Wednesday, October 3, 2012

கொ.பட்டிப் பயணம்--மறைக்கப்பட்ட உண்மைகள்!



சில நாட்களாகவே மனத்தில் ஒரு எண்ணம்;ஆசை.

பல பிரபல பதிவர்கள் பயணக்கட்டுரை எழுதுவதைப் பார்த்து எழுந்த ஆசை.

ஆனால் பயணப்பதிவு எழுதினால் பிரபலமாகலாம் என்பதெல்லாம் அப்போது எனக்குத் தெரியாது!

இப்போதுதான்,ராஜி,சிவானந்தம் இருவரும் சொல்லும்போதுதான் தெரிகிறது!

ஆசை இருக்குத் தாசில் பண்ண,அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

அவர்களெல்லாம் பயணம் போகிறார்கள்,கையில் கேமிராவை வைத்துக் கொண்டு சுட்டுத் தள்ளுகிறார்கள்;பதிவு போடுகிறார்கள்.

நானோ பயணம் ஏதும் போவதில்லை;போனாலும் ஒரு அரைநாள்,ஒரு நாள் பயணம்தான்.
அதிலும் படம் எடுக்க என்னிடம் கேமிரா கிடையாது.

என் கைபேசியிலும் கேமிரா,நீலப்பல்,பச்சைப்பல் இந்த மாதிரி விசேடங்கள் எதுவும் கிடையாது.

சாதாரண அடிப்படைக்கை பேசி!

என்ன செய்வது?

யோசித்தேன்.

சிறு வயதில் கிராமத்தில் பாட்டியுடன் சென்ற ஒரு பயணம் நினைவுக்கு வந்தது.

எங்கோ ஒரு பட்டிக்குப் போனோம்,வழியில் ஒரு மாந்தோப்பில் நுழைந்தோம் என்பதைத் தவிர வேறெதுவும் நினைவில்லை.

எனவே அந்தக் கருவை மட்டும் எடுத்துக் கொண்டு,கற்பனைச் சரக்கைச் சேர்த்தேன்.
கட்டுரை பிறந்தது.

ஆனால் படங்கள் இன்றி பதிவு சுவாரஸ்யமாக இருக்காதே?!

பதிவில் படம் சேர்க்க வேண்டிய இடங்களை முதலில் தீர்மானித்தேன்.—கிராமத்துச் சாலை, இட்லி ஆறு,மாந்தோப்பு,மாம்பழம்,கட்டைவண்டி ஆகியவை சேர்க்கலாம் என முடிவு செய்தேன்.

இணையத்தில் படங்களைத் தேடிப் பிடித்தேன்.

பதிவு தயார்!


இப்படிக் கற்பனையான ஒரு பயணத்தைப் பற்றி எழுதி ஏமாற்றியதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன்!

நீங்கள் தரும் தண்டனையை ஏற்கத் தயாராக உள்ளேன்!

மைல்சாமியே போற்றி!

12 comments:

  1. ஹா ஹா ஹா பயணக் கட்டுரை அருமை.. மனபாடம் செய்து கொண்டேன்

    ReplyDelete
  2. உங்கள் ஆசையை இது போலவே தொடருங்கள்... நல்லது...

    ReplyDelete
  3. ரெண்டு பதிவு தேத்திய உங்கள் சாமர்த்தியம் யாருக்கும் வராது :)

    ReplyDelete
    Replies
    1. தலைவரே ரெண்டு இல்லை;இதையும் சேர்த்து மூணு!:)))
      நன்றி

      Delete
  4. தொடருங்கள் உங்கள் பயணத்தை,,,

    ReplyDelete
  5. நிஜமும், கற்பனையும் கலந்த பிரயாணப்பதிவை படிக்கத் தயாராகிவிட்டேன். அருமையான பகிர்வு சகோ.

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை டேனியல் சார்

      Delete
  6. நம் வாழ்வில் சுகம் அனுபவிப்பதே 99% கற்பனையில்தான்.

    கற்பனை கலந்து பயணக் கட்டுரை எழுதியதில் தவறே இல்லை குட்டன்.

    நாம் தரும் படைப்பு வாசிப்பவர்களுக்குச் சுவையாக இருந்தால் போதும்.

    உங்கள் பயணக் கட்டுரை மிகவும் சுவையாக இருந்தது. சந்தேகமே வேண்டாம்.

    பாராட்டுகள்.

    ReplyDelete