வயது-1
பட்டுப்புடவைகள்;வேட்டி பேண்ட் சட்டைகள்,செண்ட் வாசனை
எல்லோரும் கூடிக் கொண்டாடும் விழா!
என் முதல் ஆண்டு நிறைவு விழா!
எல்லோரும் பாடுவர்
“ஹேப்பி பர்த்டே டு யு
டியர் ரமணி!
ஆனால் என் பெயர் ஸ்ரீனிவாச ராமானுஜ வெங்கடரமணன்!
வயது 10
வகுப்பில் என்று முதலிடம்
உறவும்,குருவும் வியக்கும் முதன்மை
இட்லி,தோசை ,சாம்பார் சட்னி
தயிர்சாதம் சாப்பிடச் சாப்பிடப்
சாப்பாட்டு ராமனாய் ஆகிறேனோ!
வயது 21
ஐஐடியில் பிடெக் முதல் வகுப்பு
இன்ஃபோசிஸ் வேலை
நாளை பறக்கிறேன் பெங்களூருவுக்கு
அப்புறம்....யு,எஸ்! என்றாவது!
வயது
26
நான்கு ஆண்டுகள் ஆயிற்று
யு எஸ் வாசம்.
தேடியும் கிடைக்கவில்லை
மனம்போல் பெண்
ஹூம்!
வயது
30
என் சுயம்பாகம் சாப்பிட்டு
நாக்கு செத்துப் போச்சு!
ஊருக்குப் போகும்போது
அம்மாவிடம் சொல்லி
சமைக்கத் தெரிந்த ஒரு
பெண்ணைக் கூட்டி வந்துடணும்—
கல்யாணம் பண்ணித்தான்!
வயது
45
இரண்டு குழந்தைகள் எனக்கு
அருமையாய்ப் பெயர்வைத்தேன்
கிருஷ்ணசாமி,மகாலக்ஷ்மி என
இன்றவர்கள் க்ரிஸ்,மேகியாகி விட்டார்கள்
கலாசாரம் சம்ப்ரதாயம்—ஊஹூம்!
வயிற்றில் பந்து சுருள்கிறது
அவர்களை எண்னி!
வயது
61
இப்போது நான் தஞ்சையில்
நானும் மனைவியும் மட்டும்
பிள்ளைகள் அமெரிக்காவில்
இந்தியா அவர்களுக்குப் பிடிக்கவில்லை!
வயது
75
இந்தியாவில் ஒரு புண்ணியக்ஷேத்திரம்
பாக்கியில்லை,எல்லாம் போயாச்சு!
நாளெல்லாம் டி.விதான் சீரியல்தான்!
என்ன வாழ்க்கை இது
?
என்ன ஆச்சு என் கனவுகள்?
ரெண்டு கல்யாணம்,ஒரு டைவர்ஸ்
எல்லாம் ஆச்சு பசங்களுக்கு!
என்ன ஆச்சு கலாசாரம்;
என்ன ஆச்சு பாரம்பரியம்
என்ன ஆச்சு குலப் பெருமை
எல்லாம் போச்சு!
போயே போச்சு!
நல்ல தொகுப்பு...
ReplyDeleteஎல்லாம் போயே போச்சு...
tm2
நல்லாச் சொல்லியிருக்கிறீர்கள்
ReplyDeleteசுடும்
நன்றி
Deleteவாழ்க்கை சக்கரத்தை அழகாக சொல்லியுள்ளீர்கள்....
ReplyDeleteகலாச்சாரத்தையும் பண்பாட்டையும்
ReplyDeleteதொலைத்துவிட்டு இப்படித்தான்
தேடியாக வேண்டி இருக்கிறது.
அருமையாக சொன்னீர்கள் குட்டன்.
நன்றி
Deleteதலைப்பும் சொல்லிப்போனவிதமும்
ReplyDeleteமிக மிக அருமை
நீங்கள் சொல்லி முடிப்பதுபோல்
எல்லாம் எங்கோ போய்க் கொண்டுதானிருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நன்றி
Deleteஉங்க பதிவு அப்ரோச் ரொம்ப புடிச்சிருக்கு.
ReplyDeleteநன்றி
Deletesutta unmaikal...
ReplyDeleteநன்றி
Deleteஒரு மனிதனின் வாழ்வில், மனித குளத்தின் வாழ்வையே சொல்லிவிட்டீர்கள்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநன்றி சுப்ரமணியன்
Delete6ல் இருந்து 60 இல்ல 75 வரை இன்றைய சூழலை படம் பிடித்து காட்டிய விதம் அருமை.
ReplyDeleteநீங்கள் கூறியதுபோல பலமாற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்றி
ReplyDelete