Tuesday, October 30, 2012

தல ரசிகன்!



விஜய் தொலைக்காட்சியில் சனியன்று ஒரு புதிய யதார்த்தக் காட்சி ஒன்று பார்த்தேன். வெங்கட் பிரபு அவர்கள் நடத்தினார். நிகழ்ச்சியின் பெயர் ”கோலிவுட் கிங்’

அன்றுதான் நிகழ்ச்சி ஆரம்பம்.முதல் நிகழ்ச்சியாகத் தல  அஜீத் பற்றிய கேள்விகள் .பங்கு பெற்றவர்கள் அனைவரும் தல ரசிகர்கள்(நானும்தான்-ஹி,ஹி!).நிகழ்ச்சியின் வடிவம் புதுமையாக இருந்தது. 50 பேர் கலந்து கொண்டார்கள் என எண்னுகிறேன்.நான் பார்க்கும் போது 31 பேரே போட்டியில் இருந்தனர்,ஒரு கேள்விக்கு எத்தனை பேர் பதில் சொல்கிறார் களோ,அந்த எண்ணால் அந்தக்கேள்விக்கான தொகையைப்  (1000/2000/3000) பெருக்கி வரும் தொகை பாக்ஸ் ஆஃபிசில் சேர்க்கப்படும். இப்படி பாக்ஸ் ஆஃபிசில் பணம் சேர்ந்து கொண்டே வரும்.

கடைசியில் 4 பேர் போட்டியில் இருந்தனர்.பாக்ஸ் ஆஃபிசில் 4 லட்சத்துக்கு மேல். கடைசிக் கேள்விக்குப் பதில் சொல்பவருக்குப் பரிசு மற்றும் கோலிவுட் கிங் என்ற பட்டம்;அத்துடன்,ஒரு போனஸ் கேள்விக்கும் பதில் சரியாகச் சொன்னால்,பாக்ஸ் ஆஃபிஸ் பணமும்.!

தல ரசிகர்கள் அவர் பற்றிய விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருந்தனர்.ஆனால் கடைசிக் கேள்வியில் வெங்கட் பிரபு போட்டார் ஒரு குண்டு!கேள்வி -அஜீத் தன் பெற்றோர் பெயரில் தொடங்கிய மோகினி மணி பவுண்டேஷன்  எந்த வருடம் தொடங்கப்பட்டது? வழக்கம் போல் 4  தேர்வுகள்; சரியாகச் சொல்லி வெல்ல 25% நிகழ் தகவு! ஆனால் யாருக்கும் அதிர்ஷ்டம் இல்லை!நான்கு பேருமே தவறான விடை கூறினர்.

இதற்கான விடை சொல்லப்படவில்லை.நேயர்களுக்கு குறுஞ்செய்திக் கேள்வியாகக் கொடுக்கப் பட்டது.

இதைப் படிக்கும் தல ரசிகர்களே!உங்களுக்காவது தெரியுமா?

ஒரு திரை நாயகன் பற்றிப் பேசியதால், ஒரு செய்தி நினைவுக்கு வந்தது.திரைப்படங்களில் கதாநாயகன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும்,தன் பெற்றோரின் பணியில் உதவி புரிவான்.இதோ ஒரு நிஜ ஹீரோ!பெயர் மணிகண்டன்.படிப்பு சி.ஏ; வசிப்பது மைலாப்பூர் சென்னை.இப்போது சுந்தரம் பி.பி.ஓ வில் வேலை;இன்றும் காய்கறி கீரை வியாபாரம் செய்யும் தன் பெற்றோருக்கு உதவியாக  காய்கறிகளை வண்டியில் அடுக்கி உதவி புரிந்து விட்டுப் பின்னரே தன் பணிக்குச் செல்கிறார்!


7 comments:

  1. உண்மை heroவை அருமையாக படம்பிடித்து காட்டியிருக்கிறீர்கள்! அருமை!

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி....

    ReplyDelete
  3. கோலிவுட் கிங்கை விட நிஜ ஹீரோ தகவலை மிகவும் ரசித்தேன்! அவருக்கு ஒரு சல்யூட்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நிஜத்தில் மணிகண்டர்களே ஹீரோக்கள்.

    ReplyDelete
  5. பதிவு வேஸ்டுன்னு நினைச்சேன், படிக்காம போயிடலாமான்னு பாத்தேன்......... கடைசி செய்தி அந்த என்னத்தை மாற்றி விட்டது...........

    ReplyDelete
  6. மணிகண்டன் தான் நிஜ ஹீரோ!

    ReplyDelete
  7. கூகுளார்க்கிட்டயும் கேட்டேன் தெரியாது என்னுட்டார்
    கடைசி தகவல் பாராட்டப்பட வேண்டியது

    ReplyDelete