Monday, October 1, 2012

ராகமாலிகை--நித்தி, ராவணன் முல்லா,இன்ன பிற



இன்று அனைத்து நாடுகள் இசை நாள்.

இசையை விரும்பாதவர்,ரசிக்காதவர் எவரேனும் இருப்பரா!

எல்லா நாட்டு இசையும் ரசிக்கக்கூடியதுதான்.

நமது இசையில் சுரங்கள் ச,ரி,க ,ம,ப,த, நி என்றால்  மேற்கத்திய இசையில் டோ,ரே,மி,ஃபா, சோ,லா,டி.

இசையால் உருகாதவனைப் பற்றி ஷேக்ஸ்பியர் என்ன சொல்கிறார்”

"The man that hath no music in himself,
Nor is not mov'd with concord of sweet sounds,
Is fit for treasons, stratagems, and spoils."-(மெர்ச்சண்ட் ஆஃப் வெனிஸ்)

இன்று உங்கள் மனத்துக்குப் பிடித்த இசையில் சிறிது நேரம் லயித்திருங்கள்!

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< 
 
நித்தியானந்தாவை இராவணனுக்கு ஒப்பிட்டிருக்கிறார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ 

ரவிசங்கர்(வாழும் கலை).சமீபத்தில் சென்னை வந்திருந்த அவரிடம் ஒரு 
பத்திரிகையாளர், நித்தி பற்றி அவரது கருத்தைக் கேட்டபோது அவர்,”ராமர்கள் 
இருக்கும் உலகில் ராவணன்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆசிரம 
நெறிகளைக்கடைப் பிடிப்பதில்லை”என்றார்.

பசுத்தோல் போர்த்திய புலிகளை எப்படி இனம் காண்பது என்ற கேள்விக்கு ”உங்களைப் போன்ற ஊடகக்காரர்களின் கடமை அது “ எனக் கூறினார்.

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<< 

குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் கொடுத்துவிட்டு ஒரு கதை சொல்லவிலயென்றால் எப்படி?

ஒரு நாள் முல்லா உறங்கும் போது வீட்டுக்கு வெளியிலிருந்து,ஏதோ சப்தம் கேட்டது.முல்லா கையில் துப்பாக்கியுடன் வெளியே வந்தார்.தோட்டத்தில் வெண்மையாக எதோ ஆடிக் கொண்டிருந்தது.அதைப் பார்த்து சுட்டு விட்டு முல்லா உறங்கப் போய் விட்டார்.மறுநாள் காலை சென்று பார்த்தால் காயப் போட்டிருந்த அவரது நல்ல சட்டை ஓட்டையாகி இருந்தது.அவர் மனைவி ஒரு நல்ல சட்டையைப் பாழாக்கி விட்டீர்களே என்று கோபிக்க  அவர் சொன்னார் ”நல்ல வேளையாக அந்தச் சட்டையை நான் அணிந்திருக்கவில்லை.  அப்படி அணிந்திருந்தால் நான் குண்டு துளைத்து இறந்து போயிருப்பேன்!”

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

9 comments:

  1. ஹா ஹா ஹா....முல்லா கதை சூப்பர்...

    ReplyDelete
  2. mullaa kathai arumai!!

    thakavalum ...
    arumai!

    ReplyDelete
  3. //நல்ல வேளை அந்தச் சட்டையை நான் அணிந்திருக்கவில்லை.....//

    அட்டகாச சஸ்பென்ஸ் கதை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  4. நன்றி அறுவை மருத்துவன்

    ReplyDelete
  5. ஹா... ஹா... கலக்கல்-கதை... நன்றி...

    ReplyDelete
  6. முல்லா கதையோடு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் தந்த குட்டனுக்கு நன்றி !

    ReplyDelete
  7. நன்றிவரலாற்று சுவடுகள்

    ReplyDelete