மைல்சாமியைக் கும்பிட்ட பின்,அருகில் இருந்த மண்டபத்தில்
அமர்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்தோம்.
கொரிப்பதற்குப் பாட்டி தயார் செய்து கொண்டு வந்திருந்த
சேவு வேறு.
சிறிது நேரம் போனதும் ,பாட்டி புறப்படலாம் என்று
சொன்னதும் எல்லோரும் புறப்பட்டோம்.
கொஞ்சம் தூரம் நடந்ததும்,வரும்போதே எங்களைக் கவர்ந்த
ஒரு மாந்தோப்பு வந்தது.
பாட்டியிடம் உள்ளே சென்று பார்க்கலாமா எனக்
கேட்டோம்.
பாட்டியும் நம்ம பெரியசாமி தோப்புதான் ,வாங்க போகலாம்
என்று சொல்ல,அனைவரும் தோப்புக்குள் நுழைந்தோம்.
அங்கு ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்திருந்த தோப்புக்காரர்”வாங்க
பெரியம்மா, நல்லாருக் கீங்களா”என்று கேட்டு விட்டு,எங்களைப் பார்த்து ”பேரப்பிள்ளைகளா?’
எனக் கேட்டார்.
பாட்டியும்”ஆமாம்;லீவுக்கு வந்திருக்காங்க.பொழுது
போகலைன்னாங்க.அதான்,கொ.பட்டி போயிட்டு வரோம்.தோப்பைச் சுத்திப் பார்க்கணும்னாங்க;அதான்”
என்றார்.
பாக்கட்டும் என்று அவர் சொல்லி விட்டு ஒரு வேலையாளிடம்
”பழனி!அஞ்சாறு அணிக்கீறிப் பழமாப் பறிச்சுப் பிள்ளைகளுக்குக் கொடு” என்றார்
நாங்கள் தோப்பைச் சுற்றிவந்தோம்.அருகில் தொங்கிய
சில மாம்பழங்களைத் திருட்டுத் தனமாகப் பறித்து இட்லி இருந்த பாத்திரத்தில் போட்டுக்
கொண்டோம்.
ஒரு சுற்று சுற்றி வந்த பின் அவரைக் கேட்டேன்”இது
என்ன மாம்பழம்?ருமானியா?” என்று
அவர் சொன்னார்”இல்லை தம்பி.இது பாலாமணி” .
எங்களுக்குச் சிரிப்பு வந்தது.ஏனெனில் என் அக்காவின்
வகுப்பாசிரியை பெயர் அதுதான்!
(பின்னாளில் அவரை மாம்பழம் என்றே குறிப்பிட ஆரம்பித்தோம்!)
பாட்டி அவரிடம் இங்கேயே உக்காந்து சாப்பிட்டுவிட்டுப்
போகிறோம் என்று சொல்லி விட்டு அவரையும் சாப்பிடக் கூப்பிட்டார்.
அவர் மறுக்கவே நாங்கள்,புளி,தயிர் சாதங்களைச் சாப்பிட்டு
விட்டுப் புறப்பட்டோம்.
சாப்பிட்ட பின் நடப்பது சிரமமாக இருந்தது.
அந்தப்பக்கமாக வந்த ஒரு மாட்டு வண்டியில் ஏறிப் போகலாம்
என்று நாங்கள் சொல்ல பாட்டியும் வண்டிக்காரனிடம் பேசினார்.
இதுதான் நாங்கள் ஏறிப்போன மாட்டுவண்டி
நாங்கள் வண்டியில் ஏறி சௌக்கியமாக ஊர் வந்து சேர்ந்தோம்!
டிஸ்கி:இந்தப் பயணம் பற்றிய மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் உண்மைகள் அடுத்த பதிவில்!
படிக்கத் தவறாதீர்கள்!!
டிஸ்கி:இந்தப் பயணம் பற்றிய மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் உண்மைகள் அடுத்த பதிவில்!
படிக்கத் தவறாதீர்கள்!!
முடிவில் சுபம்...
ReplyDelete/// டிஸ்கி:இந்தப் பயணம் பற்றிய மறைக்கப்பட்ட சில திடுக்கிடும் உண்மைகள் அடுத்த பதிவில்! ///
இது வேறயா...? /// படிக்கத் தவறாதீர்கள்!! ///
கண்டிப்பாப் படிங்க.
Deleteநன்றி.
அது மாங்காய்,மாம்பழம் இல்லை. எடுத்த போட்ட்டாக்கள் எல்லாம் சுட்டது தானே.கொக்கரக்கோபட்டி என்று ஒரு ஊரே கிடையாது.
ReplyDeleteஅது பழுக்கும் தருவாயில் உள்ள பழம்;கேமிராவால் சுட்டால்தான் படமே கிடைக்கும்;கூமாபட்டி தெரியுமா?அதன் அருகில்தான் கொக்கரக்கோ பட்டி!
Deleteநன்றி அமுதா கிருஷ்ணாஜி!
அருமை மொடருங்கள்..........
ReplyDeleteநன்றி எஸ்தர் சபி
Deleteஆஹா இந்து அல்லவா உண்மையான பயணக்கட்டுரை.
ReplyDeleteநன்றி முரளிதரன்
Delete