மனிதர்களுக்குக் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்,மனிதர்களை அழிவுக்கு
இட்டுச்செல்லும் மிக முக்கியமானவை ‘நான் ’,’எனது’.
வடமொழியில் நான் என்பதை அகங்காரம் என்றும் எனது என்பதை
மமகாரம் என்றும் குறிப்பர்.
ஒரு குட்டிக் கதை.ஒரு நாட்டில் சிறந்த ஞானி ஒருவர்
இருந்தார் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவரிடம் ஆசி பெற்றுப் பலன் அடைந்தனர்.
அவரைப்பற்றி அறிந்த அந்நாட்டு மன்னன் ஒரு நாள் அவரைக்
காணத் தன் பரிவாரங்கள் புடை சூழ ஆர்ப்பாட்டமாக வந்தான்.அவன் ஞானியின் குடிலுக்குச்
சிறிது தொலைவில் வந்தபோது, அவனைப் பார்த்த அவர், குடிலுக்குள் சென்று கதவை அடைத்துக்
கொண்டார்.மன்னன் மிகவும் கோபம டைந்தான்.
குடிலின்
வாசலில் நின்று சத்தம் போட்டுச் சொன்னான்”நான் இந்த நாட்டு மன்னன் வந்திருக்கிறேன்;வெளியே
வந்து ஆசி வழங்குங்கள்.”
பதில் இல்லை.
மீண்டும் சொன்னான்”நான் திரிபுவனச் சக்ரவர்த்தி கேசரிவர்மன்
வந்திருக்கிறேன்.வெளியே வந்து அருள் செய்யுங்கள்”
உள்ளிருந்து குரல் வந்தது”நான் செத்த பின் வா”
மன்னன் திகைத்தான்.என்ன இவ்வாறு சொல்கிறார்?அவர்
செத்த பின் எவ்வாறு ஆசி வழங்குவார்?
அமைச்சரைப் பார்த்தான்.
அந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்.நன்மை
தீமையை மன்னனுக்கு எடுத்துச் சொல்பவர்களாக இருந்தனர்
அமைச்சர் சொன்னார்.”நீங்க நான் ,நான் என்று உங்களை
பற்றிப் பெருமை யாகச் சொன்னீர்களல்லவா?அந்த நான் எனும் அகந்தை அகன்ற பின் வா என்று
சொல்கிறார்”
மன்னன் தெளிவடைந்தான்.
நான் எனது என்ற எண்ணம் நிறைந்திருந்தால் மனம் குழம்பித்தான்
இருக்கும்.
நீங்கள் உங்கள் காரில் ஏறி அமர்கிறீர்கள்.சாரதியிடம்
சொல்கிறீர்கள்,
”சாரதி,காரை தெரு முனையில் நிறுத்து”என்று.
அப்படித்தானே சொல்வீர்கள்?
என் காரைத் தெருமுனையில் நிறுத்து என்று சொல்வீர்களா?
மாட்டீர்கள்தானே?
ஏனெனில் அதற்கு அவசியமில்லை.
ஆனால் குருட்சேத்திரப் போரில் அர்ஜுனனுக்கு இந்த
மமகார உணர்வு ஏற்படுகிறது
சாரதியான கண்ணனைப் பார்த்து,”இரண்டு சேனைகளுக்கும்
நடுவே என் தேரைக் கொண்டு போய் நிறுத்து” என்று சொல்கிறான்.
”சேனையோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத’”
இது அவனது அகங்காரத்தை,மமகாரத்தைக் காட்டவில்லையா?
கீதை வகுப்பில் ஸ்வாமிஜியிடம் நான் இதே கேள்வியைக்
கேட்டேன்.சரியான பதில் கிடைக்கைவில்லை.
அர்ஜுனனுக்குக் குழப்பம் ஏற்பட்டதே இந்த அகந்தையால்தான்
என நான் எண்ணுகிறேன்.
நான்,எனது ரதம்,என் உறவினர்,நான் கொல்லப்போகிறேன்—நான்,நான்,நான்.
முடிவு குழப்பம்.
எனவே இயன்றவரை இந்த நான்,எனது என்னும் செருக்கை விட்டொழிக்க
வேண்டும்
வள்ளுவர் சொல்கிறார்-
”பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு”---347-
யான்,எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக்
கொண்டு விடாதவரை,துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.
ReplyDeleteமிகவும் அருமை! எடுத்துக்காட்டிய கதை மிகமிக அருமை!
ஐயா!தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கின்றன
Deleteநன்றி
அழகா சொல்லியிருக்கீங்க :-)
ReplyDeleteநன்றி ஆமினா அவர்களே
Deleteசூப்பர்....நன்று...அருமை...அற்புதம்...ஆஹா.....
ReplyDeleteநன்றி ஹாஜா
Deleteஅருமை... இது போல் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
அருமையான பதிவு...
ReplyDeleteஉங்கள் பெயர் பெரும்பாலும் பதிவுலக கும்மிகளில் பின்னூட்டங்களிலும்,கூகிள் கூட்டணிக் களங்களிலும்(கூகிள் ப்ளஸ்) பார்க்கக் கிடைக்கும்.இவ்வித நேரக் கொல்லி கும்மிகளில் எப்போதும் ஆர்வமற்றிருப்பதால், பெரும்பாலும் கடந்தே சென்றிருக்கிறேன்.
இப்பதிவு போன்றவை எவரையும் நிறுத்திப் படிக்க வைப்பவை.
