Friday, October 19, 2012

காலமும் கன்னியும் காத்திருப்பதில்லை!



”என்னங்க!முன்னால எல்லாம் நிறைய புத்தகம் படிப்பீங்க.இப்பல்லாம் லெண்டிங் லைப்ரரி  பக்கமே போறதில்லை!வீட்டுல இருக்கற நேரமெல்லாம்  பதிவு ,பதிவுன்னு அதுவே  கதியா இருக்கீங்க!ஏன் நேரத்தை இப்படி வேஸ்ட் பண்றீங்க? நேரம் போனா வராதுங்க!”என் சிறந்த பாதி சொன்னாள்.

யோசித்தேன்—நேரத்தின் அருமை பற்றி.

//நேரத்தின் அருமை தெரியவேண்டுமானால்சிலரைச் சந்திக்க வேண்டும்.

ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்க வேண்டும் .சிறு கவனக்குறைவால் படித்த பாடங்களையே மீண்டும் ஓர் ஆண்டு படிக்க வேண்டிய நிர்ப்பந்தம்!மீண்டும் ஓர் ஆண்டுக்குப் பின் தேர்வு!எவ்வளவு சங்கடம்?

ஒரு மாதத்தின் அருமையை உணர வேண்டுமானால்,குறைப் பிரசவமாகக் குழந்தை பெற்ற தாய்மார்களைக் கேட்க வேண்டும்.குறைப்பிரசவக் குழந்தைகளைக் காப்பாற்றுவதில்தான் எவ்வளவு இடர்ப்பாடுகள்?

ஒரு வாரத்தின் அருமையை உணர வாரப்பத்திரிகை ஆசிரியர்களைக்கேட்க வேண்டும்.

ஒரு நாளின் அருமை உணர,தினக்கூலிகள்,அன்றாடங்காய்ச்சிகள்,நடைபாதைக் கடைக் காரர்கள்,தள்ளுவண்டி வியாபாரிகளைக்  கேட்க வேண்டும்.’பந்த்’ என்ற வியாதியால் பாதிக்கப் படுபவர்கள் அவர்கள்.

பத்து நிமிடத்தின் அருமையைக் காதலர்களிடம் கேட்க வேண்டும்.காத்திருப்பின் இடர்களை, வலிகளை அவர்கள் சொல்வார்கள்.

ஒரு நிமிடத்தின் அருமையை உணர இரயிலைக் கோட்டை விட்டவர்களைக் கேளுங்கள்.” இப்பத்தான் வந்தேன்;அதற்குள் இரயில் புறப்பட்டு விட்ட்து” என்று பரிதாபமாகச் சொல்வார்கள்.

ஒரு விநாடியின் அருமை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தைச் சந்தித்தவர்களைக் கேட்க வேண்டும்.

மில்லி செகண்டின் அருமை பற்ரித் தெரிய வேண்டுமானால்,பந்தயங்களில் விநாடியின் நூறில் ஒரு பங்கில் பதக்கம் இழந்தவர்களைக் கேட்க வேண்டும்//

(லேனா தமிழ் வாணன் அவர்களின் சிந்தனை முத்துக்கள்)

எல்லாம் சரிதான்!அதற்காகப் பதிவெழுதவதை நிறுத்தி விட முடியுமா என்ன?!


டிஸ்கி:தலைப்பில் காலம் சரி.கன்னி எதற்கு?ஹி,ஹி,ஒரு கவர்ச்சிக்குத்தான்!

28 comments:

  1. நல்ல நல்ல விஷயங்களை லேனா சொல்லியிருக்கார். அதுவே எங்களை சுண்டி இழுக்கப் போதுமானது குட்டன். தலைப்புல எதுக்கு இப்படி சில்மிஷம்?

    ReplyDelete
  2. நல்ல விடயங்கள்.....
    இன்னும் தாருங்கள் படிக்க ரெடியா இருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிட்டுக்குருவி

      Delete
  3. #ஓர் ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாகப் பெற்றதால் தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனைச் சந்திக்க வேண்டும் .#

    அருமை...இதைவிட சிம்பிளாக காலத்தின் அருமையை உணர்த்த முடியாது

    ReplyDelete
  4. //டிஸ்கி:தலைப்பில் காலம் சரி.கன்னி எதற்கு?ஹி,ஹி,ஒரு கவர்ச்சிக்குத்தான்!// ஸ்....ஸ்ஸ்ஸ் முடியலப்பா சாமி!

    நல்ல பகிர்வு நண்பரே! அருமையான சிந்தனை வரிகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  5. நல்லதொரு பகிர்வு...

    நன்றி... tm6

    ReplyDelete
  6. Replies
    1. :)) நன்றி துரை டேனியல் சார்

      Delete
  7. ஆழமாக சிந்திக்கவேண்டிய கருத்துக்கள்

    ReplyDelete
  8. நேரத்தின் முக்கியம் அனைவரும் உணர வேண்டும்... நல்ல பகிர்வு

    ReplyDelete
  9. சிறப்பான விஷயங்களைத் தான் சொல்லி இருக்கார் லேனா... தங்கள் பகிர்வுக்கு நன்றி குட்டன்.

    ReplyDelete
  10. போங்கு ஆட்டம்...கன்னி still waiting...-:)

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நல்லதுதானே ரெவெரி!
      நன்றி

      Delete
  11. குச்சி மட்டும் இருக்கிறது...
    மிட்டாய் எங்கே குட்டன்....?

    ReplyDelete
    Replies
    1. மிட்டாயை யாரோ சாப்பிட்டு விட்டார்கள்!
      நன்றி

      Delete
  12. பதிவு எழுதுவதன் அருமையை உங்களிடம் தெரிந்து கொள்ளளலாம்.

    ReplyDelete
  13. சிந்தனை முத்துக்களை பதிவாக தந்ததுக்கு நன்றி சகோ தொட்ர்ந்து எழுதுங்கள் நேரம் கிடைக்கும் போது கணனியில் இருக்கும் போது பின்னூட்டம் போடுவேன் குட்டன் கைபேசி வாசகர்கள் கருத்துக்கும் இடம் தருவாரா வலையில் !ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. //குட்டன் கைபேசி வாசகர்கள் கருத்துக்கும் இடம் தருவாரா வலையில் !ம்ம்ம் //
      அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்
      நன்றி

      Delete
  14. \\பத்து நிமிடத்தின் அருமையைக் காதலர்களிடம் கேட்க வேண்டும்.காத்திருப்பின் இடர்களை, வலிகளை அவர்கள் சொல்வார்கள்.

    ஒரு மணி நேரத்தின் அருமையை உணர இரயிலைக் கோட்டை விட்டவர்களைக் கேளுங்கள்.” இப்பத்தான் வந்தேன்;அதற்குள் இரயில் புறப்பட்டு விட்ட்து” என்று பரிதாபமாகச் சொல்வார்கள்.\\ இது ரெண்டோட டைமும் மாத்திப் போட்டிருப்பீங்க போலிருக்கு பத்து நிமிஷத்தில் டிரெயினை விட்டவங்க தான் சாஸ்தி!!

    ReplyDelete
    Replies
    1. ’ஒரு நிமிடத்தின்’ என்பது ’ஒரு மணி நேரத்தின்’ என மாறி விட்டது.திருத்தி விட்டேன்.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

      Delete