Friday, October 12, 2012

ராகுகாலம்,எமகண்டம் எல்லாம் பார்க்க வேண்டுமா?



ராகு காலம்,எமகண்டம் எல்லாம் பார்த்தே செயல் தொடங்கும் பலர் இருக்கிறார்கள்

சில நாட்களுக்கு முன் வங்கிக்குச் சென்றிருந்தேன்.சனிக்கிழமை.மணி காலை 10.00
ஒருவர்,  புதுக்கணக்குத் துவக்க வந்தவர்,தன் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்துப் பார்த்து விட்டு 10.30 க்கு கையொப்பம் இட்டுத்தருகிறேன் என்றார்.ஏன் எனப்  பணியாளர் கேட்டதற்கு 10.30 வரை ராகு காலம் என்றார். கையில்(பையில் )அந்த டைரி இல்லை என்றால் என்ன செய்வார்? பார்க்க வேண்டுமா வேண்டாமா என்ற கேள்வியை விட்டு விட்டு பார்க்க வேண்டும் என எண்ணுபவர்களுக்கான பதிவு இது!

ராகுகாலம் திங்கள் காலை 7.30 முதல் 9.00 வரை.இதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்,அதன் பின் சூத்திரம்  நினைவில் கொள்ள வேண்டும்---”திருநாள்ந்தடியில் வெளியே புகுந்து விளையாடச் செல்வது ஞாயமன்று” இதன் படியான ராகுகால அட்டவணை----
திங்கள்—  7.30-9.00
சனி------ - 9.00-10.30
வெள்ளி    10.30-12.00
புதன்---     12.00-1.30
வியாழன்    1.30-3.00
செவ்வாய்   3.00-4.30
ஞாயிறு—  4.30-6.00

1.30 மணி நேரம் என்பது ஒரு முகூர்த்தம்.மூணே முக்கால் நாழிகை!

எமகண்டம் பார்ப்பது எப்படி?

வியாழன் காலை  எமகண்டம் 6.00-7.30

பின் வரிசையாக பின் நோக்கி வர வேண்டியதுதான்
புதன்---     7.30-9.00
செவ்வாய்  9.00-10.30
திங்கள்--10.30--12
.......
......…
இவ்வாறு.

இவை தவிர குளிகை என ஒன்று இருக்கிறது.அந்த நேரத்தில் செய்யும் காரியங்கள்  வளரும்.எனவே யாராவது இறந்தால் குளிகையில் எடுக்க மாட்டார்கள்!

இதை நான் அடிக்க ஆரம்பிக்கும்போது  மணி 11.30;கொழுத்த ராகு காலம்!

என்ன ஆகப்போகுதோ பதிவு!

:):):):):):)

டிஸ்கி: பின்னூட்டம் 1-நல்ல பயனுள்ள பகிர்வு,வாழ்த்துகள்
            பின்னூட்டம் 2-மூட நம்பிக்கைகளை வளர்க்கும் பகிர்வு!


13 comments:

  1. பார்ப்பதில்லை... ...ம்ஹீம்... நினைப்பதே இல்லை...

    ReplyDelete
  2. நல்ல காரியம் பண்றதுக்கு நேரம் தடையில்லங்க! நல்ல விஷயம் பண்ற நேரம் எப்பவுமே நல்ல நேரம் தான்!

    ReplyDelete
  3. எனக்கு 24 மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு விநாடியும் நல்ல நேரமே என்று கருதுபவன் நான். கடுமையான உழைப்பாளிக்கு எந்நேரமும் நல்ல நேரம்தான். நேரம், ஜோசியம், ஜாதகம் பார்த்து சீரழிந்தவர்கள் கோடான கோடி பேர்.

    ReplyDelete
  4. அசத்தறீங்க குட்டன் ராகுகாலமும் எமகண்ட நேரமும் அறிய எளிமையான வழி.நீங்களே உருவாக்கினதா?யாராவது சொன்னதா?

    ReplyDelete
    Replies
    1. ராகுகாலம் முன்பே இருக்கும் ஃபார்முலா.எமகண்டம் என் வழி!தனி வழி!
      நன்றி

      Delete
  5. பார்க்கிறவர்களுக்கு நிச்சயம் இது
    பயனுள்ள பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

  6. ஒன்றே குலம் ஒருவனே தேவன்-இதை
    நன்றே நினைப்பின் நடப்பதுநலமே!

    ReplyDelete
    Replies
    1. அவன் தாள் சரணம்
      நன்றி ஐயா

      Delete