Thursday, October 4, 2012

ஒரு முக சோதிடருடன் நேர்காணல்!



வணக்கம்.நீங்க,முக சோதிடம் தெரிந்தவராமே!

ஆம்.

அப்படியென்றால் என்ன?

ரேகை பார்ப்பவர்கள்,கையில் உள்ள ரேகையைப் பார்த்துப் பலன் சொல்வது போல் நான் முகத்தைப் பார்த்து சோதிடம் சொல்வேன்.

அதாவது

முகத்தின் வடிவம்,நிறம்,முகத்தில் உள்ள வாய்,மூக்கு,கண் போன்ற உறுப்புகளின் அமைப்பு எல்லாவற்றுக்கும் இலக்கணம் இருக்கிறது.அந்த அமைப்பைக் கொண்டு அவர்களின் குணங்கள் மட்டுமன்றிஅவர்கள் எதிர்காலத்தையும் சொல்லி விடலாம்.

அப்படியா;என் முகத்தைப் பார்த்துச் சொல்லுங்களேன்.

உங்கள் முகம் வட்டமாக,குஷ்பூ முகம் போல் உள்ளது.உங்கள் மூக்கு சந்தியா மூக்கு போல் உள்ளது.உங்கள் கண் ஸ்ரீவித்யா கண் போல் இருக்கிறது,உங்கள் காது அனுஷ்கா காது போல் இருக்கிறது.

நிறுத்துங்கள்.ஒரு ஆணின் உறுப்புகளை ஒப்பிடுவதற்கு நடிகைகளின் உறுப்புதான் கிடைத்ததா?
யாராவது நடிகரின் உறுப்பைச் சொல்லியிருக்கலாமே!

ஹி,ஹி!எனக்கு நடிகைகளை மிகவும் பிடிக்கும்.அவர்கள்தான் என் சோதிடத்துக்கு இன்ஸ்பிரேசன்!

(என் பக்கத்தில் இருக்கும் இந்த நண்பர் தலை அஞ்சலி தலை மாதிரி இருக்கிறதோ?)

உங்களுக்கு குரு யாராவது இருக்கிறார்களா?

கவுண்டமணிதான்.அவர்தான்  பனமட்டைத் தலையா,பன்னி வாயா இப்படியெல்லம் சொல்வார்.அதிலிருந்துதான் நான் கற்றுக் கொண்டேன்.

இதோ இன்னொரு நண்பர் அவர் பற்றி ஏதாவது சொல்லுங்களேன்.

(மனதுக்குள்)இவனா?நேற்று என்னோடு சண்டை போட்ட சண்டாளனாயிற்றே
(வெளியில்)- இவன் வாய் ஜட்டி மாதிரி இருக்கிறது.இந்த மாதிரி வாய் இருப்பவன் வெளங்காத  பய.இவன் கூட சேந்தா நீங்களும் வெளங்காமப் போயிடுவீங்க! அவ்வளவுதான்,போங்க.

போய்யா டுபாகூர்!

பேட்டி முடிந்தது.

டிஸ்கி:இது ஒரு முழு நகைச்சுவை ,மொக்கைப்பதிவு.

 

17 comments:

  1. செம மொக்கை
    ரசித்துப் படித்தேன்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மறுபடியும் ஒரு கிரேட் மொக்கை...

    ஆனால் உங்க புரெபைல் போட்டோவில் இருக்கும் குட்டன்...

    முகராசிப்படி ரொம்ப நல்லா வருவ....

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் முக சோதிடரா!
      நன்றி கவிஞர்/ஆசிரியரே

      Delete
  3. ம்ம்ம்..மொக்கையோ மொக்கை

    ReplyDelete
  4. ஹி,ஹி!எனக்கு நடிகைகளை மிகவும் பிடிக்கும்.அவர்கள்தான் என் சோதிடத்துக்கு இன்ஸ்பிரேசன்!
    //////////////////////////////////////////////

    கககர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. ஹி,ஹி
      நன்றி சிட்டுக்குருவி

      Delete
  5. Replies
    1. நன்றி தொழிற்களம் குழு!

      Delete
  6. இதைத்தான் பதிவுலகில் மொக்கை என்கிறார்களோ..இப்போது விளங்கிவிட்டது..

    ReplyDelete
  7. இல்லை இது வெறும் நகைச்சுவை இல்லை,கொஞ்சம் நெருங்கிப்போய்ப் பார்த்தால் தெரிகிறது உண்மை,கம்ப்யூட்டர் ஜோசியத்தில் ஆரம்பித்து வாஸ்து வரை நீள்கிறது.

    ReplyDelete
  8. நீங்க போட்டுத் தாக்குங்க...

    ReplyDelete