Monday, December 17, 2012

குசும்பு அதிகம்தான்!



பெரிய மனிதர்கள் மாலை நேரங்களில் கூடிக் களிக்கும் கிளப்.

சிலர் டென்னிஸ் ஆடி விட்டுத்  துண்டால் துடைத்துகொண்டே வந்து அமர்கின்றனர்.

சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

சிலர் கையில் மதுவோடு ஊர் வம்பு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அங்கே ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் இருந்த கைபேசி அடிக்க ஆரம்பித்தது.

ஒருவர் அதை எடுத்து ஒலி பெருக்கியில் போட்டு எல்லோரும் கேட்கும்படிப் பேச ஆரம்பிக்கிறார்.

மறு முனையில் பெண் குரல்”அன்பே!க்ளப்பில்தானே இருக்கீங்க?”

"ஆமாம்” அவர்.

“டார்லிங்! நான் விரும்பிய மாதிரி வைர மாலை இன்று ஜி,ஆர்.டி.யில் பார்த்து விட்டேன். ஐந்து லட்சம்தான்”

"உனக்குப் பிடித்திருந்தால் வாங்கி விடு”

”நன்றி.அப்புறம் இன்னொரு செய்தி.என் நண்பி மங்களம் சொன்னாள்.நாம் பார்த்து ரசித்து வாங்க எண்ணிய வீடு விலைக்கு வந்திருக்கிறதாம்..அவளுக்குத் தெரிந்தவர்கள்தான்.சரி என்று சொல்லி இன்றே அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்து விடட்டுமா?”

” உன் இஷ்டம்!நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?”

“இச்,இச்!நீங்க ரொம்ப இனியவர்.நன்றி”

தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

அனைவரும் அவரையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர் கைபேசியைக்கீழே வைத்து விட்டுக் கேட்கிறார்”இந்தக் கைபேசி யாருடையது என்று யாருக்காவது தெரியுமா?!”


21 comments:

  1. இதைப் படித்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ‘ஊரான் வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே’ என்கிற வழக்குசொல் தான். படித்தேன்.சிரித்தேன்.

    ReplyDelete
  2. செம செம......
    இன்னும் புதுசா தாங்க பாஸ்

    ReplyDelete
  3. இதைத்தான் சூர்யா ஏதோ செல்போன் விளம்பரத்தில செய்வார். லவ்வு முறிக்கும் சீனு.

    ReplyDelete
    Replies
    1. ரெண்டும் சுட்ட பழம்?!
      நன்றி

      Delete
  4. இதை நான் எதிர்பார்க்கவே இல்லை..

    ஹா ஹா ...

    ReplyDelete
  5. அதிமான குசும்புதான்/

    ReplyDelete
  6. உண்மையில் குசும்பு அதிகம் தான்.

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க ஜோக்கு.

    ReplyDelete
  8. ஹா ஹா ஹா கலக்கல்

    ReplyDelete
  9. http://www.youtube.com/watch?v=a-FzgY6jaYc

    ReplyDelete