வாழ்த்துகள், தொடர..நன்றி மீண்டும்.
நன்றி இராஜசேகர்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிஅறிவன் அவர்களே!ஒரு விளக்கம்.நான் கூகிள்+ பக்கமே போவதில்லை.எனவே இதே பெயரில் வேறு ஒருவர் இருக்கலாமோ என ஐயம் எழுகிறது.
ReplyDeleteநன்றி
எல்லோருக்கும் தேவையான தகவல் நண்பரே...
ReplyDeleteஎனது தளத்தில் என் காதல் க(வி)தை... 03
நன்றி யயாதின்
Delete//”நான் செத்த பின் வா”// தெளிவான சுவாரசியமான பதிவு
ReplyDeleteகுட்டன் புகழ் ஓங்குக :-)
வாழ்த்துக்கு நன்றி சீனு
Deleteஆணவத்தை விட்டோழிக்கவேண்டியதன் அவசியத்தை விளக்கியவிதம் அருமை!
ReplyDeleteநன்றி கூடல் பாலா
Deleteயார் யாருகு அளவோ போட்டுக்கொள்ளலாம்...எல்லோரும் உணரவேண்டிய பதிவு !
ReplyDeleteநன்றி ஹேமா!
Deleteஅர்ஜுனனுக்கு பகவத் கீதையில் சொல்லப் பட்ட விஷயங்கள் ஏற்கனவே தெரிந்ததுதான். ஆன போதிலும் உலக மக்களின் நன்மைக்காக அவனை மாயையின் பிடியில் சிக்க வைத்து அவனுக்கு சந்தேகங்கள் வருமாறு செய்து, கீதையைப் போதிக்கிறார், பின்னர் அது அனைவருக்கும் பயன்படுகிறது. அவர்கள் இருவரும், ஒரு நாடக மேடையில் இரண்டு கைதேர்ந்த நடிகர்களின் வேலையை அங்கே செய்கிறார்கள், நடிகர்களின் நோக்கம், ஒரு கதை/ செய்தி பார்ப்பவர்களுக்குப் போய்ச் சேர வேண்டுமென்பதே. இங்கே நடந்தது அதுதான். இன்னொரு உதாரணம், பசுவில் பால் கறந்து மற்றவர்களுக்கு போய்ச் சேர முதலில் மடியில் பால் சுரக்க வேண்டும். அதற்க்கு கன்றுக் குட்டி பாலைக் குடிக்க வேண்டும். வேதங்கள் தான் பசு, அந்த கன்றுக் குட்டி தான் அர்ஜுனன், பால் கரப்பவன் பரந்தாமன். அது தற்போது நாம் பருகுவதற்கு தயாராக உள்ளது.
ReplyDeletehttp://www.asitis.com/1/21-22.html
[மே என்ற வார்த்தைக்கு தாங்கள் கொடுத்துள்ள விளக்கம் சரிதானா என்று தெரியவில்லை நண்பரே!! மன்னிக்கவும்.]
விளக்கமான கருத்துக்கு நன்றி.குழப்பத்தில்தான் கேள்வி பிறக்கும்.கேள்வி பிறந்தால்தான் பதில் கிடைக்கும் தெளிவு பிறக்கும்--மனித குலத்துக்கும்.!
Delete“அச்யுத!என்னுடைய ரதத்தை இரண்டு படைக்ளுக்கும் நடுவில் நிறுத்துங்கள்” இது கீதா பிரஸ் கோரக்பூர் பிரசுரம் செய்த கீதை உரையிலிருந்து!மே-என்னுடைய என்றும் பதப் பொருள் சொல்லப்பட்டிருக்கிறது!’என்னுடைய’ ரதம் என்று ஏன் சொல்ல வேண்டும் ?
நன்றி
என்னுடையது என்ற பொருள் சரிதான், ஆனால் அவன் அப்படிச் சொன்னது அகந்தையால் தான் என்ற விளைக்கத்தில் தான் பிச்சினை, வைணவ ஆச்சார்யார்கள் அவ்வாறு அதற்க்கு அர்த்தம் எதுவும் தரவில்லை!!
Deleteஎந்த உரையிலும் இல்லை என்பது உண்மைதான்;இது என்னுடைய சந்தேகம் .ரதத்தை என்று சொன்னால் போதாதா?என் ரதத்தை என்று ஏன் சொல்ல வேண்டும்?
Deleteஎன் கேள்விக்கு ஸ்வாமிஜி சொன்னார் அது சௌலப்யத்தைக் குறிக்கிறது அவ்வளவே என்று!
நன்றி.ஜயதேவ் தாஸ்
ReplyDeleteஅந்தக்காலத்தில் அமைச்சர்கள் அறிவாளிகளாக இருந்தனர்
//////////////////////
ஹா ஹா ஹா இந்தக் காலத்துல அமைச்சர்கள் அறிவாளிகளா இல்லையா குட்டரே...?
இந்த உலகைப் படைத்துப் பரிபாளிக்கும் அந்த ஏக இறைவன் கூட அவனைப் பற்றி பெருமையாகச் சொல்லும் போது நாம் .. நாங்கள் என்றே கூறுகிறான்
ReplyDeleteஅற்ப மனிதர்கள் எங்களுக்குள் எதற்கு இந்த அகம்பாவம்
நல்ல கதையுடன் கூடிய கருத்தள்ள பதிவு.
ReplyDeleteகருத்துகள் நிறைந்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...
ReplyDeleteஅருமையான பதிவு நன்றீ
ReplyDelete