Tuesday, October 9, 2012

நாசமாய்ப் போகட்டும் நேசமும் பாசமும்!



என்ன அமுதா?புது கைபேசியா?”

ஆமாம் அகிலா.என் வீட்டுக்காரர் வாங்கித் தந்தார்.5000 ருபாய்!நான் வேண்டாமின்னு சொன்னாக் கேக்கவே இல்லை.”

நானும்தான் ஒரு கைபேசி வேணும்னு என் வீட்டுக்காரரைக் கேட்டுக்கிட்டே இருக்கேன். எங்க?அந்தத் துப்பில்லாத மனுஷன் எனக்குக் குடுத்ததெல்லாம் வருசத்துக்கு ஒரு குழந்தை தான்.   வேற எதுக்கும் பிரயோசனமில்லை.

இப்பல்லாம் 2000 ரூபாய்க்குக் கூட நல்ல கைபேசி கிடைக்கிறது அமுதா.எப்படியாவது வாங்கிடு.உன்னைப் பார்த்தா 4 பிள்ள பெத்தவ மாதிரியே இல்லை.நீ மட்டும் ஜீன்ஸ் போட்டுக் கையில கைபேசியோடு போனா உன்னை எல்லாரும் கல்லூரி மாணவின்னே நினைப்பாங்க”

ஆசைத்தீயை மூட்ட ஒரு பொறி விழுந்து விட்டது.

கற்பனை செய்து பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருந்தது.

எப்படியாவது வாங்கி விட வேண்டியதுதான்.

கைக்குழந்தை அழுதது.

எப்பப்பார்த்தாலும் நை நை என்று அழகை.குழந்தையை எடுத்துச் சமாதானப் படுத்தினாள்.

போன வாரம் சந்தித்த அந்த தம்பதி நினைவுக்கு வந்தனர்..

ஒரு முடிவுக்கு வந்தாள்.

குழந்தையுடன் புறப்பட்டுச் சென்றாள்.
 ..............
மதிய உணவுக்கு வீடு வந்த கணவன் மனைவியைப் பார்த்து வியந்தான்!”என் மனைவியா இது?!”

ஜீன்ஸும் டாப்ஸும் அணிந்து கல்லூரி மானவி ப்போல் இளமையாய்,ஸ்டைலாய்!
கையில் செல்போன் வேறு!

என்ன அகிலா,ஏது இதெல்லாம்?”

போன வாரம் சொன்னேன் இல்லீங்க,ஒரு குழந்தையில்லாத தம்பதி நம்ம குழந்தையை கேட்டாங்கன்னு.பாவமா இருந்திச்சு.குழந்தையை குடுத்திட்டேன்.5000ரூபாய் கொடுத்தாங்க. அதில்தான் இதெல்லாம் வாங்கினேன்,நல்லாருக்கா
.......................................
......................................
இது கதையல்ல நிஜம்.

சில நாட்களுக்கு முன் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த ஒரு செய்தியின் அடிப்படை யில் புனையப்பட்டது.(செய்தி-ரூபாய் 5000க்குத் தன் குழந்தையை விற்று செல்போனும் ஜீன்ஸும் வாங்கினாள் ஒரு பெண்)

எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?

உறவு ,பாசம் இவையெல்லாம் பொருளற்றன,தேவையற்றனவாகி விட்டனவா?

அவற்றை விட கைபேச்சியும் ஜீன்ஸும் மதிப்பு மிக்கவை ஆகி விட்டனவா?

இது கலாசார முன்னேற்றமா,கலாசாரச் சீரழிவா?

Quo vadis?

25 comments:

  1. அடபகவானே... இப்படியும் தாய்(?)மார்களா... செய்தித்தாள் ஆதாரம் நீங்கள் சொல்லாவிட்டால் நம்ப கடினமான விஷயம். என்னத்தச் சொல்ல... பெண்கள் போற போக்கை?

    ReplyDelete
  2. இப்படியும் இருப்பாங்களா ? நம்பவே முடியளங்க.

    ReplyDelete
    Replies
    1. நடந்திருக்கிறதே!
      நன்றி

      Delete
  3. இன்றைய பண்பாட்டு சீரழிவை அழகாக படம் பிடித்து காட்டிய விதம் அருமை

    ReplyDelete
    Replies
    1. வருத்தம் தரும் நிகழ்வு
      நன்றி

      Delete
  4. இது கலாச்சார சீரழிவுதான். கடவுள்தான் காப்பாற்றவேண்டும்!

    ReplyDelete
  5. என்ன கொடுமை சரவணா?

    ReplyDelete
    Replies
    1. கொடுமையிலும் கொடுமை
      நன்றி

      Delete
  6. இன்னுமா நாசமா போகணும்...?

    ReplyDelete
  7. அடக் கஷ்டமே
    தங்கள் பதிவின் மூலம்தான் முதலில் அறிவதால்
    பதட்டம் கொஞ்சம் கூடுதலாக உள்ளது
    எங்கே போகிறது உலகம்.பயமாகத்தான் உள்ளது

    ReplyDelete
  8. அய்யோ.... கொடுமை.

    ReplyDelete
  9. ந...ம்....ப....மு...டி...ய...வி...ல்....லை. பிரச்சினையின் மறுபக்கம் என்னவோ? தெரியவில்லை. இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்தான் இது. கதைன்னே நெனச்சேன். ஆனால் நிஜம்னதும் அதிர்ச்சி...!

    ReplyDelete
    Replies
    1. இதற்கு ஏது மறுபக்கம்?
      ஆசை!
      நன்றி

      Delete
  10. அடிங்க் கொய்யால ......
    என்னா வேலை பார்த்திருக்கிறாள் பக்கி மவள்

    ReplyDelete
  11. ஹ்ம்ம், இன்னும் மோசமா நடக்கும்....

    ReplyDelete
    Replies
    1. நடக்கலாம்!
      நன்றி கார்த்திக்

      Delete