Showing posts with label குட்டிக்கதை. Show all posts
Showing posts with label குட்டிக்கதை. Show all posts

Friday, July 26, 2013

முத்தச் செலவுக் கணக்கு!



வெளிநாட்டில் பணியில் இருந்த ஒரு கணவன் தன் மனைவிக்கு எழுதினான்

”அன்பே! பொருளாதாரச்  சீர்கேட்டின் காரணமாக இங்கு நிலைமை சரியில்லை.இந்த மாதச் சம்பளம் வரவில்லை.எனவே பணம் அனுப்ப இயலவில்லை.ஆனால் உனக்கு 100 முத்தங்கள் அனுப்பியிருக்கிறேன். நிலைமையைப் புரிந்து அனுசரித்து நடந்து கொள் என் உயிரே”

மனைவி பதில் எழுதினாள்”அன்புக் கணவரே!100 முத்தங்களுக்கும் நூறு நன்றிகள்.நீங்கள் அனுப்பிய முத்தங்களை கீழ்க்கண்டவாறு செலவழித்தேன்….

1)பால்காரன் பால் பாக்கிக்காக இரண்டு முத்தங்களுக்கு ஒப்புக் கொண்டான்!

2)மின் தொடர்பைத் துண்டிக்காமல் இருக்க ஏழு முத்தங்கள் செலவழிக்க வேண்டியதாயிற்று.

3)வீட்டுச் சொந்தக்காரர் தினம் வந்து வாடைகைக்குப் பதிலாக இரண்டு முத்தம் பெற்றுச் செல்கிறார்

4)மளிகைக்கடைக்காரரோ முத்தம் போதாது என்கிறார்!என்ன செய்ய?

5)இதர செலவுகள் 40 முத்தங்கள்.

கவலை வேண்டாம்.

மீதி இருக்கும் 35 முத்தங்களை வைத்து இந்த மாதத்தை ஓட்டி விட முடியும்!

அடுத்த மாதம் எப்படி?

அன்பு மனைவி

(முக நூலில் படித்தது)



Monday, December 17, 2012

குசும்பு அதிகம்தான்!



பெரிய மனிதர்கள் மாலை நேரங்களில் கூடிக் களிக்கும் கிளப்.

சிலர் டென்னிஸ் ஆடி விட்டுத்  துண்டால் துடைத்துகொண்டே வந்து அமர்கின்றனர்.

சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.

சிலர் கையில் மதுவோடு ஊர் வம்பு பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது அங்கே ஓரமாக இருந்த ஒரு பெஞ்சில் இருந்த கைபேசி அடிக்க ஆரம்பித்தது.

ஒருவர் அதை எடுத்து ஒலி பெருக்கியில் போட்டு எல்லோரும் கேட்கும்படிப் பேச ஆரம்பிக்கிறார்.

மறு முனையில் பெண் குரல்”அன்பே!க்ளப்பில்தானே இருக்கீங்க?”

"ஆமாம்” அவர்.

“டார்லிங்! நான் விரும்பிய மாதிரி வைர மாலை இன்று ஜி,ஆர்.டி.யில் பார்த்து விட்டேன். ஐந்து லட்சம்தான்”

"உனக்குப் பிடித்திருந்தால் வாங்கி விடு”

”நன்றி.அப்புறம் இன்னொரு செய்தி.என் நண்பி மங்களம் சொன்னாள்.நாம் பார்த்து ரசித்து வாங்க எண்ணிய வீடு விலைக்கு வந்திருக்கிறதாம்..அவளுக்குத் தெரிந்தவர்கள்தான்.சரி என்று சொல்லி இன்றே அட்வான்ஸ் ஒரு லட்சம் கொடுத்து விடட்டுமா?”

” உன் இஷ்டம்!நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்?”

“இச்,இச்!நீங்க ரொம்ப இனியவர்.நன்றி”

தொடர்பு துண்டிக்கப்படுகிறது.

அனைவரும் அவரையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர் கைபேசியைக்கீழே வைத்து விட்டுக் கேட்கிறார்”இந்தக் கைபேசி யாருடையது என்று யாருக்காவது தெரியுமா?!”