வாசல் பெருக்கினேன்,நீர் தெளித்தேன்
கோலமிட்டேன்,செம்மண் கரையுமிட்டேன்
தேங்காய் பழம்
,பூவெல்லாம் வாங்கி வைத்தேன்
காத்திருந்தேன் ஊர்வலம் வரும் சாமிக்காக!
அதோ வருகிறாள் பார் அவிசாரி அலமேலு
இவளுக்கென்ன சாமி பூதம் என்றோர் எண்ணம்
!
பட்டு வேட்டி,பட்டுப் புடவையில்
பவ்யமாய்க் காத்திருக்கும்
பரந்தாமன் தம்பதி மேல்
ஒரு பொறாமை!
பக்கத்து வீட்டுப் பார்வதியின் விலகிய
முந்தானையில்
சிக்கி மனதில் ஒரு மயக்கம்!
கோடி வீட்டுக் குமரியும் கோதண்டத்தின்
மகனும்
கூட்டத்தின் நடுவில் உரசுவது என்னைச்
சூடாக்க,
காத்திருந்தேன் சாமிக்காய்,
வந்தார் சாமிஅப்போது!
நீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தமாக்கி
க்
கோலமிட்ட வாசல் சுத்தம்!
சாமி வந்து நிற்கலாம்.
அழுக்கான எண்ணங்களைத்
தேக்கி வைத்த என்னுள்ளமோ அசுத்தம்!
சாமி வந்து நிற்குமோ?
டிஸ்கி: போன இடுகை(கவிதை)க்குப் பின்னூட்டத்தில் ரமணி சார் தொடர வாழ்த்துக்கள் என்றார்.தொடர்ந்து விட்டேன்,தைரியமாக! புலவர் ஐயாவும் பாராட்டி விட்டார்! இனி எழுதிக் குவிக்க வேண்டியதுதான்!----(மாட்னீங்க!!)
இது அப்போது ஏற்பட்ட அழுக்கு அல்ல... சுத்தம் செய்ய நாளாகும்...!
ReplyDeleteமனம் வெளுக்க வழியேயில்லை எங்கள் முத்துமாரியம்மா!
Deleteநன்றி தனபாலன் சார்
அருமை....
ReplyDeleteநன்றி ஹாஜா மைதீன்
Deleteஅகத்தழகே அழ்கு என்பதை
ReplyDeleteமிக நேர்த்தியாகச் சொல்லிப்போகும் கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
கருத்துக்கு நன்றி ஐயா
Deletetha.ma 5
ReplyDeleteமீண்டும் நன்றி
Deleteதெரு சுத்தமானது.... மனது அழுக்கானது...
ReplyDeleteசரிதான்... நல்ல கவிதை....
நன்ரி வெங்கட் நாகராஜ்
Deleteஒரு கேள்விய கேட்டுட்டீங்க. அதுக்கு பதிலையும் கவிதையிலேயே சொல்லிடுங்க
ReplyDeleteஎப்ப மனம் வெளுத்து எப்ப சாமி வருவது!
Deleteநன்றி T.N.MURALIDHARAN
எப்போழுதோ படித்த கவிதை ஒன்று ஞாபகம் வருகிறது. "எதிர்வீட்டுப்பெண் வாசல் கூட்டி கோலமிட்டாள்.வாசல் சுத்தமாச்சு,மனசு குப்பையாச்சு"
ReplyDeleteதங்களது கவிதையை படித்தவுடன் இது ஞாபகம் வருகிறது.
நானும் படித்திருக்கிறேன்.அங்கு அவளைப் பார்த்ததால் மனம் அழுக்காச்சு.இஙோ மனத்தில் அழுக்கு தவிர வேறில்லையே!
Deleteநன்றி விமலன்
ஹி ஹி ..பாக்கியராஜ் படத்துல வார சீன் மாதிரி ஒரு பீலிங்...
ReplyDeleteநல்லா இருக்குது பாஸ்
த. ம. 8
ஓஹோ!
Deleteநன்றி சிட்டுக்குருவி
அருமை.
ReplyDeleteஅட சூப்பரா இருக்கே
ReplyDeleteரசிச்சேன்.............
நன்றி எஸ்தர் சபி
Deleteநானும் இப்பிடி எழுதிப் பாக்கணும்....ஆனால் வாராதே குட்டன் !
ReplyDeleteஉங்களுக்கு வராது என்றால் யாருக்கு வரும்?!
Deleteநன்றி ஹேமாஜி!
அன்பின் குட்டன் - கவிதை அருமை - தொடரலாம் - முதல் பத்தியினில் ஒரு கதாநாயகியினை அறிமுகப் படுத்துகிறீர்கள் - எல்லாப் பத்திகளூமே அவ்ளின் குணங்களையே கூறி வரும் போது நான்காம் பத்தி மட்டும் சற்றே உதைக்கிறதே - நல்வாழ்த்துகள் குட்டன் - நட்புடன் சீனா
ReplyDeleteபின் தொடர்பதற்காக
ReplyDeleteநன்றி இராஜசேகரன் ஐயா
ReplyDeleteவாசல் தெளிப்பது ,கோலம் போடுவது எல்லாம் பெண்ணின் வேலை எனப் பார்க்காமல் செய்வது ஒரு ஆண் எனப் பாருங்கள்.ஐயா!
ReplyDeleteநன்றி
நீர் தெளித்துப் பெருக்கிச் சுத்தமாக்கி க்
கோலமிட்ட வாசல் சுத்தம்!
சாமி வந்து நிற்கலாம்.
அழுக்கான எண்ணங்களைத்
தேக்கி வைத்த என்னுள்ளமோ அசுத்தம்!
சாமி வந்து நிற்குமோ?//
கருத்துள்ள கவிதைக் கண்டேன்-நல்
கற்கண்டின் சுவையே கொண்டேன்
பொருத்தமாய் பொருளும் தந்தீர்-தூய
புலவராய்ப் போற்ற வந்தீர்