவனிச்சிட்டு இருக்காம இதெல்லாம் எதுக்கு”
எனவே
ஒரு முடிவு செய்திருக்கிறேன்.
இனி
என்ன எழுதினாலும் அவள் படித்து ஓகே செய்த பின்னரே வெளியிடுவது என்று!
இதில்
அவளுக்கும் மிக மிக மகிழ்ச்சி!
இதை
நீங்களும் முயன்று பாருங்களேன்.
குடும்பத்தில்
குதூகலம் பொங்கும்!
……………………………………..
இரு கவுஜகள்
---------------------
இதயமில்லாதவன்
-----------------------------
இதயம் என்று ஒன்று
எனக்கு இருந்தது முன்பு
இன்றில்லை என்னிடம்
எடுத்துக் கொண்டுவிட்டாய் நீ!
பத்திரமாய்ப் பார்த்துக்கொள்
ஏனென்றால் இருப்பது இரண்டு
இன்று உன்னிடம்!
நான் இதயமில்லாதவன்!!
………………………….
நிழல்
--------
காதல் என்பது உன் நிழல் போல
அதைத் துரத்தினால்
விலகி ஓடும்.
அதை விட்டு விலகிப்போ
அது உன்னைத் தொடர்ந்து வரும்!
ம் ...
ReplyDeleteஆனால் நிழல் எப்பொழுதும் கூடவேதான் இருக்கிறது! நல்ல பகிர்வு நண்பரே!
ReplyDeleteபோலீசுக்கு போகிறாள் என்றால் அவன் எந்த அளவுக்கு இம்சை குடுத்திருப்பான்? தங்கமணி பேச்சை கேட்பது என்றும் நல்லது!!
ReplyDeleteநல்ல முடிவு...
ReplyDeleteநிழல் நிஜம் சொல்கிறது....
நல்ல முடிவு கவிதை சிறப்பு.
ReplyDeleteகாதல் குறித்த விளக்கம் அருமை
ReplyDeleteஇரண்டு இதயம் ஒருவரிடம் இருந்தால்
ஆபத்துதான்.அதனால் காதலியிடம் இருந்து
ஒரு இதயத்தை (அவளின்)
வாங்கிவைத்துக் கொள்வதுதான் நல்லது
சுவாரஸ்யமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சிறப்பான கவிதைகள்! வலைப்பூக்களுக்கும் தணிக்கை தேவைதான்! யோசித்து எழுதுவோம்!
ReplyDeleteசுவாரஸ்யமான பதிவு...Just pen what you think...-:)
ReplyDeleteநல்ல முடிவு எடுத்துள்ளீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
tm10